குறுங்கதை

குறுங்கதை 57 நீராக மாறியவர்கள்.

நினைத்த மாத்திரத்தில் தண்ணீராக மாறக்கூடிய நான்கு குள்ளர்கள் இருந்தார்கள். அவர்களின் வேலை வாசனையற்ற மலர்களைக் கண்டறிந்து தனது விரல்தொடலின் மூலம் அந்த மலருக்கு வாசனை தருவது. வாசனையில்லாத மலரின் ஏக்கம் விவரிக்கமுடியாதது. இருட்டில் பறக்கும் பறவையின் கேவலைப் போல உலகம் அறியாதது. குள்ளர்கள் உலகின் அத்தனை மலர்களும் மணம் கொண்டிருக்க வேண்டும் என நினைத்தார்கள். இதற்காகக் காடு மலைசுற்றி அறியப்படாத சிறு மலரை அடையாளம் கண்டு அதற்கொரு வாசனையைக் கொடுத்தார்கள். புதிய வாசனையைப் பெற்றுக் கொண்ட மலர்கள் …

குறுங்கதை 57 நீராக மாறியவர்கள். Read More »

குறுங்கதை 55 கணிதப்புதிர்

கணிதப்புதிர் ஒன்றிற்குத் தீர்வு காணுவதற்காக ஆர் எஸ் சர்மா தனது வாழ்நாளில் எழுபது ஆண்டுகளைக் கழித்திருந்தார். அவரது பதினாறாவது வயதில் ஒரு நாள் பள்ளி ஆசிரியரும் வானவியல் அறிஞருமான அவரது தந்தை அழைத்து அந்தக் கணிதப்புதிரைப் பற்றிச் சொன்னார். இதுவரை உலகில் எவராலும் அந்தக் கணிதப்புதிர் தீர்த்துவைக்கப்படவில்லை. ஆகவே அதைச் சர்மா தீர்த்துவிட்டால் உலகின் கவனம் அவர் மீது விழும். கணிதமேதையாகக் கொண்டாடப்படுவார் என்று சொன்னார் தந்தை. சர்மா தந்தையிடமிருந்தே கணிதம் கற்றுக் கொண்டார். ஒன்பது வயதிற்குள் …

குறுங்கதை 55 கணிதப்புதிர் Read More »

குறுங்கதை 54 இது வேறு ஜன்னல்

பூங்காவில் அந்த மனிதர் பேசிக் கொண்டிருப்பதை ஒரு இளைஞன் கேட்டுக் கொண்டிருந்தான். “ என் வீட்டின் ஜன்னல்களை எண்ணமுடியாது.. ஒவ்வொரு ஜன்னலைத் திறக்கும் போது நான் காணும் காட்சிகள் வேறு வேறானவை. மனிதர்கள் நிறைய ஜன்னல்கள் உள்ள வீடுகளில் வசிக்க வேண்டும். எந்த ஜன்னல் வழியாக உலகை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என்று தெரியாது. வெட்டவெளி கற்றுத்தராததை ஜன்னல்கள் கற்றுத் தந்துவிடக் கூடியது என்றார் அந்த மனிதர் “உங்கள் வீடு எங்கேயிருக்கிறது “எனக்கேட்டான் அந்த இளைஞன் “மாதா …

குறுங்கதை 54 இது வேறு ஜன்னல் Read More »

குறுங்கதை 53 பூச்சரம் சூடிய குரங்கு

அந்தக் குரங்காட்டியையும் அவனது பெண்குரங்கினையும் ஊரே அறிவார்கள். எப்போதும் தனது தோளில் குரங்கை உட்கார வைத்துக் கொண்டு அவன் சுற்றிக் கொண்டிருப்பான். சாப்பிடப்போகும் போதும் கூட அருகில் உட்கார வைத்து தனது இலையிலிருந்த உணவை அதற்கும் தருவான். அவன் சலூனில் சென்று முடிவெட்டிக் கொள்ளும் போது அக்குரங்கு கண்ணாடியில் தன்னைப் பார்த்தபடியே இருக்கும். சில வேளைகளில் அந்தப் பெண் குரங்கிற்கு அவன் பூச்சரம் வாங்கிச் சூடிவிடுவான். பெரும்பாலும் அவன் பள்ளியின் முன்னால் மாலைநேரங்களில் வித்தை காட்டுவது வழக்கம். …

குறுங்கதை 53 பூச்சரம் சூடிய குரங்கு Read More »

குறுங்கதை 52 சிற்பியான எலி

அந்த நகரில் ஒரு எலி சிற்பியாக வாழ்ந்து வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒருநாள் பேக்கரி ஒன்றின் உள்ளே இரவில் திருடப் போகையில் அங்கே செய்து வைக்கப்பட்டிருந்த விதவிதமான கேக்குகளையும் அதன் அலங்கார வடிவத்தையும் கண்ட அந்த எலி அவற்றை உண்ணும் சிற்பங்களாகவே கருதியது. ஆகவே தானும் அப்படியான சிற்பங்களைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டது. திருடி வந்த கேக்துண்டினை வைத்துக் கொண்டு சிற்பம் செய்து பார்த்தது. ஆரம்பத்தில் அந்த எலி நினைத்தது போலச் சிறிய உருவத்தைக் …

குறுங்கதை 52 சிற்பியான எலி Read More »

