குறுங்கதை

குறுங்கதை 108 பாடும் சுவர்கள்

சாமர்கண்டிற்குப் போகும் வழியில் இருந்த  மலையில் பாதி கட்டிமுடிக்கபடாத சுற்றுசுவர் ஒன்றிருந்தது. சீனப்பெருஞ்சுவர் போல கட்ட வேண்டும் என ஆசைப்பட்ட மன்னர் பணி துவங்கிய சில வாரங்களிலே இறந்துவிட்டதால் அந்தச் சுவர்கள் முடிக்கபடவில்லை என்றார்கள். பதினாறு அடி உயரத்தில் பத்தடி அகலத்தில் அமைக்கபட்டிருந்த அந்த சுவர் மலைப்பாம்பு ஒன்று படுத்துக்கிடப்பது போலிருந்தது. அந்தச் சுவருக்கு ஒரு விசித்திரமிருந்தது. அது சிறுவர்களைக் கண்டால் பாடத்துவங்கியது. பாடும் சுவரைக் காணுவதற்காக யாத்ரீகர்கள் வருகை அதிகமிருந்தது. பெரும்பான்மைப் பயணிகள் தங்களுடன் குழந்தைகளை …

குறுங்கதை 108 பாடும் சுவர்கள் Read More »

குறுங்கதை 107 விமானத்தில் ஒரு அழகி

டோக்கியோ செல்லும் விமானத்தில் ராகேஷின் அடுத்த இருக்கையில் அந்த அழகி அமர்ந்திருந்தாள். பச்சை நிறமான கூந்தல். இயற்கையான கூந்தல் அப்படியிருக்காது தானே. அவள் ஏதோ செயற்கை வண்ணம் பூசியிருந்தாள். விலை உயர்ந்த கூலிங்கிளாஸ் அணிந்திருந்தாள். மெலிதான உதட்டுச்சாயம். கூடைப்பெண் வீராங்கனை போன்ற உடலமைப்பு. உயரம். கறுப்பு நிற உடை அணிந்திருந்தாள். கைவிரலில் பாம்பு மோதிரம் அணிந்திருந்தது விசித்திரமாக இருந்தது. அவள் பூசியிருந்த பெர்ப்யூம் விமானம் முழுவதையும் வாசனை கொள்ளச் செய்வது போலிருந்தது. அவளுடன் என்ன பேசுவது எனத் …

குறுங்கதை 107 விமானத்தில் ஒரு அழகி Read More »

குறுங்கதை 106 மனசாட்சியின் படிக்கட்டுகள்

நூறு வீடுகளுக்கும் குறைவாக உள்ள சிறிய ஊராகயிருந்தது. காரில் வந்து இறங்கிய அவர்களைத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறார்கள் வேடிக்கை பார்த்தார்கள். அதில் ஒரு சிறுவனை அழைத்து கந்தசாமி வேணாங்குளம் எங்கேயிருக்கிறது எனக்கேட்டார். அந்த சிறுவன் பரிகாரமா எனக் கேலியான குரலில் கேட்டபடியே தெற்கே கையை காட்டினான். காரிலிருந்து கந்தசாமியின் மனைவியும் அவரது ஒரே மகளும் பரிகாரம் செய்யச் சொல்லி அழைத்து வந்த ஜோசியரும் இறங்கினார்கள்.  ஜோசியர் அவிழ்ந்த வேஷ்டியை இறுக்கிக் கட்டியபடியே சொன்னார். ரொம்ப பவர்புல்லா …

குறுங்கதை 106 மனசாட்சியின் படிக்கட்டுகள் Read More »

குறுங்கதை 105 அரைநாள் மனுஷி

தாமோதரன் இரும்புக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அன்றாடம் இரவு வீட்டின் கதவைப்பூட்டுவதும் காலையில் கதவைத் திறந்துவிடுவதும் அவரது வேலை. வேறு யாரும் கதவைப்பூட்டவோ திறக்கவோ செய்யக்கூடாது. எத்தனை மணி ஆனாலும் அவர் தான் வீட்டுக்கதவைப் பூட்டுவார். அது போலவே காலையில் அவர் எழுந்து கொள்ளும் வரை அவரது மனைவியோ பிள்ளைகளோ கதவைத் திறந்து வெளியே போக முடியாது.  நாலு மணிக்கு கண்விழித்தாலும் அமுதா அவர் எழுந்து கதவைத் திறக்கும் போது தான் வாசற்தெளிக்கப் போவாள். …

குறுங்கதை 105 அரைநாள் மனுஷி Read More »

குறுங்கதை 104 சதி

தன்னைக் கொல்ல தனது பிள்ளைகளே சதி செய்கிறார்கள் என்பதை டெல்லி சுல்தான் அறிந்திருந்தார். ஆகவே பிள்ளைகள் எவரும் தன்னை நேரில் சந்திக்க வருவதைத் தடுத்து நிறுத்தியிருந்தார். அரண்மனையில் இருந்த பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டார்கள். விஸ்வாசமான பாதுகாவலர்கள் மட்டுமே உடனிருந்தார்கள். தனது மனைவியர் மீதும் அவருக்கு நம்பிக்கையில்லை. ஆகவே அவர்களைக் கோடைகால அரண்மனைக்கு அனுப்பி வைத்துவிட்டார். உணவில் விஷம் கலந்துவிடக்கூடுமோ எனப்பயந்து பழங்களை மட்டுமே சாப்பிட்டு வந்தார். மூன்று மருத்துவர்கள் அவரது உடல்நிலையை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை …

குறுங்கதை 104 சதி Read More »

