தந்தையும் தாயும்.
புகழ்பெற்ற இந்திய ஆங்கில எழுத்தாளரான வேத் மேத்தா எழுதிய Mamaji, Daddyji என்ற இரண்டு புத்தகங்களை வாசித்தேன். இது அவரது சுயசரிதை. சாந்தி மேத்தா மற்றும் அமோலக் ராம் மேத்தா என்ற அவரது தாய் தந்தை இருவரைப் பற்றிய வாழ்க்கை சரித்திரமாக எழுதப்பட்டிருக்கிறது. வேத் மேத்தா 1934 லாகூரில் பிறந்தவர். பஞ்சாபி. மூன்று வயதில் ஏற்பட்ட மூளைக்காய்ச்சல் காரணமாகக் கண் பார்வையை இழந்தவர். ஆனாலும் மனம் தளராமல் பம்பாயில் உள்ள பார்வையற்றோருக்கான தாதர் பள்ளியில் சேர்ந்து படித்தார். …