விகடன் இணையதளத்தில்

ஆனந்தவிகடன் இணையதளத்தில் எனது நேர்காணல் வெளியாகியுள்ளது. “கூழாங்கல்லின் மௌனம் போன்றதே எனது நிதானம்”- எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்பு நேர்காணல் நா.கதிர்வேலன் தமிழ் இலக்கிய உலகின் வசீகர படைப்பாளுமைகளில் ஒருவர் எஸ். ராமகிருஷ்ணன். தன் எழுத்து வாழ்வில் காவிய கட்டத்தில் நிற்கிற அவர் தற்போது ‘மண்டியிடுங்கள் தந்தையே’ என்ற தலைப்பில் டால்ஸ்டாயை முன்வைத்து நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார். வரும் ஆண்டின் புத்தகத் திருவிழாவின் முக்கியமான புத்தகமாக இந்நாவல் வாசகர் மனம் கவரக் காத்திருக்கிறது. அதற்கான உரையாடலாக நடந்தது இந்த சந்திப்பு. …

விகடன் இணையதளத்தில் Read More »

டான்டூனின் கேமரா

ஒரு எறும்பு போட்டோகிராபராக மாறும் கதை தான் டான்டூனின் கேமரா இந்த சிறார் நூலுக்காக அழகிய வண்ண ஓவியங்களை பிரபல ஓவியர் கே.ஜி. நரேந்திரபாபு வரைந்து கொடுத்திருக்கிறார் டிசம்பர் 25 மாலை சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் இந்நூல் வெளியிடப்படவுள்ளது தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

காற்றில் பறக்கும் வேட்டைக்காரர்கள்

ஜார்ஜ் கேட்லின்(George Catlin) ஓவியங்களில் காணப்படும் அமெரிக்கப் பூர்வகுடிகளின் வாழ்க்கை வியப்பூட்டக்கூடியது காட்டெருமைகளைத் துரத்தி வேட்டையாடும் ஓவியத்தில் அந்த எருமைகள் ஓடிவரும் வேகமும் நிலவெளியின் பிரம்மாண்டமும் வில்லேந்தியபடியே குதிரையில் வரும் இனக்குழுவின் ஆவேசமும் பரவசமளிக்கின்றன. கூட்டமாகக் காட்டெருமைகள் பாய்ந்து வருவதை எவ்வளவு அழகாக வரைந்திருக்கிறார். உடலை வளைத்துத் திரும்பி வில்லேந்தும் வீரனின் தோற்றமும் எருதுகளின் ஆவேசப் பாய்ச்சலும் ஒவியத்தை உயிரோட்டமாக்குகின்றன. வேகத்தை ஓவியத்தில் கொண்டு வருவது எளிதானதில்லை. அதிலும் அகன்ற நிலவெளியின் ஊடே குதிரை வீரர்கள் காற்றில் …

காற்றில் பறக்கும் வேட்டைக்காரர்கள் Read More »

மண்டியிடுங்கள் தந்தையே

டால்ஸ்டாய் நாவலுக்கான அட்டை வடிவமைப்பினை முடித்து மணிகண்டன் அனுப்பியிருந்தார். மிக நன்றாக வந்துள்ளது. நாவலின் அட்டைப்படம் சரியாக வரவேண்டும் என்பதற்காக பத்திற்கும் மேற்பட்ட அட்டைகள் வடிவமைத்துப் பார்த்துவிட்டோம். எதுவும் என் மனதிற்கு நெருக்கமாகயில்லை முடிவில் டால்ஸ்டாயின் இந்த படமும் அதிலுள்ள அவரது முகபாவமும் நாவலின் மையக்கதைக்கு மிக நெருக்கமாக இருந்தது. இதுவே நாவலின் அட்டை வடிவம். நாவல் கெட்டி அட்டை பதிப்பாக வெளியாகிறது விலை ரூ 350 டிசம்பர் 25 மாலை சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் …

மண்டியிடுங்கள் தந்தையே Read More »

