கரமசோவைப் பின்தொடரும் போது
தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவல் தமிழில் கவிஞர் புவியரசு அவர்களின் மொழியாக்கத்தில் வெளியாகி ஒரு ஆண்டிற்கும் மேலாகி விட்டது , அந்த நூலின் வெளியீட்டு விழாவில் நான் தஸ்தாயெவ்ஸ்கி குறித்துச் சிறப்புரை ஆற்றினேன், புவியரசு அவர்களின் மொழியாக்கம் குறித்து ஆழ்ந்து அறிந்து கொள்வதற்காக மூலத்துடன் ஒப்பிட்டு வாசிக்கும் ஒரு வாசிப்பினை கடந்த இரண்டு மாதங்களின் முன்பாக மேற்கொண்டிருந்தேன், ஒரு மொழிபெயர்ப்பாளர் எவ்வளவு சிரத்தையுடன், அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்பதற்குப் புவியரசுவின் இந்த மொழியாக்கம் சிறந்த எடுத்துக்காட்டு, அவருக்கு …