நாவல்கள்

குறுங்கதைகள் -3 பறவைகளின் தையற்காரன்

மேற்குமலையின் அடர்ந்த வனத்தை நெடுங்காடு என்றார்கள். அந்த நெடுங்காட்டினை அடுத்த கிராமம் ஒன்றில் ஆதன் என்ற தையற்காரன் வசித்து வந்தான். இயந்திரத்தைப் பயன்படுத்தாமல் தானே ஊசிகள் செய்து தனது கையால் அவன் தையல்வேலைகள் செய்துவந்தான். கிராமவாசிகளுக்கான உடைகளைத் தைத்துக் கொடுப்பதல்ல அவனது வேலை. அவன் பறவைகளின் தையற்காரன். பறவை தனது உதிர்ந்த இறகினை  கவ்விக் கொண்டு வந்து அவனிடம் தந்து தனது ரெக்கையோடு சேர்த்துத் தைத்துவிடச் சொல்வது வழக்கம். தனது விசேச ஊசிகளைக் கொண்டு கச்சிதமாக அதைப் …

குறுங்கதைகள் -3 பறவைகளின் தையற்காரன் Read More »

வாழ்த்துகிறேன்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் எழுத்தாளர் வண்ணதாசன்.  பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் இருவருக்கும் கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கிறது. இதற்கான பட்டமளிக்கும் விழா இன்று அக்டோபர் 22 -ம் தேதி தஞ்சையில் நடைபெறுகிறது. தனது கவித்துவ எழுத்துகளால் தமிழ் இலக்கியத்திற்குப் பெருமை சேர்ந்தவர் வண்ணதாசன். அன்பின் துணை கொண்டு இந்த உலகின் குரூரங்களை, அபத்தங்களை வென்றுவிட முடியுமெனக் காட்டும்  அற்புதமான படைப்புகளை உருவாக்கியவர் வண்ணதாசன். ரெனார், மோனே போன்ற புகழ்பெற்ற ஒவியர்கள் இயற்கையைத் தனது தூரிகையின் வழியே வசீகரமான ஒவியங்களாக …

வாழ்த்துகிறேன் Read More »

சிறப்பு சலுகை

தேசாந்திரி பதிப்பகம் அறிவித்துள்ள  சலுகை ஏப்ரல் 12 முதல் 24 வரை தேசாந்திரி பதிப்பகத்தின் அனைத்து நூல்களுக்கும் இருபது சதவீதம் தள்ளுபடி தேசாந்திரி பதிப்பகத்தில் நேரடியாக வாங்குபவர்களுக்கு மட்டுமே இச்சலுகை. அலுவலக முகவரி ••• இச்சலுகையோடு தேசாந்திரி இணையதளத்தின் வழியே புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு கூரியர் செலவு  இலவசம் தொடர்புக்கு https://www.desanthiri.com/ விலைப்பட்டியல்

பல்கலைக்கழகத்தில்

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் எனக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. இதை துணைவேந்தர் பாஸ்கர் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்வினைச்  சிறப்பாக வடிவமைத்து ஏற்பாடு செய்தவர் சிறந்த கல்வியாளரும் எழுத்தாளருமான முனைவர் அ.ராமசாமி. ஒரிசாவின் முன்னாள் கவர்னர் எம்.எம். ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்வில் பேராசிரியர் தி.சு. நடராஜன், எழுத்தாளர் ரவிக்குமார். எழுத்தாளர் இமயம், எழுத்தாளர் சோ.தர்மர் ஆகியோர் கலந்து கொண்டார்கள். மதிய அமர்வில் விமர்சகர் முருகேச பாண்டியன். விமர்சகர் நவீனா, மற்றும் …

பல்கலைக்கழகத்தில் Read More »