ஜீவன் லீலா

காகா காலேல்கர் இந்திய நதிகளைத் தேடிச் சென்ற தனது பயணத்தை ஜீவன்லீலா என்ற நூலாக எழுதியிருக்கிறார். மிக முக்கியமான புத்தகம். இதைப் பற்றி நான் தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். நீண்டகாலமாக அச்சில் இல்லாத இந்த நூலை சாகித்ய அகாதமி மீண்டும் பதிப்பித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கூட என்னிடம் ஒரு வாசகர் இதன் பிரதியை நீண்டகாலமாகத் தேடிவருவதாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். சாகித்ய அகாதமி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இந்த நூலைப் பெறலாம். சென்னைப் புத்தகக் கண்காட்சியில் …

ஜீவன் லீலா Read More »

அழைப்பிதழ்

டிசம்பர் 25 மாலை ஆறுமணிக்கு எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்

வாதவூரடிகள்

கடந்த வாரத்தில் மதுரையில் இருந்தேன் டிசம்பர் 11 மகாகவி பாரதி பிறந்த நாள் ஆகவே எட்டயபுரம் வரை சென்று வரலாமா என்றொரு எண்ணம் தோன்றியது. ஆனால் அன்று காலையில் எழுந்தவுடன் திருவாதவூரில் உள்ள மாணிக்கவாசகர் சன்னதிக்குப் போய் வரலாம் என்று தோன்றியது. பாரதிக்கும் மாணிக்கவாசகருக்கும் நிறைய நெருக்கம் இருப்பதாகவே உணர்கிறேன். எனது வீட்டில் மாணிக்கவாசகரின் திருவுருவச்சிலை வைத்திருக்கிறேன். திருவாசகம் எனக்கு மிகவும் பிடித்தமான புத்தகம். அதன் கவித்துவ மேன்மையை எண்ணி வியந்து போகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு …

வாதவூரடிகள் Read More »

பெயரும் நினைவும்

அமெரிக்க உரைநடைக்கவிதையில் குறிப்பிடத்தக்கவர் ரஸல் எட்சன். இவரது கவிமொழியும் கருப்பொருட்களும் வசீகரமானவை. அபத்தமும் விசித்திரமும் கொண்ட உரைநடைக்கவிதைகளை எழுதுகிறார். ரஸல் எட்சனின் தந்தை ஒரு கார்டூனிஸ்ட். ஆகவே ரஸலும் இளமையில் ஒவியத்தில் ஆர்வம் காட்டியிருக்கிறார். 1950 களில் கவிதைகளை வெளியிடத் தொடங்கிய எட்சன். உரைநடை கவிதைகளில் நிறையப் பரிசோதனைகள் செய்திருக்கிறார். GODFATHER OF THE PROSE POEM IN AMERICA என்று சிறப்பிக்கப்படும் எட்சன் Appearances, (Thing Press, 1961); A Stone Is Nobody’s, (Thing …

பெயரும் நினைவும் Read More »

திரையெங்கும் முகங்கள்

உலக சினிமா குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இத்தாலிய நியோ ரியலிசப் படங்களில் துவங்கி சென்ற ஆண்டு ஆஸ்கார் விருது பெற்ற படங்கள் வரையான பல்வேறு நாடுகளின் திரைப்படங்களை அறிமுகம் செய்யும் இந்நூல் திரை அழகியலின் மாற்றங்களை அடையாளப்படுத்துகிறது

சிறிய உண்மைகள்

போர்ஹெஸ் தனது The Book of Sand கதையில் NEITHER THE BOOK NOR THE SAND HAS ANY BEGINNING OR END என்கிறார் வாசிப்பின் போது சில வரிகள், சில நிகழ்வுகள். நினைவுகள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். அவற்றைச் சேகரித்து வைத்துக் கொள்வேன். இவை எழுத்தாளனுக்கான கச்சாப் பொருட்கள். எழுத்தின் ஆதாரங்களைப் பற்றிப் பேசும் இந்தக் கட்டுரைகள் எனது இணையதளத்தில் வெளியானவை. தேசாந்திரி பதிப்பகம் வெளியிடும் இந்நூல் டிசம்பர் 25 மாலை ரஷ்ய கலாச்சார …

சிறிய உண்மைகள் Read More »