இலக்கியம்

உயர்த்திப் பிடித்த வெளிச்சம்

ஜெயகாந்தன் மறைந்துவிட்டார் என அறிந்த மறுகணம் அவர் வீட்டில் இருந்தேன். கம்பீரமான குரலில் வரவேற்கும் ஜெயகாந்தன் அங்கு இல்லை. அவரது உடலே கிடத்தப்பட்டிருந்தது. அந்த மௌனம், பெரும் துக்கத்தை உருவாக்கியது. தாங்க முடியாத மனவலியோடு அவரது வீட்டு வாசலில் இரவெல்லாம் அமர்ந்திருந்தேன். சலனமற்ற நீண்ட இரவு. நினைவுகள் கொப்பளிக்கின்றன. ஜே.கே. வாழ்வில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். மனம் அதில் ஒன்றமுடியாமல் தத்தளித்தது. இந்த இழப்பு எளிதானது அல்ல. எத்தனையோ வாசகர்களைப்போல நானும் அவரது வாசகன். அவர் …

உயர்த்திப் பிடித்த வெளிச்சம் Read More »

சிஹாபுதினின் கதைகள்

சமகால மலையாளச் சிறுகதை இலக்கியத்தில் புதியதொரு எழுத்துவகையை உருவாக்கியவர் சிஹாபுதின் பொய்த்தும்கடவு. நாவலாசிரியர், கவிஞர், பத்திரிக்கையாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இயக்குனர் எனப் பன்முகப்பட்ட ஆளுமை. இவரது பனிரெண்டு சிறுகதைகளின் தொகுப்பாக யாருக்கும் வேண்டாத கண் வெளியாகியுள்ளது. தினசரி வாழ்க்கையைக் கவிதைகள் கையாளுவது போல உருவகத்தளத்திலோ, அரூபமாக்கியோ, பன்முகப்படுத்தியோ சிறுகதைகளாக உருவாக்குகிறார் சிஹாபுதின். இது ஒருவகை மாய யதார்த்த எழுத்து. ஆனால் கேப்ரியல் கார்சியா மார்க்குவெஸ் வகையிலிருந்து மாறுபட்டது. கவித்துவமான, இந்திய புராணீக மரபிலிருந்து உருவாகி வந்த நீட்சி போன்ற …

சிஹாபுதினின் கதைகள் Read More »

ராதிகா சாந்தவனம்

கவிஞர் முத்துபழனியின் ராதிகா சாந்தவனம் படித்துக் கொண்டிருக்கிறேன். 584 பாடல்களைக் கொண்ட “ராதிகா சாந்தவனம்” சந்தியா முல்சந்தானியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு “The Appeasement of Radhika” என்னும் நூலாகப் பென்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இதன் சில கவிதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன, அவற்றை இணையத்திலும் சிற்றிதழ்களிலும் வாசித்திருக்கிறேன். ஆனால் முழு நூலும் மொழியாக்கம் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. முத்துப்பழனி (1730-1790) தஞ்சையை ஆண்ட பிரதாபசிங்க மன்னரின் அரண்மனையில் தேவதாசியாக இருந்தவர். இவர் தெலுங்கில் எழுதிய ‘ராதிகா சாந்தவனம்’ ஒரு சிருங்காரக் …

ராதிகா சாந்தவனம் Read More »

கலையில் சுழலும் வாழ்க்கை

எஸ்.ராவின் சஞ்சாரம்:  விமர்சனம் – ஏக்நாத் வாழ்க்கை மட்டுமே எல்லாமுமானதாக இருக்கிறது. திசைகளாகவும் காற் றாகவும் மரமாகவும் செடியாகவும் அது மட்டுமே எங்கெங்கும் நிலை கொண் டிருக்கிறது. விரிகிற சிறகுகளை அசைக்கிற பறவையின் ஆனந்தத்தையும் ஒடிந்த சிறகோடு உயிருக்குப் போராடும் அவஸ்தையையும் வாழ்க்கை தந்து கொண்டே இருக்கிறது. அது தரும் மகிழ்ச்சியில் அல்லது அதிர்ச்சியில் நாம் இழுபட்டுக் கொண்டிருக்கிறோம். அதன் பாய்ச்சலில் நீந்தி ஆக வேண்டிய கட் டாயம் நீச்சல் தெரியாதவனுக்கும் இருப்பது துரதிர்ஷ்டம்தான். அந்த துரதிர் …

கலையில் சுழலும் வாழ்க்கை Read More »

