குறுங்கதை

குறுங்கதை -46 உறவென்பது.

அவனது பெரியப்பாவின் வீடு அதே தெருவில் தானிருந்தது. ஆனால் இந்த முப்பத்தைந்து வருசத்தில் ஒருமுறை கூட அவன் பெரியப்பா வீட்டிற்குப் போனதேயில்லை அப்பா இறந்தபிறகு அம்மாவும் பாட்டியும் தான் அவனை வளர்த்தார்கள். மிகவும் கஷ்டமான குடும்பச் சூழல். வறுமை. அப்போதும் கூடப் பெரியப்பா ஒருவேளை சோறு போட்டதேயில்லை. எப்போதாவது அவர்கள் வீட்டினைக் கடந்து போகையில் அவனைக் கண்டதும் பெரியப்பா முகத்தைத் திருப்பிக் கொண்டுவிடுவார். அப்பா இறக்கும் முன்பாகவே பெரியப்பாவிற்கும் அவருக்கும் சண்டை. அதுவும் பூர்வீக சொத்தைப் பெரியப்பா …

குறுங்கதை -46 உறவென்பது. Read More »

குறுங்கதை 45 இளமையின் படிக்கட்டுகள்

அவர் ஓய்வு பெறுவதற்கு இன்னமும் மூன்று ஆண்டுகளே இருந்தன. அந்த அலுவலகத்தின் உயர்பதவியிலிருந்தார். ஒவ்வொரு நாளும் காலையில் அலுவலகம் வந்து சேர்ந்தவுடன் அவருக்கு நீண்டகாலம் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது போன்ற அசதி வந்துவிடும். திடீரென உடல் கனமாகிவிட்டதைப் போல உணருவார். எல்லாப் பொருட்களும் பார்த்துப் பழகியவை. அதே ஊழியர்கள். அதே ஜன்னல். அதே திரைச்சீலை. கண்ணாடி டம்ளர்கள்.மரமேஜை. நாற்காலி. ஏன் கழிப்பறையில் ஓடும் கரப்பான் பூச்சி கூடப் பார்த்துப் பார்த்துப் பழகியது தான். எதுவும் புதியதில்லை. எதிலும் …

குறுங்கதை 45 இளமையின் படிக்கட்டுகள் Read More »

குறுங்கதை 43 சாப்பாட்டுக்கணக்கு

தேரடித் தெருவிலிருந்தது அந்தச் சிறிய சைவ உணவகம். அங்கே வேலை செய்த ஒரு சர்வருக்கு விசித்திரமான பழக்கமிருந்தது. ஒரு நாளில் யார் யார் எவ்வளவு தொகைக்குச் சாப்பிட்டார்கள் என்ற பில் கணக்கைத் துல்லியமாக மனதில் வைத்திருப்பான். அந்த நாளின் முடிவில் அன்று மிக அதிகமான தொகைக்குச் சாப்பிட்டவர் யார் என்று தேர்வு செய்வான்.அதில் அவனுக்கு ஒரு சந்தோஷம். அவனிடம் இப்படி ஒரு திறமை இருப்பது யாருக்கும் தெரியாது. சில நேரம் அவன் தோசை என்பதற்குப் பதிலாக ரூ …

குறுங்கதை 43 சாப்பாட்டுக்கணக்கு Read More »

குறுங்கதை 42 கடைசிப் பரிட்சை

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் அவனுக்கு ஒரு கடிதம் வரும். அந்தக் கடிதத்தில் அவன் எழுத வேண்டிய பரிட்சை பற்றியும் அதற்கான நாள் மற்றும் இடம் குறிப்பிடப்பட்டிருக்கும். குறிப்பிட்ட நாளில் அந்த இடத்திற்குத் தேடிப் போய்ப் பார்த்தால் அப்படியொரு பரிட்சை மையமேயிருக்காது. அவனைப் போல வேறு யாராவது பரிட்சை எழுத தேடி வந்திருப்பார்களா எனத்தேடிப் பார்ப்பான். ஆனால் வேறு எவருக்கும் அப்படி ஒரு கடிதம் வந்திருக்காது. கல்லூரி நாட்களில் அவன் M.A பிலாசபி படித்தான். அதில் ஒரு …

குறுங்கதை 42 கடைசிப் பரிட்சை Read More »

குறுங்கதை 41 சிவப்பு ஸ்வெட்டர் அணிந்த பெண்

அந்தப் பெண்ணை மெட்ரோ ரயிலில் முதன்முறையாகப் பார்த்த போது சிவப்பு நிற ஸ்வெட்டர் அணிந்திருந்தாள். மிகவும் ஒல்லியான உடல்வாகு. ஆனால் சற்றே பெரிய கண்கள். நறுக்கிய ஆப்பிள் துண்டு போலச் சிறிய உதடு. தோளில் ஆரஞ்சு வண்ண கைப்பை. அவளிடம் அபூர்வமான அழகு வெளிப்பட்டது. அதை அவள் அறிந்திருப்பாளா எனத் தெரியவில்லை. ஆனால் ரயிலிலிருந்தவர்கள் அத்தனை பேரும் அதை உணர்ந்தார்கள். அவள் ரயிலிலிருந்த யாரையும் ஏறிட்டு பார்க்கவில்லை. வாசனைத் திரவியத்தைத் தரையில் கொட்டிவிட்டால் குபீர் என்று எழுமே …

குறுங்கதை 41 சிவப்பு ஸ்வெட்டர் அணிந்த பெண் Read More »

