இலக்கியம்

ஸ்பானிய சிறகுகளும் வீர வாளும்

சமகாலத் தமிழ் இலக்கியத்தின் தலைநகரம் திருவண்ணாமலை என்று எப்போதுமே சொல்வேன், அப்படித் திருவண்ணாமலையை ஒரு இலக்கிய சங்கமமாக மாற்றியமைத்தவர் எனதருமை நண்பர் பவா செல்லத்துரை. அவர் மீடியா வாய்ஸ் இதழில் எங்களது நட்பு குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார், வாசிக்கையில் மனம் நெகிழ்ந்து போனேன்.  அரஸ் வரைந்துள்ள எனது ஒவியம் மிக துல்லியமாக, சிறப்பாக வரையப்பட்டிருக்கிறது. எத்தனையோ இரவுகளில் பவா வீட்டுக்கதவை தட்டி அவரது அம்மா சமைத்து தரும் உணவைச் சாப்பிட்டு விடிய விடிய இலக்கியம் பேசியிருக்கிறேன், எனக்கும் …

ஸ்பானிய சிறகுகளும் வீர வாளும் Read More »

ஷரீபின் வரிகள்

கர்நாடகத்தில் வாழ்ந்த ஞானியான ஷரீஃப் பற்றி பாவண்ணன் மிகச்சிறப்பான ஒரு கட்டுரையை திண்ணை இணைய இதழில் எழுதியிருக்கிறார், நூற்றி எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மகத்தான ஞானி ஷரீஃப். கர்நாடகாவின் சிறுநகரம் ஒன்றில் தான் ஷரீஃப்பின் பாடல்களைக் கேட்ட அனுபவத்தை அற்புதமாக விவரித்திருக்கிறார், அந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள பாடலிது, இதை வாசித்த நேரத்தில் இருந்து குரங்கைக் கோழி விழுங்கியதே என்ற வரிகள் மனதில் ஒலித்தபடியே இருக்கின்றன, சாத்தியமற்ற ஒன்றைச் சொல்வதன் வழியே மின்னல்வெட்டென ஒரு அகதரிசனத்தை …

ஷரீபின் வரிகள் Read More »

பசித்த பொழுது

நாளை மறுதினம் மனுஷ்யபுத்திரனின் புதிய கவிதைத்தொகுப்பான பசித்த பொழுது வெளியாக இருக்கிறது, அந்த விழாவில் நான் கலந்து கொண்டு பேசுகிறேன், மனுஷ்யபுத்திரனின் சமீபத்தைய கவிதைகளை ஒரே சேர வாசிக்கும் போது அது தமிழ் நவீன கவிதையின் அரிய குரலாக, கவித்துவ உச்சத்தைத் தொட்டிருப்பதை உணர முடிகிறது, இக்கவிதைகளை தமிழ் சமூகம் கொண்டாடி மகிழ வேண்டும் என்று தான் சொல்வேன். கவியின் குரலில் தான் எத்தனை மிருது, எத்தனை வன்மம், எவ்வளவு நெகிழ்வு, எவ்வளவு கருணை, எவ்வளவு ஆவேசம், …

பசித்த பொழுது Read More »

ஆண்டாளைப் பின்தொடர்வது

மார்கழி மாதத்தில் ஆண்டாளின் பாசுரங்களைக் கேட்பதை விட உன்னதமானது இந்த உலகில் வேறு எதுவுமில்லை, மார்கழியை அவளைப் போல கொண்டாடியவர்கள் ஒருவருமில்லை. மற்ற மாதங்கள் தங்களைப் பாடமால் விட்டுவிட்டாளே என்று ஆண்டாளிடம் வருத்தம் கொண்டிருக்கும், கொடுத்து வைத்தது மார்கழி மாதம்,  இப்போதெல்லாம் மார்கழியில் பனி அதிகம் பெய்வதில்லை, பூசணிப் பூக்கள் வைத்து கோலமிட்ட வீடுகளைக் காண்பது அரிதாக இருக்கிறது, கிணற்றடியும் ஈரவாளியும் கண்ணில் இருந்து மறைந்து போய்விட்டன, ஆனால் ஆண்டாள் எல்லாவற்றையும் நினைவுபடுத்திவிடுகிறாள், தன் பாடலின் வழியே …

ஆண்டாளைப் பின்தொடர்வது Read More »

அன்னா ஏன் தற்கொலை செய்தாள்?

ஆர்.அபிலாஷ் (21-11-11 அன்று ரஷ்ய  கலாச்சார மையத்தில்  அன்னா கரீனினா  நாவல் பற்றி  எஸ்.ரா. ஆற்றிய உரை குறித்த ஒரு பதிவு ) எஸ்.ரா. தன்  பேச்சில் அன்னா கரீனினாவின் சமகால தேவையை வலியுறுத்தினார். இன்றும் திருமணத்துக்கு வெளியே உறவு நாடி அவதிக்குள்ளாகும் பெண்கள் உள்ளார்கள். இது முகநூல் யுகத்தில் இன்னும் தீவிரமாகிப் போவதைச் சொன்னார். இது ஏன் நிகழ்கிறது? குடும்பம் எனும் அமைப்பின் தேவை என்ன? அதன் வரையறைகளை மீறி உடைத்துக் கொண்டு ஒருவன் ஏன் …

அன்னா ஏன் தற்கொலை செய்தாள்? Read More »

