குறுங்கதை

குறுங்கதை 118 கல்லின் குழந்தைகள்

ஒரு பாறாங்கல் தன்னை விட்டுப் பிரிந்து போன தனது குழந்தைகளைத் தேடிக் கொண்டிருந்தது. கல்லின் குழந்தைகளுக்கு என்ன அடையாளம் எனக்கேட்டது ஒரு புறா. “என்னைப் போலதானிருக்கும். ஆனால் எங்கேயிருக்கிறார்கள் எனத் தெரியாது. மண்ணில் புதையுண்டு போயிருக்கலாம். கட்டிடம் கட்டும் பணியினுள் கலந்துவிட்டிருக்கலாம்.  அல்லது எவரோ கோபத்தில் அதை வீசி எறிந்து ஆயுதமாக்கியிருக்கலாம்“ என்றது பாறாங்கல் “அப்படியானால் உன் பிள்ளைகளைக் கண்டுபிடிப்பது கடினம்“ என்றது புறா. பாறாங்கல் தன் பிள்ளைகளை தேடி வீதி வீதியாக அலைந்தது. கண்ணில்பட்ட கற்கள் …

குறுங்கதை 118 கல்லின் குழந்தைகள் Read More »

குறுங்கதை 117 தொலைந்த பொருட்கள்.

சிறுவயதிலிருந்து தான் தொலைத்த பொருட்களை நினைவு கொண்டு ஒரு பட்டியலை உருவாக்கினான் பரந்தாமன். விளையாட்டுப் பொம்மைகள், சில்லறைக்காசுகள். பென்சில், பேனா, சட்டை, டிபன் பாக்ஸ், சைக்கிள், மணிப்பர்ஸ், குடை, ஸ்பூன், மருந்துப்பாட்டில், கடிதம், காசோலை, விபூதிபாக்கெட், மோதிரம், வீட்டுச்சாவி, பேங்க் பாஸ்புக், ரப்பர் செருப்பு, குடை, தூக்குவாளி, ரசீதுகள். துண்டு, சோப், சான்றிதழ் எனத் தொலைத்த பொருட்களின் பட்டியல் மிகப்பெரியதாக இருந்தது. ஒவ்வொரு மனிதனும் தன்னைப் போலவே இப்படி ஏராளமாகத் தொலைத்திருப்பானில்லையா, தொலைந்து போன பொருட்கள் தனியொரு …

குறுங்கதை 117 தொலைந்த பொருட்கள். Read More »

குறுங்கதை 116 விளையாட்டுச்சிறுவன்.

கள்ளன் போலீஸ் விளையாட்டின் போது வாசு ஒளிந்து கொள்வதற்காக மர ஸ்டூலில் ஏறி தானியங்கள் சேமித்து வைக்கும் குலுக்கையினுள்  குதித்துவிட்டான்.  அவனைத் துரத்தி வந்த சிறுவர்கள் வீட்டின் வெளியே தேடிக் கொண்டிருந்தார்கள். ஒன்பதடி உயரமுள்ள அந்தக் குலுக்கையினுள் தானியமில்லை. ஆனால் இருள் நிரம்பியிருந்தது. நிச்சயம் தன்னை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என வாசுவிற்குச் சந்தோஷமாக இருந்தது. குலுக்கையினுள் நெல் போட்டு வைத்திருந்த வாசம் நாசியில் ஏறியது. அடர்ந்த மணம். காலடியில் எலிப்புழுக்கைகளும் மக்கிப்போன நெல்மணிகளும் தென்பட்டன. அவன் …

குறுங்கதை 116 விளையாட்டுச்சிறுவன். Read More »

குறுங்கதை 115 கசந்த உறவு

அந்தப் பகுதியின் பெரிய பல்பொருள் அங்காடி  ராணி ஸ்டோர்ஸ். இரண்டு தளங்கள் கொண்டது சிவராமன் அந்தக் கடைக்குப் போகும் போதும் கடை உரிமையாளர் அமர்ந்திருக்குமிடத்தில் அவரது தலைக்கு மேலுள்ள சுவர்க்கடிகாரம் ஓடாமல் இருப்பதைக் கவனிப்பார். அது பழைய சாவி கொடுக்கும் கடிகாரம். ஏன் அதற்குச் சாவி கொடுத்து ஓட வைத்தால் என்ன. ஏன் இந்த அசிரத்தை என நினைத்தபடியே வாங்க வேண்டிய பலசரக்குச் சாமான்களை வாங்குவார். பணம் கொடுக்கும் போது உரிமையாளரிடம் கடிகாரம் ஓடவில்லை என்று சொல்லுவார். …

குறுங்கதை 115 கசந்த உறவு Read More »

குறுங்கதை 114 புலியின் சல்யூட்

அந்த சர்க்கஸில் புலியைப் பழக்குவதற்கென ஒருவர் இருந்தார். அவரது பெயர் ரோனி. அது தான் உண்மைப்பெயரா எனத்தெரியாது. பொதுவாக சர்க்கஸ் கலைஞர்கள் வசீகரமான பெயர்களை வைத்துக் கொள்வது வழக்கம். ரோனி நீண்டகாலமாகவே சர்க்கஸில் இருந்தார். காட்டிலிருந்து பிடித்து கொண்டுவரப்படும் புலியைப் பழக்கி சர்க்கஸ் விளையாட்டுகளை செய்ய வைப்பது அவரது வேலை. புலியை பழக்குவது எளிதானதில்லை. புலி பயமற்றது. புலியின் ஒரே பலவீனம் பசி. அதை வைத்துத் தான் ரோனி புலியை கட்டுபடுத்த ஆரம்பிப்பார். தொடர்ந்து பட்டினி போட்டால் …

