குறுங்கதை 67 பாஷோவின் தோழி
ஜென் கவிஞர் பாஷோவின் தோழியும், சாமுராய் சுனேரியின் மனைவியும் ஆறு குழந்தைகளின் தாயுமான டென் சுடேஜோ எப்போதாவது தான் கவிதைகள் எழுதுவாள். அதுவும் சமைக்கிற நேரம் தான் அவளுக்குக் கவிதைகள் மனதில் தோன்றும். சமையலறைச் சுவரில் வரையப்பட்டிருந்த கொக்கின் அருகில் சென்று தன் மனதிலிருந்த கவிதையை அவள் மெல்லிய குரலில் பாடுவாள். ஒவியக்கொக்கு தான் அவளது கவிதையின் வாசகன். இறக்கை விரிந்து பறக்கும் வெண்ணிறமான அந்தக் கொக்கு கேட்டால் போதும் என்று டென் சுடேஜோ மகிழ்ச்சி அடைந்தாள். …