இலக்கியம்

காகமும் நரியும்

பாட்டியிடமிருந்து காகம் வடையைத் திருடிய சிறார்கதையை நாம் அறிவோம், நூற்றாண்டுகாலமாக அக்கதை தமிழகத்தில் பிரபலமாக இருந்த போதும் அதற்கு எங்கேயாவது யாராவது சிலை செய்திருப்பார்களா என யோசித்தேன், நான் அறிந்தவரை அப்படி எதுவுமில்லை. ஆனால் இக்கதையின் மாறுபட்ட பிரெஞ்சுவடிவத்தில் காகத்திடமிருந்த வெண்ணைய்யை நரி தந்திரமாக ஏமாற்றிப் பிடுங்கிக் கொள்கிறது. லா ஃபோந்தேன் 1668ல் வெளியிட்ட இந்தப் பிரெஞ்சுக்கதையை அவர் ஈசாப் கதையில் இருந்து மீள்உருவாக்கம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாரீஸில் உள்ள Ranelagh பூங்காவில்  லா ஃபோந்தேன் சிலையின் …

காகமும் நரியும் Read More »

கெடை காடு

சமீபத்தில் ஏக்நாத் எழுதிய கெடை காடு நாவலைப் படித்தேன். இன்று பெரும்பான்மை நாவல்கள் நகர்மய வாழ்க்கையை எழுதிக் கொண்டிருக்கையில் மண்மணத்துடன், கிடைமாடுகளின் யதார்த்தமான வாழ்க்கையைச் சிறப்பாக எழுதியிருக்கிறார் ஏக்நாத். மலை கிராமங்களில் இருந்து மாடுகளைக் கெடை காடு நோக்கி அழைத்துச் செல்வது கண்கொள்ளாத காட்சியாக விரிகிறது. ஒநாய் குலச்சின்னம் நாவலை வாசிக்கும் போது மங்கோலிய வேட்டை நிலத்தை எவ்வளவு நுட்பமாக எழுதிப்போகிறாரே என வியந்தேன், அந்த விவரணைகளுக்கு இணையாகக் கிடை மாடுகளின் வாழ்க்கையை அதன் தனித்துவமான அனுபவங்களைத் …

கெடை காடு Read More »

பாக்னர் சில குறிப்புகள்

தான் எழுதிக் கொண்டிருந்த நாவலின் கதைப்போக்கு மற்றும் முக்கியச் சம்பவங்கள் குறித்த விபரங்களைத் தனது படுக்கை அறையின் சுவரில் எழுதி ஒட்டிவிடுவது நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் வில்லியம் பாக்னரின் (William Faulkner ) வழக்கம். 1954ல் அவர் எழுதிய A Fable நாவலுக்கான குறிப்புகள் அவரது படுக்கையில் ஒட்டப்பட்டிருக்கின்றன,  இந்தப் புகைப்படத்தையும் செய்தியும் வாசித்த போது எனக்கு அசோகமித்ரன் எழுதிய ஒற்றன் நாவல் நினைவில் வந்து போனது •• வில்லியம் பாக்னர் தனக்கு வரும் கடிதங்களில் பதிப்பாளரிடம் …

பாக்னர் சில குறிப்புகள் Read More »

முகாமில் இரண்டு நாட்கள்

திண்டுக்கல்லில் நடைபெற்ற நாவல் இலக்கிய முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிஞர் தேவதச்சன், தோழர் எஸ்.ஏ.பெருமாள், விமர்சகர் முருகேச பாண்டியன், மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ், எழுத்தாளர் ஷாஜகான், எழுத்தாளர் விநாயகமுருகன், எழுத்தாளர் முருகவேள், கவிஞர் நேசமித்ரன், எழுத்தாளர் முத்துகிருஷ்ணன், காந்திகிராமப்பல்கலைகழகப் பேராசிரியர் முனைவர் பிச்சை, அந்திமழை ஆசிரியர் அசோகன், உள்ளிட்ட 60 பேர்கள் கலந்து கொண்டார்கள். 50 முதல் 75 பேர் வரை கலந்து கொண்டால் போதும், அப்போது தான் பரஸ்பரம் முகம் பார்த்துப் பேசிக் கொள்ளவும், …

முகாமில் இரண்டு நாட்கள் Read More »

