இலக்கியம்

WILL SPEAK WITH GANDHI

எனது காந்தியோடு பேசுவேன் சிறுகதை தனிவெளியீடாக ஐந்தாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு தமிழகம் முழுவதும் காந்தியவாதிகளால் விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது, அந்த முயற்சியை மேற்கொண்ட நண்பர் மூர்த்திக்கு எனது மனம் நிறைந்த நன்றி. காந்தியோடு பேசுவேன் சிறுகதையை நண்பர் கமல் ஆங்கிலத்தில் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். ••• WILL SPEAK WITH GANDHI I had alighted at Wardha only on that morning. This is the first time I am visiting the Gandhi …

WILL SPEAK WITH GANDHI Read More »

அலிஸ் மன்றோ

இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கனடாவின் மிக முக்கிய எழுத்தாளரான அலிஸ் மன்றோவிற்குக் கிடைத்திருக்கிறது, நம்காலத்தின் மிக முக்கிய சிறுகதை ஆசிரியர் அலிஸ் மன்றோ, அவரது சில சிறுகதைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன, நோபல் பரிசு பெறும் 13வது பெண் இவராகும், ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக அலிஸ் மன்றோவின் நேர்காணல் ஒன்றினை அ.முத்துலிஙகம் எடுத்திருக்கிறார், அது காலச்சுவடு இதழில் வெளியாகி உள்ளது,  உங்கள் பார்வைக்காக அதை மீள்பிரசுரம் செய்கிறேன் **** நேர்காணல்: அலிஸ் மன்றோ காத்திராப்பிரகாரம் …

அலிஸ் மன்றோ Read More »

இரண்டு கவிதைகள்

நண்பர் பாவண்ணன் ,கன்னடத்தில் இருந்து மிகச்சிறந்த இலக்கியப்படைப்புகளைத் தொடர்ச்சியாக தமிழாக்கம் செய்து வருகிறார், அவர் கொண்டாடப்பட வேண்டிய முக்கியத் தமிழ்படைப்பாளி, சில ஆண்டுகளுக்கு முன்பாக அவரது மொழியாக்கத்தில் வெளியாகி இருந்த சிந்தாமணி கொட்லகெரெயின் கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன, கவிதைகள் தரும் பரவசத்திற்காக சிந்தாமணி கொட்லகெரெயிற்கும், தேர்ந்த மொழிபெயர்ப்பினைச் செய்த பாவண்ணன் அவர்களுக்கும் மனம் நிரம்பிய பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் ••• சிந்தாமணி கொட்லகெரெயின் இரண்டு கவிதைகள் தமிழில் பாவண்ணன் 1. என் வலையில் முதலில் என் …

இரண்டு கவிதைகள் Read More »

பலவந்தத்தின் பிரயோகம்

சில நாட்களுக்கு முன்பாக இணையத்தில் வெளியாகியிருந்த எனது விருப்பத்தின் படி வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் சிறுகதையை தமிழாக்கம் செய்து அனுப்பியுள்ளார் ரமேஷ் கல்யாண், அவருக்கு  என் மனம் நிறைந்த பாராட்டுகள் ••• பலவந்தத்தின் பிரயோகம் வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் தமிழில் : ரமேஷ் கல்யாண் அவர்களெல்லாம் என்னிடம் வந்த புது நோயாளிகள். என்னிடம் இருந்ததெல்லாம் ஆல்சன் என்ற பெயர் மட்டுமே.. ‘தயவு செய்து எவ்வளவு விரைவாக வரமுடியுமோ அவ்வளவு விரைவாக வரவும். என் மகள் மிகவும் நோயுற்றிருக்கிறாள்’ …

பலவந்தத்தின் பிரயோகம் Read More »

முறிந்த கரண்டி

ஒரு நல்ல சிறுகதை என்பது, குரலை உயர்த்தாமல், அலங்காரம் எதுவுமின்றி, இயல்பாக, எளிமையான வர்ணிப்பின் வழியாக, கச்சிதமான கதாபாத்திர உருவாக்கத்தினால் வாசிப்பவனுக்கு ஆழமான மனஎழுச்சியைத் தரக்கூடியதாக இருக்கும், வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் எழுதிய The use of force.  அது போன்ற ஒரு சிறந்த சிறுகதை, அமெரிக்காவின் முக்கியக் கவிஞரான வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் (William Carlos Williams) ஒரு மருத்துவர், அதிலும் குழந்தைகள் மருத்துவர், எழுத்தாளராகச் செயல்படும் போது மருத்துவனைப் போல நடந்து கொள்கிறேன், மருத்துவராக இருக்கும் …

முறிந்த கரண்டி Read More »