எஸ்.ராமகிருஷ்ணனின் ஏழு மாலைகள்

அய்யப்ப மாதவன் புயல்தோன்றிய சென்னை நகரத்தில் எங்கு பார்த்தாலும் நீர். நீரைத் தவிர ஒன்றுமில்லையென்று நினைத்திருந்த வேளை, ரஷ்ய கலாச்சார மையத்தையும் சூழ்ந்திருந்த வெள்ளம். சுவர்கள் நாற்புறமும் தடுக்கப்பட்ட சதுர அரங்கில் காலியற்ற இருக்கைகள். நாற்காலிகளெங்கும் மனித வெள்ளம். எஸ்.ரா கருமேகங்களென பொழிந்துகொண்டிருந்தார். இலக்கியமென்பது நலிந்து மெலிந்து போய்க்கொண்டிருக்கிற காலத்தில் இலக்கியத்தை மேம்படுத்தும் காரியத்திலிருந்தார் எஸ்.ரா. அரங்கு சற்றுத் தள்ளியிருந்த கடலிலும் பேரலைகள். இவ்வரங்கத்தை நோக்கியும் மனித அலைகள். ஒரு நாள் இரண்டு நாள்களில்லை. ஒரு வாரகாலம் …

எஸ்.ராமகிருஷ்ணனின் ஏழு மாலைகள் Read More »

நாவல்களே உலகை ஆள்கின்றன

இன்றைய தேதியில் உலகில் அதிகம் வாசிக்கபடுவது எது, கவிதையா, நாவலா, கட்டுரைகளா, சுயமுன்னேற்ற நூல்களா என்ற விவாதம் முடிவில்லாமல் நடந்து கொண்டேதானிருக்கிறது, புள்ளிவிபரங்களைப் பார்க்கையில் நாவலாசிரியர்களே அதிகம் வாசிக்கவும் கொண்டாடவும் படுகிறார்கள் என்பதே நிஜம். ஹாரிபோட்டர் 450 மில்லியன் விற்பனையாகியிருக்கிறது, டாவின்சி கோடு 80 மில்லியன் பிரதிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது, ஜப்பானிய நாவலாசிரியரான ஹருகி முராகமியின் நாவல் 13 மில்லியன் விற்பனையாகியிருக்கிறது, இந்த வரிசையில் நூறு மில்லியனுக்கும் மேல் விற்பனையாது என்று இருபதிற்கும் மேற்பட்ட நாவல்கள் உள்ளன, …

நாவல்களே உலகை ஆள்கின்றன Read More »

போர்ஹே மற்றும் நான்

போர்ஹேயின் புகழ்பெற்ற சிறுகதையான “Borges and I” இல் போர்ஹே தன்னுடைய கதைகளையும் கவிதைகளையும் புனைவதற்கு ஏதுவாக இருக்க நான் வாழ்கிறேன்.என்னை நான் வாழவிடுகிறேன். என்றொரு வரி இடம் பெற்றிருக்கிறது, ஒரு பக்க அளவில் அமைந்துள்ள இந்தக் கதை புனைவெழுத்தின் அசாத்தியமான சாதனை எழுத்தாளன் என்ற இருப்பு விந்தையானது என்ற எண்ணத்தை எவ்வளவோ படைப்பாளிகள் அடையாளம் காட்டியிருக்கிறார்கள், ஆனால் போர்ஹே அதைத் தனது புனைவின் வழியே அழகாக வெளிப்படுத்துகிறார், இரட்டை நிலை பற்றி போர்ஹேயிற்கு எப்போதுமே அதீத …

போர்ஹே மற்றும் நான் Read More »

தாயும் மகளும்

தாயும் மகளும் அறியப்பட்ட எழுத்தாளர்களாக  இருப்பது அபூர்வம், அப்படி இருந்தாலும் தாய் பல ஆண்டுகாலமாக காத்திருந்த ஒரு இலக்கியப்பரிசை மகள் வென்றுவிடுவது சந்தோஷமும் உள்ளார்ந்த வலியும் தரும் ஒரு நிகழ்வு, இலக்கியத்தின் விசித்திரத்தைப் போலவே இலக்கியவாதிகளின் வாழ்விலும் விசித்திரங்கள் நிறையவே இருக்கின்றன மூன்று முறை புக்கர் பரிசிற்கான இறுதிபட்டியலில் இடம் பெற்ற இந்திய ஆங்கில எழுத்தாளரான அனிதா தேசாய் அந்த விருதைப்பெறவில்லை, ஆனால் அவளது மகள் கிரண் தேசாய் தனது இரண்டாவது நாவலான The Inheritance of …

தாயும் மகளும் Read More »

பால் எர்தோ

If there is a God, he’s a great mathematician.  ~Paul Dirac சில விஞ்ஞானப் புத்தகங்கள் மகத்தான நாவல்களை விட ஆழமாக வாழ்வின் தரிசனங்களை நமக்கு நுட்பமாக அறிமுகப்படுத்தி விடுகின்றன,  குறிப்பாக நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ரிச்சர்ட் பெயின்மெனைப் பற்றி அப்படியான வியப்பு எப்போதுமே எனக்குண்டு, அவரது உரைகள் தத்துவச் செறிவானவை. பெயின்மேனைப் போலவே அலாதியான மனப்போக்கு கொண்ட  கணித மேதையான பால் எர்தோவின் (Paul Erdos ) வாழ்க்கை வரலாற்றை …

பால் எர்தோ Read More »