இலக்கியம்

அலர் மரங்களும் ஆலாப்பறவைகளும்

தனிமையின் துயரத்தையும் , பிரிவின் ஏக்கத்தையும், காதலின்வலியையும் , பொருந்திக் கொள்ளமுடியாத தினசரி வாழ்வின் மீதான சலிப்பையும் பேசுபவை உமா வரதராஜனின் சிறுகதைகள். பேருந்து நிலையத்தின் பரபரப்பிற்கு ஊடாகத் திடீரெனக் கேட்கும் புல்லாங்குழல் நம்மை ஈர்ப்பது போல இக்கதைகள் வாழ்வின் நெருக்கடிகளுக்கு இடையே அன்பின் பாடலை ஒலிக்கின்றன.. உமா வரதராஜனின் அரசனின் வருகை சிறுகதை எனக்கு மிகவும் பிடித்தமானது. ஈழச்சிறுகதை வரலாற்றில் அதற்குத் தனியிடம் உண்டு. அவரது சிறுகதைகள் சிலவற்றைத் தனியே வாசித்திருந்த போதும் மொத்தமாக அவரது 16 …

அலர் மரங்களும் ஆலாப்பறவைகளும் Read More »

எழுத்தாளனின் உலகம்

இவை புகழ்பெற்ற எழுத்தாளர்கள் குறித்த ஆவணப்படங்கள் (சில வீடியோவில் சப்டைட்டில் வசதி உள்ளது. ) Profile of a Writer: Jorge Luis Borges https://youtu.be/fAM2NJnv3Dk?list=PLE1jl6VUbLP4o9K0fxXEcodc_zVxeMPi3 Lermontov. Biographical Documentary Film https://youtu.be/eis530WT7v0 The Childhood of Maxim Gorky https://youtu.be/ADcqytnvZls Virginia Woolf Documentary https://youtu.be/2Hnlsh8WyPE?list=PLE1jl6VUbLP4o9K0fxXEcodc_zVxeMPi3 Documentary on Ernest Hemingway https://youtu.be/mv5ewz4YE1g Ray Bradbury – Story of a Writer https://youtu.be/XESDRP82png Biography: John Steinbeck https://youtu.be/7i2CDqBo9VU George Orwell: A Life …

எழுத்தாளனின் உலகம் Read More »

நட்சத்திரங்களுக்கு இடையே

அந்த்வான் து செந்த் எக்சுபெரி மிகச் சிறந்த பிரெஞ்சு எழுத்தாளர். இவர் எழுதிய குட்டி இளவரசன் எனக்கு மிகவும் பிடித்த நாவல், பலமுறை வாசித்திருக்கிறேன். அந்த நாவலின் ஊற்றுக்கண்ணைப் போன்றுள்ளது காற்று, மணல், நட்சத்திரங்கள் என்ற எக்சுபெரியின் விமானப்பயணம் பற்றிய நூல். சமீபத்தில் க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ள இப்புத்தகம் குட்டிஇளவரசனை விடவும் சிறப்பானது. வெ. ஸ்ரீராம் வெகுஅற்புதமாக மொழியாக்கம் செய்துள்ளார். பிரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழிற்கு மொழியாக்கம் செய்துவருபவர் வெ. ஸ்ரீராம். இவரது சேவையைப் பாராட்டி ஃப்ரான்ஸ் அரசு …

நட்சத்திரங்களுக்கு இடையே Read More »

எஸ்.வி.ஆர் எனும் மகத்தான ஆளுமை

தோழர் எஸ்.வி. ராஜதுரை  உலக இலக்கியம் சார்ந்து எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள கல் தெய்வம், சாட்சி சொல்ல ஒரு மரம், பார்வையிழத்தலும் பார்த்தலும், ஆகிய மூன்று புத்தகங்களும் மிக முக்கியமானவை. அவற்றை சமீபமாக ஒருசேர வாசித்தேன்.  அற்புதமான கட்டுரைகள். தமிழ் அறிவுலகத்திற்கு எஸ்.வி.ஆர் செய்துள்ள பங்களிப்பு அளப்பரியது. ரஷ்யப் புரட்சி : இலக்கியச் சாட்சியம், அந்நியமாதல். பெரியார் : ஆகஸ்ட் 15 உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். எஸ்.வி.ஆரின் இலக்கியவாசிப்புப் பிரமிப்பூட்டக்கூடியது. சர்வதேச இலக்கியங்களைத் …

எஸ்.வி.ஆர் எனும் மகத்தான ஆளுமை Read More »

கோ யுன்

உலகக் கவிதையரங்கில் கொரியக்கவிஞர் கோ யுன் (Ko Un) மிகப்பெரும் கவியாக கொண்டாடப்படுகிறார். இரண்டு முறை இவரது பெயர் நோபல் பரிசிற்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அரசு எதிர்ப்பின் காரணமாக சிறையில் அடைக்கபட்ட கோ யுன் இருட்டறையில் வாழ்ந்த போது அவருக்குக்கிருந்த ஒரே துணை சூரிய வெளிச்சம் மட்டுமே. துளை வழியாக உள்ளே வரும் அந்த வெளிச்சத்தை கடலாகவே அவர் கருதினார். இதுவரை 155 கவிதைத் தொகுதிகள் வெளியிட்டிருக்கிறார்.  கவிதையுலகில் இது பெரும்சாதனை. பதினைந்து மொழிகளில் இவரது கவிதைகள் …