குறுங்கதை 103 ஒரேயொரு கவிதை

கேதரின் எழுதிய முதற்கவிதை அவள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது கணையாழி இதழில் வெளியாகியிருந்தது. அவளது அப்பா தான் கவிதையைத் தபாலில் கணையாழிக்கு அனுப்பி வைத்தவர். அது கூட அவளுக்குத் தெரியாது. ஒரு நாள் தபாலில் கணையாழி இதழ் வீட்டிற்கு வந்த போது அப்பா அதைப் பிரித்து பார்த்து கேதரின் கவிதை வந்துள்ள சந்தோஷம் மிகுதியால் அவள் படிக்கும் பள்ளிக்கே சென்றார். அப்பா ஏன் திடீரென பள்ளிக்கு வந்திருக்கிறார் எனப்புரியாமல் கேதரின் அவரைத் தேடி ஆபீஸ் ரூமிற்குப் போனபோது அப்பா ஒரு சாக்லெட்டை அவளிடம்  கொடுத்து உன் கவிதை கணையாழியிலே வந்துருக்கு என்றார். அவளால் நம்பமுடியவில்லை. நான் அனுப்பவேயில்லைப்பா என்றாள். நான் தான்மா அனுப்பி வைச்சேன் எனச் சிரித்தார். அவளை அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியர் …

குறுங்கதை 103 ஒரேயொரு கவிதை Read More »

குறுங்கதை 102 கவிதையின் வரவேற்பரை

கவிதையின் வரவேற்பரை‌ மிகவும் சிறியது. அதில் எப்போதும் சிலர் காத்துக் கொண்டிருந்தார்கள். எதற்காக. யாரைக் காண எனத் தெரியவில்லை.‌ஆனால் ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். ஒருவன் சொன்னான் கவிதையில் தோன்றும் சூரியனும் நிலவும் மறைவதேயில்லை. அதைக் காணவே காத்திருக்கிறேன். மற்றவன் சொன்னான் கவிதையினுள் பால்யத்தின் வெண் கடல் இருக்கிறது அதை தேடி போகவே வந்திருக்கிறேன். அடுத்தவன் சொன்னான் கவிதையின் வழியே ரகசிய உலகிற்கு போகமுடியும் என்கிறார்களே அதற்கு தான் காத்திருக்கிறேன். நான்காம் ஆள் சொன்னான் கவிதையினுள் பெண் பறக்கும் உடல் …

குறுங்கதை 102 கவிதையின் வரவேற்பரை Read More »

குறுங்கதை 101 அவனது விளையாட்டு

அந்தச் சிறுவனுக்குப் பந்து அல்லது பொம்மைகளை வைத்து விளையாடுவதில் விருப்பமில்லை. அவன் காணும் பொருட்களுக்குப் புதிய பெயர்களை வைத்து விளையாடும் வழக்கம் கொண்டிருந்தான். குறிப்பாக அவன் வீட்டினைக் கடந்து தினமும் வாத்துக்கூட்டம் செல்வதைக் காணுவான். அந்தக் கூட்டத்தில் விடுபட்டது போலத் தனியே இரண்டு வாத்துகள் செல்வது வழக்கம். அந்த வாத்துகளுக்குக் கினா டினா என அவனாக ஒரு புதுப்பெயர் வைத்தான். தன் பெயர் பற்றி எதுவுமறியாத வாத்து எப்போதும் போல மெதுவாக நடந்து போனது. அந்த வாத்துகளுக்கு …

குறுங்கதை 101 அவனது விளையாட்டு Read More »

குறுங்கதை 100 கடிகாரத் திருடன்

அந்தப் பிக்பாக்கெட் திருடன் முதன்முறையாகக் காந்தியை ஒரு ரயில் நிலையத்தில் தான் பார்த்தான். ஆயிரக்கணக்கில் மனிதர்கள். ஒரே தள்ளுமுள்ளு. ரயிலை விட்டு காந்தியை இறங்கவிடவில்லை. எங்கிருந்து இவ்வளவு பேர் திரண்டு வந்திருந்தார்கள். எதற்காக இந்த மனிதரை இப்படி வணங்குகிறார்கள் என்று அவனுக்குப் புரியவேயில்லை. ஆனால்  சட்டையில்லாத உடலுடன் அந்தக் கிழவர் புன்சிரிப்புடன் நிற்பதைப் பார்க்கையில் மனதில் ஏதோவொரு ஈர்ப்பு உருவானது. கூட்டத்தோடு சேர்ந்து அவனும் காந்தியைப் பார்த்துக் கையசைத்தான். காந்தி இரண்டு நிமிடங்கள் பிளாட்பாரத்தில் நின்று பேசிவிட்டு …

குறுங்கதை 100 கடிகாரத் திருடன் Read More »

குறுங்கதை 99 முறையீடு

ராயப்பன் அந்த வழக்கைத் தொடர்ந்த போது அவருக்குச் சொந்தமாக ஐந்தரை ஏக்கர் நிலமும் பம்ப்செட் ஒன்றும் இருந்தது. உள்ளூரிலே பேசி முடித்துத் தீர்த்து வைத்திருந்தால் எளிதாக முடிந்து போயிருக்கும். ஆனால் அவர் பக்கம் நியாயம் இருந்த போதும் எவரும் உதவிக்கு வரவில்லை. ராயப்பனுக்கு சொந்தமாக ஊரின் மேற்காக ஒன்றரை ஏக்கர் கரிசல் நிலமிருந்தது. அதைக் குத்தகைக்குக் கேட்பதற்காக அவரது தூரத்து உறவினர் கந்தசாமி வந்த போது ராயப்பன் கொடுப்பதற்குத் தயங்கினார்.  ஆனால் கந்தசாமிக்கு ஆதரவாகத் துளசி வாத்தியார் …

குறுங்கதை 99 முறையீடு Read More »