குறுங்கதை

குறுங்கதை 98 சந்தோஷமான முடிவு

ஞாயிறுக்கிழமை காலை தணிகாசலம் தவறாமல் நூலகத்திற்குச் சென்றுவிடுவார். இப்போது அவரது வயது எழுபது . இருபது வயதிலிருந்து அவர் நூலகத்திற்கு சென்று வாசிக்கிறார். கதைகளை மட்டுமே அவர் வாசிப்பார். அதுவும் நாவல்களின் முடிவு சந்தோஷமாக இல்லாவிட்டால் அவராக அடித்துத் திருத்தி சந்தோஷமான முடிவை உருவாக்கி விடுவார். புத்தகம் என்பது வாசிப்பவரின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. அதில் எந்த எழுத்தாளனும் தலையிடமுடியாது என்று அவர் உறுதியாக நம்பினார். மனிதர்களைப் போல ஏன் கதாபாத்திரங்களும் துயரமான முடிவைச் சந்திக்க வேண்டும் என்று …

குறுங்கதை 98 சந்தோஷமான முடிவு Read More »

குறுங்கதை 97 கிணற்றடி பதுமைகள்

அந்தக் கிணற்றை வெட்டியன் சகரமல்லன். வடக்கிலிருந்து வந்த சகரமல்லனும் அவனது ஆட்களும் தென்மாவட்டங்களில் நிறையக் கிணறுகளை வெட்டியிருக்கிறார்கள். இது நடந்தது நானூறு ஆண்டுகளுக்கு முன்பு. சகரமல்லன் வெட்டிய கிணறுகளின் வடிவம் மற்றும் கலை நேர்த்தி வியப்பூட்டக்கூடியது. அப்படி ஒரு கிணறு தான் பரமனின் ஊரிலிருந்தது. அது நல்ல தண்ணீர் கிணறு. அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துத் தான் ஊரே குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து கொண்டது. அந்தக் கிணற்றின் கிழக்கு மற்றும் மேற்கு பக்கம் இரண்டு பதுமைகளைச் …

குறுங்கதை 97 கிணற்றடி பதுமைகள் Read More »

குறுங்கதை 96 சுழலும் கிண்ணம்.

லடாக்கில் உள்ள சாங் பௌத்த மடாலயத்தில் புத்தரின் புனித வார்த்தைகள் வெள்ளி, தங்கம் மற்றும் செப்பு கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த மடாலயத்தைக் காணுவதற்காக நிரஞ்சன் சென்றிருந்தான். லேவிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. அங்கே சிரிக்கும் புத்தர் என்று அழைக்கப்படும் மைத்ரேய புத்தர் சிலை இருபது அடி உயரத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. மடாலயத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து தியானம் செய்யும்படியான பெரிய தியான மண்டபம் இருந்தது. அங்கே தியானம் செய்வதற்காக நிரஞ்சன் சென்றான். ஊசி …

குறுங்கதை 96 சுழலும் கிண்ணம். Read More »

குறுங்கதை 95 சுவரை ஒட்டிய கிளை

வீட்டின் பின்புறமிருந்த மாமரத்தில் சுவரை ஒட்டிய  கிளையில் இதுவரை ஒரு பறவை கூட வந்து அமர்ந்ததேயில்லை. நிறையக் கிளிகளையும் அணில்களையும் அந்த மரத்தில் காணுகிறேன். ஆனால் ஒரு கிளி கூட சுவரை ஒட்டிய கிளையில் அமர்ந்ததேயில்லை. நாம் எந்த வீட்டிற்குப் போனாலும் நமக்கான ஆசனத்தைத் தேர்வு செய்து அமருவது போலத் தான் பறவைகளும் மரத்தில் தனக்கான கிளையில் அமர்கிறதா?. சில நேரம் கிளிகளின் கூட்டமே தரையிறங்கும். அப்போதும் ஒரு கிளி கூட சுவரை ஒட்டிய கிளையில் அமராது. …

குறுங்கதை 95 சுவரை ஒட்டிய கிளை Read More »

குறுங்கதை 94 இப்படியும் ஒரு காதல்

அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகள் கல்வி பயிலுவதற்காக ரகு போயிருந்த நாட்களில் சென்னையிலுள்ள அவனது வீட்டிற்கு ஒரு இளம் பெண் வந்திருக்கிறாள். அவனது அறையிலே தங்கியிருக்கிறாள். அவனது கட்டிலில் படுத்து உறங்கியிருக்கிறாள். புத்தக அடுக்கினைப் புரட்டியிருக்கிறாள். அவனது சிறுவயது புகைப்படங்களை ஆசையாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இதை எல்லாம் அம்மா சொல்லிக் கேட்டபோது ரகுவிற்குக் கூச்சமாக இருந்தது. “ஏன் அந்தப் பெண்ணை அனுமதித்தீர்கள்“ என்று கோவித்துக் கொண்டான் “மோகன் மாமா அழைத்துக் கொண்டு வந்திருந்தார். ஏதோ விளையாட்டுப் போட்டிக்கு …

குறுங்கதை 94 இப்படியும் ஒரு காதல் Read More »

