குற்றாலத்து சிங்கன் சிங்கி.
குற்றாலக்குறவஞ்சியை வாசிப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. திரிகூட ராஜப்ப கவிராயரால் எழுதப்பட்டது. அதிலும் சாரல் அடிக்கும் நாட்களில் குற்றாலத்தில் உள்ள பூங்காவில் அமர்ந்தபடியே குற்றாலக்குறவஞ்சி வாசித்திருக்கிறேன். கண்ணை மூடிக் கொண்டுவிட்டால் காலம் கரைந்து பின்னோடிவிட வசந்தவல்லி பூப்பந்தாடும் காட்சி விரியத்துவங்கிவிடும். குற்றாலத்தின் ஆதிசித்திரம் அந்தக் கவிதைகளில் பதிவாகியுள்ளது. கானகக்குறத்தி வருகிறாள். அவளது எழிலும் குரலும் அதில் வெளிப்படும் காட்டுவாழ்வின் நுட்பங்களும், மழை பெய்யும் மேகமும், அடர்ந்த விருட்சங்களும், …