குறுங்கதை

குறுங்கதை 87 காதல் கவிதை.

அவர்கள் இருவரின் காதலுக்கும் நரேன் தான் தூதுவனாக இருந்தான். அப்போது அவனது வயது 12. சுலோச்சனா தினமும் ஒரு சினிமா பாட்டுப்புத்தகம் கொடுத்து அனுப்பி வைப்பாள். அதில் ஏதாவது ஒரு பாடலில் சில வரிகளை அடிக்கோடிட்டு இருப்பாள். நரேன் பாட்டுப்புத்தகத்தைச் சேதுவிடம் கொண்டு போய்க் கொடுப்பான். சேது அப் பாட்டுப்புத்தகத்தைப் புரட்டக்கூட மாட்டான். மாறாக அவன் தான் எழுதிய காதல் கடிதம் ஒன்றை அவளிடம் தரும்படியே அனுப்பி வைப்பான். சில நாட்களில் அவர்கள் சந்தித்துக் கொள்ளும் இடம் …

குறுங்கதை 87 காதல் கவிதை. Read More »

குறுங்கதை 86 குடும்பச் சண்டை.

கடைக்குச் சென்றால் விதவிதமான பூஜாடிகளை வாங்கி வருவது அவளது வழக்கம். இத்தனை ஜாடியிலுமா பூக்களை வைக்கப்போகிறாய் என்று கணவன் கோவித்துக் கொள்வாள். அதற்கு அவள் பூஜாடிகள் பூக்கள் வைப்பதற்காக மட்டும் உருவாக்கப்பட்டவையில்லை என்பாள். அவனால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. வேஸ்ட் ஆப் மணி என்று அவள் காதுபடச் சொல்வான். உடனே அவள் நீ மட்டும் விதவிதமான ஷுக்களை வாங்கி அடுக்கவில்லையா என்று சண்டையிடுவாள். அது உண்மை, அவனிடம் நூற்றுக்கும் மேற்பட்ட காலணிகள் இருந்தன. எந்தப் புது …

குறுங்கதை 86 குடும்பச் சண்டை. Read More »

குறுங்கதை 85 ஓடிப்போனவன்.

பால்காரனுக்குத் தருவதற்காக அம்மா வைத்திருந்த பணத்தைத் திருடிக் கொண்டு வீட்டை விட்டு ஒடிய அந்தப் பையன் தனது சட்டைப் பாக்கெட்டிலிருந்த பணத்தை மறுபடியும் எண்ணிப்பார்த்துக் கொண்டான். சரியாக 638 ரூபாய் இருந்தது. இதை வைத்துக் கொண்டு எங்கே போவது என்ன செய்வது எதுவும் தெரியவில்லை. ஆனால் இனி வீட்டிற்குத் திரும்பிப் போகக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தான். பதின்வயதுகளில் வீடு ஒருவனுக்கு அந்நியமாக ஆரம்பிக்கிறது. வீட்டின் கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள். கெடுபிடிகள் எரிச்சலூட்டுகின்றன. எவர் முகத்தையும் பார்க்கப் …

குறுங்கதை 85 ஓடிப்போனவன். Read More »

குறுங்கதை 84 மறு உத்தரவு.

சீனாவின் வடக்கு எல்லையை ஒட்டியிருந்தது அந்தக் கிராமம். அந்தக் கிராமத்திற்கு ஒரு நாள் அரசாணை ஒன்று வந்தது. அதன் படிப் போர் முடித்துத் திரும்பும் வீரர்களை வரவேற்க ஊரிலுள்ள பெண்கள் யாவரும் அலங்காரம் செய்து கொண்டு, ஊர் முகப்பில் ஒன்று கூடி, கையில் மலர்மாலை ஏந்தி வரவேற்றுப் பாட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. கிராமத் தலைவர் உடனடியாக உத்தரவிற்கு அடிபணிய வேண்டுமெனக் கட்டளையிட்டார். அக்கிராமத்தில் நூற்றுக்கும் குறைவாகவே வீடுகள் இருந்தன. அந்த வீட்டிலிருந்த பெண்கள் பண்டிகை நாட்களில் …

குறுங்கதை 84 மறு உத்தரவு. Read More »

குறுங்கதை 83 சந்தன சோப்.

சங்கரனின் அப்பா மரக்கடை வைத்திருந்தார். அதற்குத் தேவையான மரங்களைக் கேரளாவில் சென்று வாங்கி வருவது வழக்கம்.அப்படி ஒரு முறை லாரியில் கிளம்பும் போது சங்கரனையும் உடன் அழைத்துச் சென்றார். அப்பாவோடு லாரியில் செல்வது சங்கரனை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தியது. வளைந்து செல்லும் மலைப்பாதைகளில் லாரி போகும் போது காற்றுக் கன்னத்தை வருடுவது போல அடித்தது. மூன்று மணி நேரப்பயணத்தின் பிறகு அவர்கள் சர்ப்பக்காவு என்ற கிராமத்தை அடைந்தார்கள். சோலை போல அடர்ந்திருந்த மரங்கள். ஆற்றின் கரையை ஒட்டிய கிராமம். …

குறுங்கதை 83 சந்தன சோப். Read More »

