குறுங்கதை

குறுங்கதை 77 மறதியின் காப்பகம்

அந்த ஷாப்பிங் மாலில் பார்வையாளர்கள் மறந்து விட்டுப் போன பொருட்களைப் பாதுகாத்து ஒப்படைப்பதற்கெனத் தனி அறையொன்று இருந்தது. அதன் நிர்வாகியாக இருந்தான் சிவானந்தம். வீட்டுச்சாவிகள். பைக், கார்சாவிகள். ஹேண்ட்பேக்குகள், கர்சீப், மணிபர்ஸ், குடை, சிறுவர்களின் காலணிகள், செல்போன்கள், வங்கி அட்டைகள், விளையாட்டுப் பொம்மைகள். குடிநீர் பாட்டில்கள். மூக்குக் கண்ணாடி, சில்லறைக் காசுகள். மாத்திரைகள், விக்ஸ் டப்பா, கால்கொலுசுகள் சிகரெட் லைட்டர்கள் போன்றவற்றைத் தான் மறந்து போன பொருட்களாக இருக்கும். சுத்தம் செய்யும் பணியாளர்கள் அவற்றை எடுத்து வந்து …

குறுங்கதை 77 மறதியின் காப்பகம் Read More »

குறுங்கதை 76 தந்தையும் மகளும்.

சுதந்திரத்திற்கு முந்திய இந்தியாவின் சிறிய சமஸ்தானங்களில் ஒன்றாக இருந்தது கைசூர். அதன் மன்னராக இருந்த முக்திபோத் தன்னுடைய ஒரே மகள் கௌரியை ராம்கரில் திருமணம் செய்து கொடுத்திருந்தார். அந்த இரண்டு ஊர்களுக்கும் நடுவே ஒரு ஆறு ஓடியது. ஆற்றின் ஒரு கரையில் கைசூர் இருந்தது. மறுகரையில் ராம்கர். அன்றாடம் முக்திபோத் விடிகாலை  எழுந்தவுடன் தன் கையாலே மகளுக்கு விருப்பமான சிவப்பு ரோஜாவைப் பறித்து ஒரு தங்கப்பெட்டியில் வைத்து அனுப்பி வைப்பார். அதை அரண்மனையிலிருந்து  ஒரு வீரன் எடுத்துக் …

குறுங்கதை 76 தந்தையும் மகளும். Read More »

குறுங்கதை 75 ஒரு வழக்கு

1949ல் முர்ஷிதாபாத் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் துவங்கிய போது எழுத்தாளர் ஏவம் சக்கரவர்த்திக்கு வயது 41. நவபிரஜா பதிப்பகம் தனது நாவலைத் திருடி சுனில் பிரசாத் என்ற எழுத்தாளரின் புதிய நாவலாக வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இது ஒரு மோசடி. சுனில் பிரசாத்தின் நாவலைத் தடைசெய்வதோடு, இதை வெளியிட முன்வந்த நவபிரஜா மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்குத் தொடுத்தார் ஏவம் சக்கரவர்த்தி மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர் என்பதால் அவரது வழக்கு குறித்த செய்தி தினசரிகளில் …

குறுங்கதை 75 ஒரு வழக்கு Read More »

குறுங்கதை 74 கோவில் யானை.

யானை கொட்டடிக்குள் சிறுவர்களை அனுமதிக்கமாட்டார்கள். தகரக்கூரை வேய்ந்த பழைய கொட்டடியது. சுப்ரமணிய சுவாமி கோவிலுக்குச் சொந்தமான யானை அங்கேயிருந்தது. ஒரு ஊரில் ஒரேயொரு யானை மட்டும் தனியே வாழ்வது விசித்திரமானது. அதற்குத் துணையே கிடையாதா என்று சிறுவர்கள் பேசிக் கொள்வார்கள். அந்த யானையை வாரம் வெள்ளிக்கிழமை மட்டும் கோவிலுக்கு அழைத்து வருவார்கள். மற்ற நாட்களில் அது கொட்டடியிலே தானிருக்கும். யானைப்பாகன் அழுக்கான வேஷ்டி கட்டியிருப்பான். சதா யானையின் அருகில் உட்கார்ந்து பீடி பிடித்துக் கொண்டிருப்பான். யானையின் கண்கள் …

குறுங்கதை 74 கோவில் யானை. Read More »

குறுங்கதை 73 முயல் பொம்மை

விற்பனை பிரதிநிதியாக வேலை செய்த அவனுக்கு மாதத்தில் இருபது நாள் வெளியூர் செல்ல வேண்டியதாகியிருந்தது. ஆரம்பத்தில் புதுப்புது தங்கும் விடுதியினைத் தேடிப் போய்த் தங்குவான். ஆனால் நான்கு ஆண்டுகள் அனுபவத்தின் முடிவில் எந்த ஊரில் எந்த லாட்ஜ் சிறந்தது. என்ன உணவகத்தில் சாப்பிடலாம் என்று நன்றாகத் தெரிந்து வைத்திருந்தான். பெரும்பாலும் அவனது வேலை காலை பத்து மணிக்குத் துவங்கி மதியம் இரண்டு மணியோடு முடிந்துவிடும். மாலை ஆறுமணிக்குப் பிறகே அடுத்த ஊருக்குக் கிளம்புவான். மதியம் சாப்பிட்டு விட்டு …

குறுங்கதை 73 முயல் பொம்மை Read More »