குறுங்கதை 51 மூன்று கிளிகள்

பறவைகளை யாராவது சகோதரிகள் என்று நினைப்பார்களா ?. வள்ளி ஆச்சி அப்படி நினைத்தாள். அன்றாடம் தன்னுடைய வீட்டின் பின் சுவரில் வந்தமரும் மூன்று கிளிகளை அவள் அக்கா தங்கைகள் என்றே கருதினாள். அக்கிளிகளும் சகோதரிகளைப் போலவே ஒன்றாக வாலசைத்தன. மூன்று கிளிகளைப் போலத் தான் ஆச்சியும் மூன்று பெண்களில் ஒருத்தியாகப் பிறந்தாள். ஆனால் அவளது மூத்த சகோதரிகள் பத்து ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்கள். ஆச்சிக்கும் வயது எழுபதைக் கடந்தாகிவிட்டது. அரண்மனை போலப் பெரிய வீடு. வீட்டின் ஜன்னல்களை …

குறுங்கதை 51 மூன்று கிளிகள் Read More »

குறுங்கதை 50 ஒரு துளி கண்ணீர்

“சிரமம் வேண்டாம் வெளியிலே சாப்பிட்டுக் கொள்கிறேன்“ என்றான் நாதன். ஆனால் பழனி கேட்கவேயில்லை. “எப்போதும் வெளியே தானே சாப்பிடுகிறீர்கள். இன்றைக்கு என் வீட்டிற்கு மதியம் சாப்பிட வாருங்கள்“ என்றார். எவ்வளவோ மறுத்தும் பழனி கேட்கவில்லை. மதியம் ஒரு மணிக்குச் சாப்பிட வருவதாக ஒத்துக் கொண்டான். இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்தார்கள். முப்பத்தியெட்டு வயதாகியும் நாதன் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனியறை எடுத்துத் தங்கியிருந்தான். பழனி புறநகரில் குடியிருந்தார். தெரிந்தவர் வீட்டில் போய்ச் சாப்பிடுவது கூச்சமானது. எதைச் …

குறுங்கதை 50 ஒரு துளி கண்ணீர் Read More »

குறுங்கதை 49 சாப்ளினின் கண்ணாடி

சார்லி சாப்ளின் ஒரு அதிசயமான கண்ணாடியை வைத்திருந்தார் என்கிறார்கள். சாப்ளினைத் தவிர வேறு யாரும் அந்தக் கண்ணாடியைப் பார்க்க அனுமதிக்கபடவில்லை. இந்த உலகில் ஒரேயொரு மனிதன் பார்க்கும் கண்ணாடி ஒன்று இருப்பது எத்தனை சந்தோஷமாக இருக்கிறது. எத்தனை ஆயிரம் பேர் பார்த்தாலும் கண்ணாடியில் எந்தச் சுவடுமிருப்பதில்லை. சாப்ளின் அந்தக் கண்ணாடியை அவரே உருவாக்கிக் கொண்டார். அவரது படுக்கை அறையில் அந்தக் கண்ணாடி இருந்தது. படப்பிடிப்பிற்குச் செல்லும் முன்பு அதன் முன்னால் வந்து நின்று பார்ப்பார். கண்ணாடி மௌனமாக …

குறுங்கதை 49 சாப்ளினின் கண்ணாடி Read More »

குறுங்கதை 48 அன்னாகரீனினா பொம்மை வாங்குகிறாள்

தனது மகன் செர்யோஷாவின் பிறந்தநாளுக்குப் பரிசளிக்க விளையாட்டுப் பொம்மைகளை வாங்க விரும்பினாள் அன்னாகரீனினா. மனிதர்கள் தராத ஏதோவொரு அன்பை, நெருக்கத்தைப் பொம்மைகள் தருகின்றன. அதைச் சிறுவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். கணவனையும் மகனையும் விட்டுப் பிரிந்து காதலனுடன் வாழும் அன்னாவிற்கு எந்தப் பொம்மையை வாங்குவது எனத் தெரியவில்லை. மனக்குழப்பம் கொண்டவர்களால் பொம்மைகளைத் தேர்வு செய்ய இயலாது. பொம்மைகள் களங்கமின்மையின் அடையாளம். மௌனத்துணை. பொம்மைகள் வழியாகவே சிறுவர்கள் தங்களைப் பெரியவர்களாக உணருகிறார்கள். அதனால் தான் பொம்மைக்கு ஒரு சிறுமி சோறு ஊட்டுகிறாள். …

குறுங்கதை 48 அன்னாகரீனினா பொம்மை வாங்குகிறாள் Read More »

குறுங்கதை-47 26ம் பக்கம்

அந்த நாவலின் 26ம் பக்கம் தனியே வீதியில் கிடந்தது. எப்படி நாவலிலிருந்து வெளியேறி வந்தோம் என அதற்குத் தெரியவில்லை. ஒரு நாவலை விட்டு வெளியேறிய பிறகு தனது வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்றும் அதற்குத் தெரியவில்லை. நாவலின் பகுதியாக இருந்தவரை அதற்குப் பெரிய பொறுப்புகள் எதுவுமில்லை. 26ம் பக்கத்தில் ஒரேயொரு வீடும் அதில் வசிக்கும் பெண்ணும் மட்டுமே இருந்தார்கள். அந்தப் பெண் நாள் முழுவதும் தனித்தே இருந்தாள். எப்போதாவது அவளுக்கு ஒரு கடிதம் வரும். வெளிநாட்டிலிருந்த அவளது …

குறுங்கதை-47 26ம் பக்கம் Read More »