கோ யுன் Read More »

காமரூபத்தில் உலவும் நிழல்கள்

ஞானபீடப்பரிசு பெற்ற அஸ்ஸாமிய எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி. இவரது தென்காமரூபத்தின் கதை என்ற நாவல் 2011ல் வெளியாகியுள்ளது. சாகித்திய அகாதமி இதனை வெளியிட்டுள்ளது. தென்காமரூபத்தின் கதையைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்துள்ளவர் அ. மாரியப்பன். இவர் தில்லி பல்கலைகழகத்தில் தமிழ்பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். அஸ்ஸாமியர்களால் தங்களின் அன்புக்குரிய பாய்தேவ் (மூத்த சகோதரி) என்று அழைக்கப்பட்டவர் இந்திரா கோஸ்வாமி என்ற மாமோனி ராய்சோம் கோஸ்வாமி இவர் இரவீந்திரபாரதி பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார், அஸ்ஸாம் ரத்னா, சாகித்ய அகாதமி விருது உள்ளிட்ட …

காமரூபத்தில் உலவும் நிழல்கள் Read More »

காலம் எழுப்பும் கேள்வி

ஈஸ்கிலஸ் மற்றும் சோபாக்ளிஸ் எழுதிய கிரேக்கநாடகங்களை முழுமையாக மொழியாக்கம் செய்து இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார் ஸ்டாலின். இவர் கோவை வானொலி நிலையத்தின் இயக்குனராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். சில காலம் சென்னை பண்பலையிலும் பணியாற்றியிருக்கிறார். கிரேக்க இலக்கியங்களை, சிந்தனைகளை வாசிப்பதற்காகத் தன் வாழ்நாளை செலவு செய்துவருபவர் ஸ்டாலின். கிரேக்க அழகியல். சிந்தனைகள், நாடகங்கள் எனப் பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளார். வரலாற்று மாணவரான ஸ்டாலின் தனது விருப்பத்தின் பெயரில் கிரேக்க இலக்கியங்களைத் தானே முனைந்து கற்றுக் கொள்ளத்துவங்கி இன்று …

காலம் எழுப்பும் கேள்வி Read More »

தேவதச்சனோடு உரையாடல்.

கவிஞர் தேவதச்சனுடன் கவிதைகள் குறித்த விரிவான உரையாடல் ஒன்றினை நடத்திப் பதிவு செய்திருக்கிறேன். நானும் கவிஞர் மனுஷ்யபுத்திரனும் நான்கு அமர்வுகளாக இந்த உரையாடலை நிகழ்த்தினோம். தேவதச்சனின் கவிதைகள் குறித்த எனது கட்டுரைகளுடன் இந்த உரையாடலும் இணைந்து தனிநூலாக வெளியிடப்படவுள்ளது. அதிலிருந்து சிறுபகுதி •• எஸ்.ரா: உங்கள் கவிதைகளில் பால்யகாலம் தொடர்ந்து அடையாளப்படுத்தபடுகிறதே. அது வெறும் நினைவுகள் மட்டும் தானா? தேவதச்சன் – சிறுவயது நினைவுகளின் பங்கு கவிதையில் நிச்சயமாக இருக்கிறது . பத்து வயதுச் சிறுவனுக்கு உடல் …

தேவதச்சனோடு உரையாடல். Read More »

மணலின் நடுவே

William Stanley Merwin எனப்படும் w.s. மெர்வின் அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞர். இவரது Sand என்ற சிறுகதை இரண்டேபக்கங்கள் கொண்டது. அபாரமான இச்சிறுகதை உலகச் சிறுகதைகள் வரிசையில் இடம்பெற்றுள்ளது. மணல்கடிகாரம் ஒன்றினுள் நிரப்பட்ட மணலிலுள் எப்படியோ ஒரு எறும்பு பிறந்து விடுகிறது. அதற்கு வெளியுலகம் என்ற ஒன்றே தெரியாது. மணல்துகள்களை தனது சகோதரர்களாக  நினைக்கிறது. மேலிருந்து கீழாக, பின்பு கீழிலிருந்து மேலாக எதற்காக இப்படி பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என  குழம்பிப் போகிறது. தன்னை எதற்காக மணல்துகள்கள் …

மணலின் நடுவே Read More »

பதின் நாவல் குறித்து

‘பதின்’பருவ உலகம் அழகானது… வீரபத்திர லெனின் இளமைப் பருவம் அழகானது, இனிமையானது, சுவையானது என்பதை யாரும் மறுக்க முடியாது. யாரிடம் கேட்டாலும் பள்ளி வாழ்க்கையே சிறப்பானது என்பர். ஏன் என்றால் அந்தப் பருவத்தில் தான் நண்பன், தோழி, வகுப்பு, பாடங்கள், திருட்டு, சண்டை என உலகத்தைப் பற்றி நாம் கற்றுக் கொள்கிறோம். நமக்கு யார் முதல் நண்பன் என நினைத்துப் பார்த்தால், பல முகங்கள் நம் கண்முன்னே வந்து நிழலாடும். கண்டிப்பு, தண்டனை, பயமுறுத்தல், கட்டாயப்படுத்துதல் போன்றவற்றை …

பதின் நாவல் குறித்து Read More »