குறுங்கதை 72 ஆரஞ்சு நிறப்பந்து

கல்கத்தாவிலிருந்து அந்தக் கால்பந்தை வாங்கி வந்திருந்தார் மாமா. கதிருக்குச் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. எப்போது விடியும் எப்போது மைதானத்திற்குக் கொண்டு போய் விளையாடலாம் என இரவெல்லாம் காத்துக் கொண்டிருந்தான். சேலஞ்ச் என்று எழுதப்பட்ட ஆரஞ்சு நிறப் பந்து. அது போன்ற ஒன்று யாரிடமும் கிடையாது. அந்தப் பெருமையோடு அதிகாலையில் மைதானத்தை நோக்கி நடந்து போக ஆரம்பித்தான். காந்தி மைதானம் மிகப்பெரியது. அதன் மேற்கு பக்கம் எப்போதும் பெரிய பையன்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். போட்டிகள் கூட அங்கே நடப்பதுண்டு. …

குறுங்கதை 72 ஆரஞ்சு நிறப்பந்து Read More »

குறுங்கதை 71 வாஸ்கோடகாமாவின் அடிமை.

1498 ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா கோழிக்கோடு துறைமுகத்திற்குக் கப்பலில் வந்திறங்கிய போது அவனுடன் மூர் இனத்தைச் சேர்ந்த சில அடிமைகளும் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் தான் மிலா. உண்மையில் அது அவனது பெயரில்லை. அவனது விசித்திர உருவத்தைக் கண்ட மக்கள் அவனை மிலா என்று அழைத்தார்கள். மன்னரின் விருந்தினராக வாஸ்கோட காமா மூன்று மாதங்கள் தங்கியிருந்த நாட்களில் மிலா சுற்றுப்புறக் கிராமங்களில் அலைந்து திரிந்தான். நீர் நிலைகளும் வானுயர்ந்து நிற்கும் தென்னை மரங்களும் மிளகுகொடிகளும் பசுக்களும் அழகான …

குறுங்கதை 71 வாஸ்கோடகாமாவின் அடிமை. Read More »

குறுங்கதை 70 ஒரு சொல்.

ஆம்பலார் என்று அழைக்கப்படும் ஆம்பல் கந்தசாமி கவிராயருக்கும் மேலகரம் கச்சிநாதனுக்கும் இடையில் நன்னூல் சூத்திரம் ஒன்றுக்குப் பொருள் சொல்லுவதில் ஏற்பட்ட கருத்து மோதல் தீராப்பகையாக மாறியது. ஆம்பலார் தனது கருத்துக்கு ஆதரவாகப் புகழ்பெற்ற தமிழறிஞர் பலரையும் ஒன்று சேர்ந்தார். இது போலவே கச்சிநாதனையும் தமிழ்ப் புலவர்கள் பலரும் ஆதரித்தார்கள் இந்தக் கருத்துவேறுபாட்டின் காரணமாக ஆம்பலார் கலந்து கொள்ளும் விழா எதிலும் கச்சிநாதன் கலந்து கொள்வதில்லை. கச்சிநாதன் தலைமை பதவி வகித்த பொதிகை தமிழாய்வு மலரில் ஆம்பலாரோ, அவரது …

குறுங்கதை 70 ஒரு சொல். Read More »

குறுங்கதை 69- சிண்ட்ரெல்லாவின் நரை.

சிண்ட்ரெல்லாவிற்கு வயதாகியிருந்தது. எள்ளுப்பூவின் வெண்மையிலிருந்தது அவளது தலை. இப்போது அவள் மன்னர் நடத்தும் எந்த விருந்திலும் கலந்து கொள்வதில்லை. நீண்டகாலமாகவே அவளது மாயச்செருப்புகள் பயன்படுத்தப்படாமல் தங்கப்பெட்டியினுள் இருந்தன. அரண்மனை வாழ்க்கை சிண்ட்ரெல்லாவை மிகவும் மாற்றியிருந்தது. மாற்றாந்தாயின் கொடுமையில் வசித்த நாட்களில் பசித்த வேளைகளில் அவளுக்கு உணவு கிடைக்காது. நல்ல உடைகள் இருக்காது. அலங்காரம் செய்து கொள்ள முடியாது. ஏன் சப்தமாகப் பாட்டுப்பாடக்கூட முடியாது. ஆனால் இளவரசனைத் திருமணம் செய்து கொண்டபிறகு, போதும், போதும் எனச் சலிக்குமளவு உடைகளும் …

குறுங்கதை 69- சிண்ட்ரெல்லாவின் நரை. Read More »

குறுங்கதை 68 முற்றுப் பெறாத ஓவியம்

தான் திருடிய வீடுகளில் படம் வரைந்து விட்டுச் செல்லும் ஒரு திருடன் இருந்தான். இவ்வளவு அருமையாக ஓவியம் வரையத் தெரிந்தவன் ஏன் திருடன் ஆனான் என்று திருட்டுக் கொடுத்த வீட்டோர் நினைக்குமளவு அவனிருந்தான் திருட வந்த தனக்கு ஒரு பயமும் இல்லை என்பதன் அடையாளம் போலவே அவன் ஓவியம் வரைந்து போனான் என்றார்கள் சிலர். ஆனால் வேறு சிலரோ அவன் திருடிய பொருளுக்கு இணையாக இப்படி ஒரு ஓவியத்தை வரைந்து போயிருக்கிறான் என்றார்கள். காவல்துறை அதிகாரிகளோ அவன் …

குறுங்கதை 68 முற்றுப் பெறாத ஓவியம் Read More »