ஒளிரும் நினைவுகள்

கும்பகோணத்தில் பிறந்த வளர்ந்த நண்பர்கள் தங்களின் ஊரைப் பற்றியும் அங்கு வாழ்ந்து மறைந்த கலை இலக்கிய ஆளுமைகள் குறித்தும், காவிரி பற்றியும், ஊரின் முக்கிய கோவில்கள்,  விழாக்கள்,  இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள், நூலகங்கள். உணவகங்கள்  பற்றியும் சொல்லித்தீராத நினைவுகளைக் கொண்டிருக்கிறார்கள். எல்லாத் தருணங்களிலும் இவை குறித்து உணர்ச்சிபூர்வமாகப் பகிர்ந்து கொள்கிறார்கள் தேனுகாவைக் கும்பகோணத்தில் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அவர் கும்பகோணம் குறித்துப் புதிது புதிதாக விஷயங்கள் சொல்லிக் கொண்டேயிருப்பார். தேனுகா அபூர்வமான கலைஞர். இசையையும் ஒவியத்தையும் …

ஒளிரும் நினைவுகள் Read More »

சிரிக்கும் வகுப்பறை

– நூல் விமர்சனம். மதுரை சரவணன். கட்டாய இலவச கல்வி சட்டம் தண்டனை அற்ற வகுப்பறையை உறுதி செய்கின்றது. இருப்பினும் ஆங்காங்கே பள்ளிகளில் மாணவர்கள் தண்டிக்கப்படுவது வாடிக்கையாகி கொண்டு தான் இருக்கின்றது. தேர்வு, அதன் பின் ஒளிந்துள்ள வெற்றி , இவற்றிற்கு இடையேயான போராட்டத்தில் தண்டனை நிச்சயமானதாகிப் போகின்றது.இந்த தண்டனை, மாணவர்களை எப்படி துரத்துகின்றது என்பதை எஸ்.ராமகிருஷ்ணன் தனது சிரிக்கும் வகுப்பறை என்ற நாவலில்  மிக அற்புதமான நாவலை படைத்துள்ளார். தண்டனை முறைகள் குறித்து பேசும் புத்தகங்கள் …

சிரிக்கும் வகுப்பறை Read More »

சஞ்சாரம் விமர்சனம்

– அழகியசிங்கர் சமீபத்தில் நான் படித்த ஒரு நாவல் எஸ் ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் . 375 பக்கங்கள் கொண்ட இந் நாவலைப் படிக்க சில நாட்கள் ஆயிற்று. ஒரே சமயத்தில் இப்போதெல்லாம் என்னால் ஒரு புத்தகத்தைப் படிக்க முடியவில்லை. இந் நாவல் குறித்து இரண்டு கருத்துகளை அறிய முடிந்தது. இப்புத்தக வெளியீட்டுக் கூட்டத்திற்கு நான் சென்றேன். இந் நாவலைப் பற்றி ராமகிருஷ்ணன் ஒன்று சொன்னார். அவருக்கு இசையைப் பற்றி ஒன்றும் தெரியாதாம். இசையை ரசிப்பது வேறு; இசையைப் …

சஞ்சாரம் விமர்சனம் Read More »

நாயன சஞ்சாரம்

கரிசல்காட்டு காற்றலைகளில் நாயன சஞ்சாரம் மதுரை வாசகன் *** வேறு எந்த வாத்தியத்தைவிடவும் கிராமத்து மக்களுக்கு நாதஸ்வரம் கேட்பதே பிடித்தமானதாக இருக்கிறது. அந்த இசையை, தங்களின் மண்ணின் இசையாகவே விவசாயிகள் நம்பினார்கள். கரிசலின் தொல்நினைவுகளை எல்லாம் நாதஸ்வரம் மீட்டுத் தருவதாகவே கருதினார்கள். -எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் வாசிக்கையில் பழகிய மனிதர்களோடு நமக்குப் பிடித்த ஊரில் அலைவதைப் போலிருந்தது. சஞ்சாரம் நாவலைக் குறித்து பதிவெழுதத் திண்ணையில் அமர்ந்தபோது காற்றலைகளில் ‘அங்க இடி முழங்குது.. கருப்பசாமி தங்க கலசமின்னுது’ பாடல் …

நாயன சஞ்சாரம் Read More »

விளையாட்டுப் புத்தகங்கள்

ஆறு முதல் பனிரெண்டு வயதுள்ள குழந்தைகள் புத்தகம் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதற்காக இரண்டு விளையாட்டுப் புத்தகங்களை உருவாக்கியிருக்கிறேன். விளையாட்டுப் புத்தகங்கள் என்றால் என்ன ? வெறுமனே பக்கங்களைப் புரட்டிக் கதையைப் படித்துப் போவதற்குப் பதிலாகக் கதையில் சில சிக்கல்கள், சவால்கள், புதிர்களை இடம்பெறச்செய்து படிப்பவர் தன் கையில் உள்ள பகடையை உருட்டி எந்த எண் விழுகிறதோ அதற்கு ஏற்ப அந்தச் சிக்கலை, சவாலை எதிர் கொண்டு கடப்பதே விளையாட்டுப் புத்தகம் எனப்படுகிறது. ஐரோப்பிய மொழிகளில் …

விளையாட்டுப் புத்தகங்கள் Read More »