ஒரே கிராமத்தினர்
ரஷ்யச்சிறுகதை வாலென்டின் காத்தயேவ் தமிழில் பாஸ்கரன் “பெண்கள் என்னைக் காதலிக்கின்றனர்” என்று சிலிர்த்த தலை மயிரையுடைய கட்டையான அழகிய சிப்பாய் ஒருவன் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் தனது சகாக்களிடம் கூறினான். அவன் அந்தக் குடிசையின் நடுவில் நின்று கொண்டிருந்தான். அவனைத் தவிர அங்கே மூன்று நோயாளிகள் இருந்தனர். மக்கிப்போன வைக்கோல் நாரினால் கட்டப்பட்ட அகன்ற அட்டைகளில் அவர்கள் படுத்திருந்தார்கள். அதில் இருவர் அசிரத்தையாக கூரையைப் பார்த்தவண்ணமிருந்தனர். மூன்றாவது ஆசாமி மூலையில் படுத்தவாறே கிழிந்த துணிகளினால் பெண்ணைப் போல் சுற்றிக் …









