நாடக கம்பெனிகள்
சினிமாவின் வருகை மரபான தமிழ்நாடக கம்பெனிகளை எப்படி எல்லாம் பாதிப்படைய செய்தது என்பதைப் பற்றி எழுதுவதற்காக நிறைய வாசித்துக் கொண்டிருக்கிறேன், பம்மல் சம்பந்த முதலியாரின் வாழ்க்கை வரலாறு, பேசும்பட அநுபவங்கள், மற்றும் அவ்வை தி.க.சண்முகம் எழுதிய நாடக வாழ்க்கை அனுபவங்கள், நாடகக்கலை நூல், மற்றும பழைய நாடக கம்பெனியின் சிறுவெளியீடுகள், என வாசிக்க வாசிக்க வியப்பான தகவல்கள், சுவாரஸ்யமான சம்பவங்கள் நிறைந்து கிடக்கின்றன பம்மல் சம்பந்த முதலியாரின் என் சுயசரிதை நூறு வருஷங்களுக்கு முந்திய சென்னை வாழ்க்கையை …