இலக்கியம்

காற்றடித்த யானை.

உருவகக்கதைகள் தமிழில் குறைவாகவே எழுதப்பட்டுள்ளன. உலக இலக்கியத்தில் இவை தனி வகைமையாகக் கருதப்படுகின்றன, குறுங்கதைகளை எழுதியவர்களில் மிரோஜெக், ஹென்ரிச் ப்யூல். யாசுனாரி கவாபதா, போர்ஹே, பார்த்தல்மே போன்றோர் முக்கியமானவர்கள். உருவக்கதைகளில் முக்கியமான படைப்பாக ஸ்லவொமிர் மிரோஜெக்கின் யானை கருதப்படுகிறது. இக்கதை தமிழில் நடை இதழில் வெளியாகி உள்ளது. ஸ்லவொமிர் மிரோஜெக். போலந்தின் முக்கியமான நாடக ஆசிரியர். அவரது நடுக்கடலில் (Out at Sea)என்ற நாடகம் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு நாடகவெளி இதழில் வெளியாகியிருக்கிறது. மிரோஜெக்கின் இரண்டு குறுங்கதைகளைப் …

காற்றடித்த யானை. Read More »

மௌனியோடு ஒரு மாலை

நேற்று  மௌனி குறித்து எழுத்தாளர் கி. அ. சச்சிதானந்தம் நிகழ்த்திய உரை கேட்பதற்காகப் போயிருந்தேன். அழகியசிங்கர் கோவிந்தராஜன் இருவரும் இணைந்து விருட்சம் சார்பில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். கூட்டம் கேட்க பதினைந்து பேர் வந்திருந்தார்கள். அதில் சரிபாதி எழுத்தாளர்கள். எழுத்தாளர் இரா.முருகன். திரைப்பட இயக்குனர் அம்ஷன்குமார், ராஜ்கமல் கண்ணன், சிறகு ரவிச்சந்திரன், ராஜகோபால் முதலானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மௌனியின் மகள் ஞானம், தனது கணவருடன்  கூட்டத்தில் கலந்து கொண்டார், நிகழ்வின் இறுதியில் ஞானம் தன் தந்தையைப் …

மௌனியோடு ஒரு மாலை Read More »

சாமுராயும் கதை சொல்லியும்

நெடுங்காலத்தின் முன்பு நாடோடியாகச் சுற்றிக் கதை சொல்வதில் தேர்ந்த கதை சொல்லி ஒருவர் இருந்தார். அவர் ஒரு நாள்   தனது பயண வழியில் மிகுந்த பசியை அடைந்தார். சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்கவில்லை. அருகில் சாமுராய்களுக்கான பயிற்சிக்கூடம் ஒன்றிருப்பதை அறிந்து அங்கே சென்றார். சாமுராய்களின் பயிற்சிக்கூடத்தில் உணவும், தங்குமிடமும் வேண்டுமென்றால் அங்கேயுள்ள யாராவது ஒருவருடன் சண்டை போட வேண்டும் என்பது விதி கதைசொல்லி அந்தப் பயிற்சிக்கூடத்திற்குள் போய்த் தான் சண்டை போட வந்துள்ளதாகக் கூறினார் யாருடன் சண்டை போடப்போகிறீர்கள் …

சாமுராயும் கதை சொல்லியும் Read More »

இந்தியாவிற்கு இடமில்லை

உலகக் கால்பந்து போட்டிகள் ஏற்படுத்திய உற்சாகத்தில்  ஒரு இணையவிளம்பரம் சுற்றுக்கு விடப்பட்டிருக்கிறது.தேடிப்படிக்க வேண்டிய பட்டியலிது. ஒரே வருத்தம் இந்தப் பட்டியலில் இந்தியாவில் இருந்து ஒரு நாவல் கூட இடம்பெறவில்லை. 1.            BRAZIL                                  BUDAPEST – CHICO BUARQUE 2.            CHILE                                    BY NIGHT IN CHILE – ROBERTO BOLANO 3.            COLUMBIA                         MEMORIES OF MELANCHOLY WHORES – GABRIEL GARCÍA MÁRQUEZ 4.            JAPAN                                  1Q84 – HARUKI MURAKAMI 5.            ITALY   …

இந்தியாவிற்கு இடமில்லை Read More »

வால் ஆட்டாத நாய்

பஞ்ச கல்யாணி என்றொரு படம் 1979ல் வெளியாகி வசூலை அள்ளி குவித்தது. படம் ஒடிய நாட்களில் அதில் நடித்த கழுதையைத் தியேட்டர் தியேட்டராக அழைத்துக் கொண்டு போய்க் காட்டிக் கொண்டாடினார்கள்.அக்கழுதையைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கூட்டம், தள்ளுமுள்ளு. நிறையப் பேர் அதனோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.அதன்பிறகு அக்கழுதை வேறு திரைப்படங்களில் நடிக்கவுமில்லை, யாரும் அதைக் கண்டுகொள்ளவும் இல்லை. என்ன ஆகியிருக்கும் அதன் வாழ்க்கை. ஆட்டுக்கார அலமேலுவில் நடித்த ஆடு தன் நட்சத்திர அந்தஸ்தை என்ன செய்திருக்கும். அந்த ஆடு …

