வெயில் அறிந்தவன்
புதிய குறுங்கதை. கல்லூரி படிப்பைப் பாதியில் விட்டு அவன் ஊர் திரும்பினான். நூறுக்கும் குறைவான வீடுகளைக் கொண்ட கரிசல் கிராமமது. அவனைச் சுற்றும் ஈக்கள் கூட இனி என்ன செய்யப்போகிறாய் என்ற கேள்வியைக் கேட்டன. வேப்பஞ்செடி போல நான் இந்த மண்ணில் வேரூன்றி வளர விரும்புகிறேன் எனக்கு வேறு இடமில்லை என்றான். தாயும் அக்காவும் அவனை நினைத்துக் கலங்கினார்கள். விவசாயியான தந்தை தனது கோபத்தை விறகு பிளப்பதில் காட்டினார். அவன் தன்னை நேசிப்பவர்களை வெறுத்தான். உலர்ந்த நத்தைக்கூடினை …