தாவரங்களின் உரையாடல் முதல் காந்தியோடு பேசுவேன் வரை

நூல் அறிமுகம்  : கீரனூர் ஜாகீர்ராஜா கடந்த நூற்றாண்டின் 90-களில் தமிழ்ச்சிறுகதைப் போக்கில் நிகழ்ந்த மாற்றங்களுக்கு கரிசல் எழுத்தாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. கி.ராஜநாராயணனின் கதைசொல்லி மரபிலிருந்து தொடங்கி கு.அழகிரிசாமியின் எதார்த்தவாத எழுத்தும் அதைத் தொட்டுக்கிளைத்த பா.செயப்பிரகாசம், பூமணி, வீரவேலுசாமி, ச.தமிழ்ச்செல்வன், லட்சுமணப் பெருமாள், உதயசங்கர் எழுத்துகளும் அங்கிருந்து உருவாகி தனித்த பாதையில் பயணித்த கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோரும் இன்றைக்குப் புதிதாக எழுத வந்துள்ள கருத்தடையான், சபரிநாதன் வரை நாம் ஒரு நீண்ட வரிசையைப் புழங்கிப் பார்த்திருக்கிறோம். …

தாவரங்களின் உரையாடல் முதல் காந்தியோடு பேசுவேன் வரை Read More »

வாசிப்பு

வாசிப்பு என்று நாம் சொல்லக்கூடிய வார்த்தையின் உண்மையான பொருள் என்ன ? வாசிப்பு என்பது மற்றொருவர் உரையாட, நாம் கேட்டுக் கொண்டிருப்பது. உரையாடக்கூடியவர் அங்கில்லை. ஆனால் அவரது உரையாடலை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நம்முடன் அவர் உரையாடிக் கொண்டிருக்கிறார் என்பதுகூட அவர் அறியாத காரியமாக இருக்கும்; அப்போதும் அந்த உரையாடல் தீவிரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவர் இந்த உலகத்தை விட்டு மறைந்து பல நூற்றாண்டுகள் ஆயிருக்கும். அப்போதும் அவர் நம்மைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கிறார். இச்சந்தர்ப்பத்தைத் தரும் …

வாசிப்பு Read More »

நெடுங்குருதி: காலத்தின் குரல்

– கேசவமணி நாகு என்ற ஒன்பது வயதுச் சிறுவனை மையப்படுத்தி அவனது தலைமுறை கதையைச் சொல்வதன் மூலம் வேம்பலை என்ற கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறது நெடுங்குருதி. நாவல் கோடைக் காலம், காற்றடிக் காலம், மழைக் காலம், பனிக் காலம் என்று நான்கு பகுதிகளாக பகுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கால மாற்றமும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் காட்டுவதன் மூலம் காலத்தையும் நாவலில் ஒரு கதாபாத்திரமாக உலவ விட்டிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். நாவலை வாசிக்கும் கணம் தோறும் …

நெடுங்குருதி: காலத்தின் குரல் Read More »

துக்கலின் கதைகள்

பஞ்சாபி இலக்கியத்தின் மிக முக்கியமான எழுத்தாளர் கர்த்தார் சிங் துக்கல், (Kartar Singh Duggal ) சாகித்ய அகாதமி பரிசு பெற்ற இவர், இந்தியப்பிரிவினை குறித்து முக்கியமான கதைகளை எழுதியிருக்கிறார்,  சிறந்த நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர் பாலுறவையும் விலக்கிவைக்கபட்ட இச்சைகளையும் பற்றிப் பகிரங்கமாக எழுதினார் என்று துக்கலின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கபட்டன, பத்திற்கும் மேற்பட்ட சிறுகதை தொகுப்புகளை எழுதியுள்ள இவர் சிறந்த விமர்சகரும் கூட, துக்கல் அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர், பத்மபூஷண் உள்ளிட்ட பல …

துக்கலின் கதைகள் Read More »

கோடையில் ஒரு மழை

ச.ஆறுமுகம் மலைகள் இணைய இதழிலும் பல்வேறு இலக்கிய இதழ்களிலும் தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புகளைச் செய்துவருகிறார், ஒய்வு பெற்ற வட்டாட்சியரான ஆறுமுகம் வேலூரில் வசிக்கிறார், உலக இலக்கியத்தின் சமகாலப் படைப்புகளைத் தேடித்தேடி மொழியாக்கம் செய்துவருகிறார், சிறந்த மொழிபெயர்ப்பாளர். இவரது மொழியாக்கத்தில் வெளியான ஹரூகி முரகாமியின் யானை காணாமல் போகிறது சிறுகதைத் தொகுப்பு முக்கியமானது, சமீபத்தில் வெளியான கோடையில் ஒரு மழை மொழியாக்க சிறுகதைகளின் தொகுப்பில் நோபல் பரிசு பெற்ற மோ யான், ஆலின் மன்றோ சிறுகதைகளுடன் ஜேடீ ஸ்மித், மார்க்வெஸ், …

கோடையில் ஒரு மழை Read More »