வால் ஆட்டாத நாய் Read More »

பாஷோவின் பயணங்கள்

பாஷோ மகத்தான ஹைக்கூ கவிஞர்.  பாஷோ என்றால் ஜப்பானிய மொழியில் வாழை மரம் என்று அர்த்தம்.  All who achieve greatness in art possess one thing in common: they are one with nature எனப் பாஷோ குறிப்பிடுகிறார். இவரது ஐந்து பயணங்களின் தொகுப்பு நூலாகிய Basho’s Journey வாசித்துக் கொண்டிருந்தேன் 1684ம் ஆண்டுத் தனது சீடனுடன் ஈடோவில் இருந்து நீண்ட பயணத்தைத் துவக்கினார் பாஷோ. Uenoவில் உள்ள தனது பிறந்த வீட்டை …

பாஷோவின் பயணங்கள் Read More »

நூறு பொருள்களில் உலக வரலாறு

மனிதகுல வரலாறு குறித்துத் தோழர் எஸ்ஏ பெருமாள் வகுப்பு எடுப்பதில் விற்பன்னர், அவரது உரையில் கற்காலம் துவங்கி இன்றைய இணையம் வரையான மனிதகுல வளர்ச்சி மற்றும் அறிவியலின் வரலாறு. தொழில்நுட்பம் உருவானவிதம், கண்டுபிடிப்புகளின் வரலாறு எனச் சுவைபடக் கூறுவார், முதன்முதலாக ஜார்ஜ் தாம்சனின் மனிதகுல சாரம் நூலைப்பற்றி அவரது உரையில் தான் அறிந்து கொண்டேன். ஜார்ஜ் தாம்சன் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். மார்க்சிய ஆய்வாளர், கிரேக்க மொழியில் தேர்ந்தவர், பண்டை கிரேக்க சமூக உருவாக்கம் குறித்துத் …

நூறு பொருள்களில் உலக வரலாறு Read More »

வெள்ளைக் காகிதம்

பிரெஞ்சு கவிஞரும், ஒவியரும், திரைப்பட ஆளுமையுமான ழான் காக்தூ (Jean Cocteau) எழுதிய The white paper  ஒரினச்சேர்க்கையில் நாட்டம் கொண்ட ஒருவனைப் பற்றியது. Gay literature எனப்படும் தற்பால்சேர்க்கை இலக்கியத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது இந்நூல் இன்று ஒரினச்சேர்க்கை குறித்துப் பொதுவெளியில் திறந்த உரையாடல்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன, அதைக் குற்றம் எனக்கருதாமல் அணுக வேண்டிய மனநிலை குறித்துத் தொடர்ந்து பேசியும் விவாதித்தும் வருகிறார்கள், அப்படியும் சமூகம் ஒரினச்சேர்க்கையை இயற்கைக்கு மீறிய தவறான செயல் என்ற கண்ணோட்டத்தில் தான் …

வெள்ளைக் காகிதம் Read More »

பாரீஸில் கால்வினோ

இதாலோ கால்வினோவின் Hermit in Paris படித்துக் கொண்டிருந்தேன், அவரது வாழ்வில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள், அவரது நேர்காணல். மற்றும் பயண அனுபவங்களின் தொகுப்பு நூலிது. கால்வினோவின் புனைவெழுத்தை போலவே அவரது கட்டுரைகளும் மிகச் சுவாரஸ்யமானவை. கதை சொல்லும் முறையைப் புத்துருவாக்கம் செய்தவர்களில் கால்வினோ முக்கியமானவர், இவரது Invisible Cities மிக விருப்பமான புத்தகங்களில் ஒன்று. ஒரு எழுத்தாளனுக்கு அவன் வாழும் நகரம் எவ்வளவு முக்கியமானது என்பது குறித்துக் கால்வினோ The Writer and the …

பாரீஸில் கால்வினோ Read More »

விலாஸ் சரங்

விலாஸ் சரங் (Vilas Sarang) மராத்தியின் முக்கிய எழுத்தாளர், கவிஞர். ஆங்கிலப்பேராசிரியரான இவரது சிறுகதைகள் உலக அளவில் பேசப்படுகின்றன, The Women in Cages என்ற இவரது சிறுகதை தொகுப்பு மிக முக்கியமானது, 26 சிறுகதைகள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் “An Interview with M Chakko” என்றொரு சிறுகதையுள்ளது, இச்சிறுகதை மிகவும் முக்கியமானது, சாக்கோ என்ற நபர் கப்பல் பயணத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஒரு தீவினைச் சென்றடைகிறான், அந்தத் தீவில் பெண்களுக்குப் பாதி …

விலாஸ் சரங் Read More »