குறுங்கதை 93 தலைமறைவு

பிளேடைப் பாதியாக உடைத்துச் சவரம் செய்யும் பழக்கம் தலைமறைவு காலத்தில் தான் குணாவின் அப்பாவிற்கு ஏற்பட்டது. அரசியல் காரணங்களுக்காகக் அவர் மூன்று ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். அப்போது குணாவிற்கு வயது நான்கு. அப்பா எங்கோ வெளியூர் சென்றிருக்கிறார் என்று தான் வீட்டில் சொல்லியிருந்தார்கள். மணல் தேரிகளுக்குள் இருந்த சிறிய கிராமத்தில் அப்பா அடைக்கலம் புகுந்திருந்தார். அந்த ஊரிலிருந்த நாவிதர் கருப்பையாவின் அண்ணன் என்றே அவரைச் சொல்லி வைத்திருந்தார்கள். தலைமறைவு காலத்தில் அப்பா ஒரு வாளித் தண்ணீரில் குளிக்கப் …

குறுங்கதை 93 தலைமறைவு Read More »

குறுங்கதை 92 பேப்பர் கேமிரா

கோர்ட் வளாகத்திற்குள் கைவிலங்கிடப்பட்டு வீரசேகர் வந்த போது ஒன்றிரண்டு பேரே இருந்தார்கள். நீதிமன்ற விசாரணைக்காக அவனை அழைத்து வந்திருந்த காவலர் யாரோ வழக்கறிஞர் உடன் பேசிக் கொண்டிருந்தார். கோர்ட் துவங்க இன்னும் நிறைய நேரமிருந்தது. அப்போது தான் அந்தப் பெண் கைதியைப் பார்த்தான். அடர் மஞ்சள் நிறத்தில் சுடிதாரும் சிவப்பு நிறத் துப்பட்டாவும் அணிந்திருந்தாள். கண்ணுக்குப் பொருத்தமில்லாத அகலமான கண்ணாடி. குளித்துக் கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்பியவள் போல நெற்றியில் சிறியதாகத் திருநீறு பூசியிருந்தாள். அவளுடன் இருந்த பெண் …

குறுங்கதை 92 பேப்பர் கேமிரா Read More »

குறுங்கதை 91 காதலில் விழுந்த புலி

காட்டிலிருந்த புலியொன்று நீர் அருந்துவதற்காக வந்த குளத்தில் ஒரு சிவப்புக் கொண்டை மீன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டது. அந்த மீனிற்குத் தன்னைக் கண்டுபயமில்லை என்பது புலிக்கு வியப்பாக இருந்தது. புலி தன்னைக் கவனிப்பதை அறிந்தவுடன் சிவப்புக் கொண்டை மீன் வேண்டுமென்றே வாலசைத்து துள்ளியது. புலிக்கு அது வேடிக்கையாகத் தோன்றியது. “என்னை கண்டு பயமில்லையா“ எனக்கேட்டது புலி “தண்ணீரை விட நீ ஒன்றும் பலசாலியில்லை. நான் தண்ணீரில் பிறந்து வளர்ந்தவள்“ என்றது சிவப்புக் கொண்டை மீன் புலிக்குச் …

குறுங்கதை 91 காதலில் விழுந்த புலி Read More »

குறுங்கதை 90 கோபாலன் வீடு

டி.கே.கோபாலனுக்குச் சாவிகள் என்றால் பிடிக்கும். அதுவும் வீட்டுச்சாவியை வைத்துக் கொள்வது என்பது அவரது தனி உரிமை. வீட்டுச்சாவியைச் சட்டைப் பையில் போட்டுக் கொள்ளும் போது அதன் கனம் தாளாமல் பை ஒரு பக்கம் இழுக்கும். அந்தக் கனம் தான் அவரது பொறுப்புணர்வின் அடையாளம். வீட்டை நிர்வகிக்கிறோம் என்பதன் சாட்சியம். ஆகவே அவர் ஒரு போதும் வீட்டுச்சாவியை மனைவியிடமோ, பிள்ளைகளிடமோ தர மாட்டார். அவசரத்திற்கு மாற்றுச்சாவி ஒன்று போட்டு வைத்துக் கொள்வோம் என்று மனைவி சொன்ன யோசனையைக் கூடக் …

குறுங்கதை 90 கோபாலன் வீடு Read More »

குறுங்கதை 88 வஸ்திரம்

நீண்டநாட்களாகத் திரௌபதிக்கு ஒரு ஆசையிருந்தது. மகாராணி காந்தாரியின் கண்களில் கட்டியுள்ள வஸ்திரத்தை ஒருமுறை வாங்கித் தனது கண்ணில் கட்டிப் பார்க்க வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் மகாராணி காந்திரியைச் சந்திக்கவும் தனிமையில் பேசவும் சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை. ஆகவே அவள் காத்துக் கொண்டேயிருந்தாள். யுத்தம் முடிந்து பாண்டவர்கள் வென்ற பிறகு, பிள்ளைகளை இழந்த காந்தாரியும் திருதராஷ்டிரனும் வனம் ஏகப்போகிறார்கள் என்று தெரிந்த நாளில் அவள் தனியே சென்று காந்தாரியைச் சந்தித்தாள். தன் மனதிலிருந்த ஆசையைச் சொன்னாள். காந்தாரி தன் …

குறுங்கதை 88 வஸ்திரம் Read More »