குறுங்கதை 82 இரவில் நடப்பவர்கள்

மலைநகரம் ஒன்றில் வசித்த நான்கு நண்பர்கள் தான் முதலில் அதைத் துவக்கினார்கள். ஆனால் மெல்ல ஒவ்வொருவராக ஆர்வம் காட்டவே அது முப்பது பேர் கொண்ட நடைக்குழுவாக மாறியது. அதில் ஆறு பெண்களும் இருந்தார்கள் அவர்கள் வாரம் சனிக்கிழமை இரவு நடக்கத்துவங்குவார்கள். முழு இரவும் நடப்பார்கள். விடியும் போது எந்த ஊரை அடைகிறார்களோ அங்கே அறை எடுத்துத் தங்கிவிடுவார்கள். மறுநாள் பகல் முழுவதும் உறக்கம். திரும்பி வரும் போது பேருந்தில் பயணம் மேற்கொள்வார்கள். பகலில் நடப்பது போன்றதில்லை இரவில் …

குறுங்கதை 82 இரவில் நடப்பவர்கள் Read More »

குறுங்கதை 81 மறுசந்திப்பு

நாற்பது வருஷங்களுக்குப் பிறகு அவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் மறுமுறை சந்தித்துக் கொள்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. அப்படி ஒரு நிகழ்வினை முன்னெடுத்தவன் மகேந்திரன். அவனே ஒரு வாட்ஸ்அப் குரூப் துவங்கி அதில் பழைய மாணவர்களின் தொலைபேசி எண்களைக் கண்டறிந்து அவர்களுடன் பேசி தேதி குறித்து அந்தச் சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தான். பல்வேறு மாவட்டங்களிலும் பணிக்காகத் தங்கியிருந்தவர்கள் மட்டும் அல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் பங்கேற்க ஆர்வம் காட்டினார்கள் டேனியலுக்கு அந்தச் சந்திப்பிற்குப் போவதில் விருப்பமிருந்தாலும் …

குறுங்கதை 81 மறுசந்திப்பு Read More »

குறுங்கதை 80 மனக்கண்.

காணாமல் போன, திருடு போன பசுமாடுகளைக் கண்டுபிடித்துத் தருவதற்கென ஒரு மனிதர் இருந்தார். சாது சுப்பையா என்ற அவருக்கு எந்த ஊரில் பசு காணாமல் போயிருந்தாலும் அது எங்கே போயிருக்கக்கூடும் என்று தெரிந்துவிடும். கரிசலின் சின்னஞ்சிறிய கிராமம் ஒன்றில் வசித்து வந்த அவரிடம் தங்கள் மாடு பற்றி அறிந்து கொள்வதற்காக வடக்கேயிருந்து கூட ஆட்கள் வருவார்கள். ஒரு கட்டு வெற்றிலை பாக்கும் ஒரு படி உப்பும் தான் அவருக்குக் காணிக்கை. சாது சுப்பையாவின் ஞானதிருஷ்டி தான் பசுவைக் …

குறுங்கதை 80 மனக்கண். Read More »

குறுங்கதை 79 ஐந்தாம் தேதி

அப்போது கதிருக்கு பதிமூன்று வயது நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதி எப்போது வரும் எனக் காத்துக் கொண்டேயிருப்பான் ஐந்தாம் தேதி தான் மயில்வாகனம் மாமா சம்பளம் வாங்குவார். அன்று மாலை கதிரையும் அவன் தம்பி தங்கைகளையும் ஹோட்டலுக்கு அழைத்துக் கொண்டு போவார். அந்த நாளுக்காகக் காத்து கிடப்பான். மயில்வாகனம் மாமா குமார் ஸ்டோரில் கணக்காளராக வேலை செய்தார். திருமணம் செய்து கொள்ளவில்லை. தனி அறை எடுத்துத் தங்கியிருந்தார். அப்பா தான் தென்காசியிலிருந்த அவரை வரவழைத்து …

குறுங்கதை 79 ஐந்தாம் தேதி Read More »

குறுங்கதை -78 இந்தியா எனும் கனவு.

1487ல் எஸ்மரால்டா கப்பல் லிஸ்பனிலிருந்து புறப்பட்டது. ஆனால் ஒன்றரை வருஷங்களாகியும் அவர்களால் இந்தியாவிற்குச் செல்லும் வழியைக் கண்டறிய முடியவில்லை. கடலில் சுற்றி அலைந்து கொண்டிருந்தார்கள். அக்கப்பலில் இருந்தவர்களுக்கு இந்தியா என்பது ஒரு சொல்லில்லை. கனவு. அக் கப்பலின் கேப்டன் ஒரு கிளி வளர்ந்து வந்தான். அது நாள் முழுவதும் இந்தியா இந்தியா என்று சொல்லிக் கொண்டேயிருந்தது. இந்தியா என்பது வீதியெல்லாம் பொன்னும் மணியும் கொட்டிக்கிடக்கும் தேசம் எனக் கடலோடிகள் நம்பினார்கள். எவர் முதலில் சென்று சேருகிறார்களோ அவர்களுக்கே பொக்கிஷங்கள் …

குறுங்கதை -78 இந்தியா எனும் கனவு. Read More »