டான்டூனின் கேமிரா – ஆங்கிலத்தில்
சிறார்களுக்காக நான் எழுதியுள்ள டான்டூனின் கேமிரா நூல் ஆங்கிலத்தில் வெளியாகவுள்ளது. தற்போது மொழிபெயர்ப்பு பணி முடிந்துள்ளது. சென்னை புத்தகக் கண்காட்சியில் இதனை வெளியிடலாம் என்று நினைக்கிறேன்.
சிறார்களுக்காக நான் எழுதியுள்ள டான்டூனின் கேமிரா நூல் ஆங்கிலத்தில் வெளியாகவுள்ளது. தற்போது மொழிபெயர்ப்பு பணி முடிந்துள்ளது. சென்னை புத்தகக் கண்காட்சியில் இதனை வெளியிடலாம் என்று நினைக்கிறேன்.
கணேஷ்பாபு சிங்கப்பூரில் வசிப்பவர். தீவிரமான இலக்கிய வாசகர். எழுத்தாளர். இவரது முதற்சிறுகதை தொகுப்பு வெயிலின் கூட்டாளிகள் யாவரும் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. கணேஷ்பாபுவின் சிறுகதைகள் வடிவ ரீதியாக புதிய முன்னெடுப்புகளைக் கொண்டிருக்கின்றன. கவித்துவமான மொழியில் கதை சொல்கிறார். நடுத்தர வர்க்கத்தின் அன்றாட உலகினை, குறிப்பாக அவர்களின் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அகப்போராட்டங்களை சித்தரிக்க முயலும் இக்கதைகள் மீபுனைவின் கூறுகளை இரண்டாம் இழையாக கொண்டு கதையை புதுமையாக்குகின்றன. வாழ்க்கை குறித்த ஆழமான தத்துவார்த்த கேள்விகளை எழுப்பும் இவரது கதைகள் …
எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா பற்றி மக்கள் குரல் நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி நன்றி மக்கள் குரல்
நேற்று எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிரம்பிய கூட்டம். நிறைய இளைஞர்கள் வந்திருந்தார்கள். கோவை, சேலம், திருச்சி, மதுரை, தஞ்சை. கும்பகோணம் என பல ஊர்களிலிருந்தும் நிகழ்விற்காக வாசகர்கள் வந்திருந்தது மகிழ்ச்சி அளித்தது. திருப்புகழ் ஐஏஎஸ் எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவலை வெளியிட்டுச் சிறப்பான உரையை நிகழ்த்தினார். ஒரு நாவலை எப்படி வாசிக்க வேண்டும். அதில் எந்தெந்த விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதைப் பற்றி அவரது பார்வைகள் மிக முக்கியமானவை. அபாரமான …
ஏழு புகழ்பெற்ற லத்தீன் அமெரிக்கப் படைப்பாளிகளின் நேர்காணல்கள் கொண்ட Seven voices தொகுப்பினை வாசித்தேன். ரீடா கிபர்ட் நேர்காணல் செய்திருக்கிறார். எழுத்தாளர்களின் நேர்காணல்களை வாசிக்கும் போது அவர்கள் படைப்புகளுக்கு வெளியே பகிர்ந்து கொள்ள விரும்பும் அபிப்ராயங்கள். இலக்கிய நுட்பங்கள். அரசியல் நிலைப்பாடுகள். உணவுப்பழக்கங்கள். வாசிப்புப் பழக்கம். இசை மற்றும் பொது ரசனை குறித்து அதிகம் தெரிந்து கொள்ள முடியும். இந்தத் தொகுப்பு எழுத்தாளர்களின் விரிவான நேர்காணலைக் கொண்டது. ஐம்பது பக்கங்களுக்கும் மேலாக ஒருவரது நேர்காணல் இடம்பெற்றுள்ளது. லத்தீன் …
உலகெங்கும் சூரியகாந்திப்பூக்களைக் காத்திருப்பின் அடையாளமாகவே கருதுகிறார்கள். ஆனால் ஓவியர் வான்கோ அவற்றைப் புரிந்து கொள்ளப்படாத சந்தோஷத்தின் வடிவமாகக் காணுகிறார். அவர் வரைந்த சூரியகாந்திப்பூக்களின் ஓவியங்கள் லண்டன், டோக்கியோ, ம்யூனிச், ஆம்ஸ்டர்டாம், பிலடெல்பியா ஆகிய ஐந்து நகரங்களின் கலைக்கூடங்களில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வான்கோவின் சூரியகாந்திப்பூக்கள் பற்றி Sunflowers (2021) என ஒரு ஆவணப்படம் வெளியாகியுள்ளது. டேவிட் பிக்கர்ஸ்டாஃப் இயக்கியுள்ளார். இவர் முன்னதாக வான்கோ பற்றி இரண்டு ஆவணப்படங்களை உருவாக்கியிருக்கிறார் இந்தப் புதிய ஆவணப்படத்தில் பிக்கர்ஸ்டாஃப் சூரியகாந்திப் பூக்கள் …
டிசம்பர் 25 சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு ரஷ்ய கலாச்சார மையத்தில் எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம். முகக் கவசம் அணிந்து வருவது கட்டாயம். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். வெளியிடப்படவுள்ள நூல்கள் மண்டியிடுங்கள் தந்தையே / நாவல் ஐந்து வருட மௌனம் / சிறுகதை தொகுப்பு காந்தியின் நிழலில் / கட்டுரைத் தொகுப்பு நேற்றின் நினைவுகள் / கட்டுரைத் தொகுப்பு டான்டூனின் கேமிரா / சிறார் நாவல் காலத்தின் …
பார்வையற்றவர்கள் வாசிப்பதற்காக பிரெயில் முறையில் டான்டூனின் கேமிரா என்ற எனது சிறார் நூல் வெளியிடப்படுகிறது. இதனைச் சாத்தியப்படுத்தியவர் எனது நண்பர் ஆடிட்டர் சந்திரசேகர். தேசிய பார்வையற்றோர் சம்மேளனம் சார்பில் இதனைக் கொண்டுவருகிறார்கள். அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துகளும் இந்த நூலும் டிசம்பர் 25 மாலை சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் வெளியிடப்படுகிறது.
பொது நூலகங்கள் குறித்தும் நூலகத்தில் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றிய நினைவுக்குறிப்புகளும் கொண்ட புத்தகம். நூலகமனிதர்கள் டிசம்பர் 25 மாலை சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறும் விழாவில் வெளியிடப்படுகிறது இந்நூலை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது
திசை எட்டும் இம்மாத இதழில் எனது சிறுகதையின் ஆங்கில மொழியாக்கம் வெளியாகியுள்ளது. மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் டாக்டர் சந்திரமௌலி.