குறுங்கதை 114 புலியின் சல்யூட் Read More »

குறுங்கதை 113 பூக்களை வரையும் சிறுமி

அந்தச் சிறுமி தான் வரைந்த பூச்செடியை எப்படியாவது உயிருள்ளதாக்கிவிட வேண்டும் என்று முயற்சி செய்தாள். அதனால் ஒவியம் வரையப்பட்ட காகிதத்தை மண்ணில் புதைத்து வைத்தாள். தனது பூச்செடி அப்படியே உயிர்பெற்று எழுந்து வரும் என நம்பினாள். ஆனால் ஒவியச் செடி மண்ணில் முளைக்கவில்லை. அது அவளை வருத்தப்படுத்தியது. காகிதத்தில் வளரும் செடி ஏன் மண்ணில் முளைக்க மறுக்கிறது என வேதனைப்பட்டாள். அடுத்த நாள் முழுச்செடியை வரையாமல் மலர்களை மட்டும் வரைந்தாள். தான் வரைந்த மலர்களை வீட்டின் பின்புறமுள்ள …

குறுங்கதை 113 பூக்களை வரையும் சிறுமி Read More »

குறுங்கதை 112 சொற்கள் இல்லாத புத்தகம்

சொற்கள் இல்லாத புத்தகம் ஒன்றை மியோ பௌத்த மடாலயத்தை சேர்ந்த துறவிகள் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அது அபூர்வமான புத்தகம். வெளியாட்கள் யாரும் அதைக் கண்டதில்லை என்று பத்திரிக்கையாளர் ஜேசன் மார்க் கேள்விபட்டதில் இருந்து அந்தப் புத்தகத்தை காண வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருந்தான். நேபாளத்திலிருந்த மியோ மடாலயத்தில் வெளிநாட்டவர் எவரையும் அனுமதிக்கமாட்டார்கள். அந்த மடாலயத்தின் கதவுகள் ஆண்டுக்கு ஒரு முறை தான் திறக்கபடும். அன்று உள்ளுர்  பொதுமக்கள் வருகை தருவார்கள். மற்ற நாட்களில் புத்த துறவிகள் …

குறுங்கதை 112 சொற்கள் இல்லாத புத்தகம் Read More »

குறுங்கதை 111 ஒற்றைக்கை

முதற்பொய் சொன்ன போது பரமுவின் வயது ஆறு. அப்பா அவனைக் கடைக்குப் போய் தீப்பெட்டி ஒன்று வாங்கி வரச் சொல்லியிருந்தார். ஆனால் அவன் கடைக்குப் போகவில்லை. மாறாக அந்த நாலணாவை கொடுத்துப் பால் ஐஸ் வாங்கிச் சாப்பிட்டு விட்டான். வீட்டிற்கு வெறும் கையோடு வந்த போது அப்பா கோவித்துக் கொண்டார். ஒற்றைக்கையுள்ள பிச்சைக்காரன் ஒருவன் தன்னிடமிருந்த காசை பறித்துக் கொண்டான் என்று முதற்பொய்யைச் சொன்னான் பரமு. அப்பா அதை நம்பிவிட்டார். வேறு எதையும் கேட்கவில்லை. இவ்வளவு எளிதானதா …

குறுங்கதை 111 ஒற்றைக்கை Read More »

குறுங்கதை 110 நின்றபடி உறங்குபவர்

தங்கதுரைக்கு அப்படி ஒரு பழக்கம் எப்படி உருவானது என்று தெரியவில்லை. ஆனால் அவர் வீட்டில் நின்றபடியே உறங்கும் பழக்கம் கொண்டிருந்தார். ஒரு மனிதரால் எப்படி நின்றபடி உறங்க முடியும் என வியப்பாக இருக்கும். ஆனால் தங்கதுரை நின்றபடியே தான் உறங்கினார். ஆழ்ந்த தூக்கத்தில் கிழே விழுந்துவிடுவார் என்று தங்கதுரையின் மனைவி பயந்திருக்கிறாள். ஆனால் ஒரு நாள் கூட உறக்கத்தில் தடுமாறி விழவில்லை. தங்கதுரை ஏன் நின்றபடி உறங்குகிறார் என அவரிடம் பலரும் கேட்டிருக்கிறார்கள். அதற்கு பதில் சொன்னதில்லை. …

குறுங்கதை 110 நின்றபடி உறங்குபவர் Read More »

குறுங்கதை 109 பொம்மைக் கல்யாணம்

மொட்டை மாடியில் சிறுவர்கள் ஒன்று சேர்ந்து பொம்மைக் கல்யாணம் செய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளையாக இருந்த பொம்மையை ஒரு சிறுவன் தனது வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்தான். அது ஒரு சூப்பர்மேன் பொம்மை. மணமகளாக மரப்பாச்சியைக் கொண்டு வந்தவள் வேறு ஒரு சிறுமி. மணமகளை அலங்கரிக்கிறோம் என இரண்டு சிறுமிகள் பிளாஸ்டிக் பூக்களை அதன் தலையில் சொருகினார்கள். மணமகனுக்குக் குதிரை வேண்டும் என ஒரு சிறுவன் தேடி அலைந்து தெருமுனையிலிருந்த ஒரு சிறுவன் வைத்திருந்த பிளாஸ்டிக் குதிரை ஒன்றை …

குறுங்கதை 109 பொம்மைக் கல்யாணம் Read More »