நன்றிகள்

சாகித்ய அகாதமி விருது பெறுவதற்காக டெல்லி சென்று இன்றிரவு  சென்னை திரும்பினேன். டெல்லியில் நிறைய நண்பர்களைச் சந்திக்க முடிந்தது மிகுந்த மகிழ்ச்சி தருவதாக அமைந்தது. விருது வழங்கும் நிகழ்வை ஒளிபரப்பு செய்த ஊடகங்களுக்கும் செய்தி வெளியிட்ட நாளிதழ்களுக்கும் நன்றி. இணையத்தில் நிறைய நண்பர்கள் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள் அவர்களுக்கும் நன்றி. சிற்பி பாலசுப்ரமணியம், மாலன், பாரதிபாலன். புதுவை முருகன், தமிழவன், உள்ளிட்ட  சாகித்ய அகாதமி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் டெல்லியில் ஐந்து நாட்களும் உடனிருந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள். …

நன்றிகள் Read More »

புத்தக வெளியிட்டு விழா

தேசாந்திரி பதிப்பகம் சார்பில்  இந்த ஆண்டு வெளியாகவுள்ள எனது புதிய நூல்கள் சிவப்பு மச்சம் – சிறுகதை தொகுப்பு ரயில் நிலையங்களின் தோழமை – பயணக்கட்டுரைகள் கதைகள் செல்லும் பாதை – உலகச் சிறுகதைகள் குறித்த கட்டுரைகள் பறந்து திரியும் ஆடு – சிறார் நாவல் பெயரற்ற நட்சத்திரங்கள் – உலக சினிமா கட்டுரைகள் புதிய நூல்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 25 மாலை ருஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறவுள்ளது. அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க …

புத்தக வெளியிட்டு விழா Read More »

அமேஸானில் கவிஞர் பிரமிள்

எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் முயற்சியால் கவிஞர் பிரமிளின் நூல்கள் தற்போது அமேஸானில் ஈபுக்காக விற்பனைக்கு கிடைக்கின்றன. ••• பிரமிள் (1939-1997), நவீன தமிழ் இலக்கியத்தின் சாதனையாளர்களில் குறிப்பிடத்தக்கவர். தருமு சிவராம் என்றும் அறியப்பட்டவர். காலாதீதத்திலும் இக்கணத்திலும் அலையும் அவருடைய கவிதையும் ஆய்வுக்கூர்மை, தீவிரம், பன் முகத்தன்மை நிறைந்த அவருடைய விமர்சனமும் அவரது இருபெரும் சிகரங்கள். மேலும் புனைகதை, நாடகம், ஓவியம், சிற்பம், ஆன்மீகம், மறை முக ஞானம் ஆகியவற்றிலும் அவரது ஆற்றலும் வெளிப்பாடும் உயரிய நிலையைப் பெற்றுள்ளன. …

அமேஸானில் கவிஞர் பிரமிள் Read More »

எலியின் பாஸ்வேர்டு

தேசாந்திரி பதிப்பக வெளியீடு – 6 சிறார்களுக்காக எழுதியுள்ள கதை. பாம்புகளிடமிருந்து தங்களை பாதுகாக்க கொள்ள எலிகள் ஒன்று கூடி தங்கள் வளையை டிஜிட்டல் கதவு ஒன்றைக் கொண்டு மூடிவிட திட்டமிட்ட கதை. அட்டை வடிவமைப்பு ஹரி பிரசாத் ••

போர்ஹெஸ்

போர்ஹெஸ் சிறுகதைகள், கட்டுரைகள் கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பினை யாவரும் பதிப்பகம் சிறப்பாக பதிப்பித்துள்ளது. போர்ஹெஸை தமிழுக்கு அறிமுகம் செய்து அவரது கதைகள் கவிதைகளை  தொடர்ந்து மொழியாக்கம் செய்தவர் கவிஞர் பிரம்மராஜன். அவரது மீட்சி சிறுபத்திரிக்கை உலகில் மிகவும் தனித்துவமான இதழாகும். உலக இலக்கியங்களை தமிழுக்கு அறிமுகம் செய்தததில் மீட்சி பெரும்பங்கு வகித்திருக்கிறது. ஆங்கிலப் பேராசிரியரான பிரம்மராஜன் சிறந்த கவிஞர், மொழிபெயர்ப்பாளர், குற்றாலம் கவிதை பட்டறையை கலாப்ரியாவோடு இணைந்து நடத்தியவர். பிரம்மராஜன் தொகுத்த போர்ஹெஸ் சிறுகதைகள் முன்னதாக ஸ்நேகா …

போர்ஹெஸ் Read More »