குறுங்கதை 40 அந்த மனிதன்

அடர்ந்த காட்டினுள் அமைக்கப்பட்டிருந்த காவல் கோபுரத்தில் அந்த மனிதன் வேலை செய்தான். காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்கு வருபவர்களைத் தடுப்பதும், எதிர்பாராமல் காட்டு தீ ஏற்பட்டால் அதைத் தடுக்க ஏற்பாடுகள் செய்வதுமே அவனது வேலை. அந்த மனிதனுக்கு வயது ஐம்பதைக் கடந்திருந்தது. அக்காவல் கோபுரத்தில் சிறியதொரு மரப்பெட்டி, உயரமான நாற்காலி. துப்பாக்கி பைனாக்குலர் டார்ச் லைட் தொலைத்தொடர்பு சாதனங்கள், குடிநீர் மற்றும் தேவையான உணவுப்பொருட்கள் இருந்தன. இவற்றோடு கூடவே ஒரு புத்தகமும் வைத்திருந்தான். ஜெனிசன் தொகுத்த ஏழு தேவதைகள் …

குறுங்கதை 40 அந்த மனிதன் Read More »

குறுங்கதை 39 நாவலின் விதி

அந்த நூலகத்திலிருந்த புத்தக அடுக்கில் இரண்டு நாவல்கள் அருகருகே இருந்தன. ஒரு நாவலின் கதாநாயகன் இன்னொரு நாவலின் கதாநாயகியை ரகசியமாகக் காதலித்தான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த நாவலுக்குள் எட்டிப்பார்த்து அவளுடன் பேசவும் பழகவும் முற்பட்டான். அவளும் அவனை விரும்பினாள். ஆனால் தனது காதலை நாவலின் மற்ற கதாபாத்திரங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்களே எனக் கவலைப்பட்டாள். ஆகவே கவலையோடு விலகியே இருந்தாள். நாவலாக இருந்தாலும் அறியாத ஒரு ஆணும் பெண்ணும் காதலிப்பதை மற்ற கதாபாத்திரங்கள் ஒத்துக் கொள்வார்களா …

குறுங்கதை 39 நாவலின் விதி Read More »

குறுங்கதை 38 பேரனுபவம்

அந்தத் தீவு முழுவதும் தென்னை மரங்கள் நிரம்பியிருந்தன. மிக உயரமாக இருந்த தென்னை மரத்திலிருந்து ஒரு தேங்காய் தன் வாழ்க்கையில் பெரிய அனுபவம் எதுவுமில்லையே எனப் புலம்பிக் கொண்டிருந்தது. தென்னை அதற்குப் பதில் தரவில்லை. ஒவ்வொரு நாளும் அந்தத் தேங்காய் காலடியில் ஆர்ப்பரிக்கும் கடலைப் பார்த்து எத்தனை அழகாகயிருக்கிறது. அதில் பயணம் போனால் எவ்வளவு ஆசையாக இருக்கும் என ஏங்கியது. முடிவில் ஒரு நாள் அந்தத் தேங்காய் மரத்திலிருந்து உதிர்ந்து கடலில் விழுந்தது. அலையாடும் கடலை அது …

குறுங்கதை 38 பேரனுபவம் Read More »

குறுங்கதை 37 பிரியாத் துணை

பாபுராஜ் என்ற அந்தக் கிழவருக்கு வயது எண்பத்திரெண்டாகிறது. அவரது மனைவி சாந்தினிக்கு அவரை விடவும் நான்கு வயது குறைவு. அவர்கள் இருவரும் நகரை விட்டு விலகிய புறநகர்ப் பகுதியில் வசித்தார்கள். அவர்கள் வீடு கட்டத்துவங்கும் போது அந்தப் பகுதியில் நான்கே வீடுகள் இருந்தன. இப்போது ஐநூறுக்கும் மேலாக வீடுகள் வந்துவிட்டன. கிழவர் தன் மனைவியின் மீது தீராத அன்பு கொண்டிருந்தார். கிழவியும் அப்படியே. அவர்கள் இருவரும் விளையாட்டுச் சிறுவர்கள் போலவே நடந்து கொள்வார்கள்.. இருவரும் ஒன்றாக நடைப்பயிற்சிக்குப் …

குறுங்கதை 37 பிரியாத் துணை Read More »

குறுங்கதை 36 கூந்தலில் வழியும் அருவி.

மலையுச்சியிலிருந்து பூமியை நோக்கி அருவி கொட்டுவதைப் போலத் தனது கூந்தலிலிருந்து பாதம் நோக்கி நீரைப் பொழிந்து கொண்டிருக்கும் ஒரு பெண் இருந்தாள். ஆம். கூந்தலில் அருவியைச் சூடியவள் என அழைக்கப்பட்ட அப்பெண்ணின் தலையிருந்து அருவி போலத் தண்ணீர் பகலிரவாக வழிந்தோடிக் கொண்டேயிருந்தது. அடர்ந்த கருங்கூந்தல் கொண்ட அந்தப் பெண்ணிற்கு முப்பது வயதிருக்கக் கூடும். வெண்கலச்சிலை போன்ற உடலமைப்பு. விளக்கின் சுடர் போன்ற கண்கள். திருமணம் செய்து கொண்ட மூன்று வாரத்தில் அவள் கணவன் கடலோடியாகப் போய்விட்டான். பதிமூன்று …

குறுங்கதை 36 கூந்தலில் வழியும் அருவி. Read More »