எழுத்துலகின் சாமுராய்

இரண்டாம் உலகயுத்தம் ஜப்பானுக்கு ஏற்படுத்திய அடி மிகவும் வலிமையானது, அதன் பாதிப்பில் இருந்து இன்றும் அவர்களால் முழுமையாக விடுபடமுடியவில்லை, ஜப்பானிய இலக்கியத்திலும் யுத்தகாலத்திற்குப் பிந்தைய எழுத்தில் நிறைய மாற்றங்கள் உருவாகின, குறிப்பாக மிஷிமாவும் கவாபதாவும் கோபே அபேயும், புமிகோவும் முக்கிய நவீன எழுத்தாளர்களாக அடையாளம் காணப்பட்டார்கள், இவர்களில் யாசுனாரி கவாபதா நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது, யுகியோ மிஷிமா (Yukio Mishima) இரண்டு முறை நோபல் பரிசிற்கு சிபாரிசு செய்யப்பட்டவர், அரசியல் நிலைப்பாடு காரணமாகவே அவருக்கு …

எழுத்துலகின் சாமுராய் Read More »

ஒண்டிக்கட்டை

சிறுகதை. மாக்ஸிம் கார்க்கி தமிழில் பாஸ்கரன் எனக்கு பிடித்தமான மாக்சிம் கார்க்கியின் கதையிது, ருஷ்யச் சிறுகதைகள் நூலில் இருந்து மீள்பதிவு செய்யப்படுகிறது ••• ஏழைகளைப்  புதைக்கும் கல்லறையில் ஒரு பகுதியில் இலைகள் உதிர்ந்து, மழையினால் அரிக்கப்பட்டு, காற்றினால் அலைக்கழிக்கப் பட்ட மேடுகள். அங்கே கிழிந்த உடையும், கறுப்பு சால்வையும் அணிந்திருந்த ஒரு மாது, அல்லாடிப்போன இரண்டு பிர்ச் மரங்களின் நிழலில் உள்ள கல்லறை மேட்டிற்கு அருகில் உட்கார்ந்திருந்தாள். நரைகண்ட மயிர்ச்சுருள் கற்றையாக அவளது சுருங்கிய கன்னத்தில் புரண்டு …

ஒண்டிக்கட்டை Read More »

க்யூகோவின் மகள்

காதலுக்காகத் தன்னை அழித்துக் கொண்ட தேவதாஸைத் தான் நமக்குத் தெரியும், தான் காதலித்தவனை அடைவதற்காக தன் அழகினைச் சிதைத்துக் கொண்டு, காதலன் செல்லும் ஊர் ஊராக மறைந்திருந்து பின்தொடர்ந்து, அவமானங்களுக்கு உள்ளாகி காதலில் தோற்றுப்போய், மனச்சிதைவு ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும்  மனநலக்காப்பாகத்தில் வாழ்ந்து மடிந்த அடேலைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது, அடேல், பிரெஞ்சு இலக்கியத்தின் மிகப்புகழ்பெற்ற எழுத்தாளர் விக்டர் க்யூகோவின் மகள், இவளின் காதல் துயரம் க்யூகோவின் எல்லா புனைவுகளையும் விட விசித்திரமானது, அடேலின் காதலைப்பற்றி …

க்யூகோவின் மகள் Read More »

வாழ்வின் சில உன்னதங்கள்

பழைய புத்தகக் கடைகளுக்கும் எனக்குமான தொடர்பு முப்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்டது, எந்த ஊருக்குப் போனாலும் அங்கே பழைய புத்தகக் கடை இருக்கிறதா எனத் தேடுவது எனது வழக்கம், அப்படித் தேடி நிறையப் பொக்கிஷங்களை வாங்கியிருக்கிறேன், பழைய புத்தகங்களை விற்பவர்கள் தனிரகத்தை  சேர்ந்தவர்கள், அவர்களின் மனப்போக்கினை நாம் முடிவு செய்யவே முடியாது, சில வேளைகளில் ஐம்பது பக்க அளவுள்ள புத்தகத்திற்கு இருநூறு கேட்பார்கள், சில நேரம் ஆயிரம் பக்க நூலை பத்து ரூபாய்க்குத் தந்துவிடுவார்கள், நன்றாக சிரித்துப் பேசுவார்கள், …

வாழ்வின் சில உன்னதங்கள் Read More »

இக்யூவின் காதல்பாடல்கள்

ஜென் கவிஞர்கள் நாடோடிகளாக இருந்த காரணத்தால் அவர்கள் பயண வழியில் வேசைகளுடன் தங்கி இரவைக் கழித்துப் போவது இயல்பே, ஆனாலும் அந்த இன்பத்தைப் பற்றியோ பரத்தமை பற்றியே ஜென் கவிதைகளில் அதிகம் பாடப்படவேயில்லை, இதில் ஒரேயொரு விதிவிலக்கு, இக்யூ ஸோஜன் ( Ikkyu) தன்னை Crazy Cloud”, என்று அழைத்துக் கொண்ட தனித்துவமிக்க ஜென்கவிஞர் இவர். வெளிப்படையாக பரத்தைகளோடு கூடி இருப்பதுடன் அவர்களை புகழ்ந்து பாடி, பாலின்பத்தை குறை கூறும் கள்ளத்துறவிகளையும் இக்யூ கேலி செய்கிறார், பௌத்த …

இக்யூவின் காதல்பாடல்கள் Read More »