ஷரீபின் வரிகள்
கர்நாடகத்தில் வாழ்ந்த ஞானியான ஷரீஃப் பற்றி பாவண்ணன் மிகச்சிறப்பான ஒரு கட்டுரையை திண்ணை இணைய இதழில் எழுதியிருக்கிறார், நூற்றி எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மகத்தான ஞானி ஷரீஃப். கர்நாடகாவின் சிறுநகரம் ஒன்றில் தான் ஷரீஃப்பின் பாடல்களைக் கேட்ட அனுபவத்தை அற்புதமாக விவரித்திருக்கிறார், அந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள பாடலிது, இதை வாசித்த நேரத்தில் இருந்து குரங்கைக் கோழி விழுங்கியதே என்ற வரிகள் மனதில் ஒலித்தபடியே இருக்கின்றன, சாத்தியமற்ற ஒன்றைச் சொல்வதன் வழியே மின்னல்வெட்டென ஒரு அகதரிசனத்தை …