பல்கலைக்கழகத்தில்

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் எனக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. இதை துணைவேந்தர் பாஸ்கர் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்வினைச்  சிறப்பாக வடிவமைத்து ஏற்பாடு செய்தவர் சிறந்த கல்வியாளரும் எழுத்தாளருமான முனைவர் அ.ராமசாமி.

ஒரிசாவின் முன்னாள் கவர்னர் எம்.எம். ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்வில் பேராசிரியர் தி.சு. நடராஜன், எழுத்தாளர் ரவிக்குமார். எழுத்தாளர் இமயம், எழுத்தாளர் சோ.தர்மர் ஆகியோர் கலந்து கொண்டார்கள். மதிய அமர்வில் விமர்சகர் முருகேச பாண்டியன். விமர்சகர் நவீனா, மற்றும் கவிஞர் ஆத்மார்த்தி கலந்து கொண்டு எனது படைப்புலகம் குறித்த செறிவான கலந்துரையாடலை நிகழ்த்தினார்கள். அனைவருக்கும் என் அன்பும்  நன்றியும்.

0Shares
0