தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்
துணி துவைத்துக் கொண்டிருந்தேன் காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம் தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன் காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம் அடுத்த துணி எடுத்தேன் காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம். ————————————– சிறுமி கூவுகிறாள். நான் போகிற இடம் எல்லாம் நிலா கூடவே வருகிறதே. சிறுவன் கத்தினான். இல்லை. நில்லா என்கூட வருகிறது இருவரும் சண்டை போட்டுக்கொண்டு திருப்பத்தில் பிரிந்தனர். வீட்டிக்குள் நுழைந்து, உடன் வெளியே வந்து எட்டி பார்க்கிறாள். நிலா இருக்கிறதா? …