லிவோச்சாவின் குற்றமனது.

தஸ்தயேவ்ஸ்கியின் மனதால் பார்க்கப்படும் லிவோச்சாவின் காதல் த.அரவிந்தன் `மண்டியிடுங்கள் தந்தையே’ படித்து முடித்தேன். இது ரஷ்ய நிலத்தின், டால்ஸ்டாய் நிலத்தின் நாவல். அதற்கேற்ப உறைபனியின் குளுமையைத் தாங்கி இருக்கிறது. காலமும் அதில் அமைதியாக உறைந்து கிடக்கிறது. எல்லோரையும் போல ரஷ்ய நிலத்தின் பனியை எப்படிக் கொண்டு வரப் போகிறீர்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், நாவலைப் படிக்கத் தொடங்கிய பிறகு ஒரு நிலத்தில் பெய்கிற மழையைப்போலத்தான் பனியும், அதைக் கையாளுவதற்குச் சிரமம் இருக்காது என்பதைப்போலத் தோன்றியது. அதே …

லிவோச்சாவின் குற்றமனது. Read More »

காதலின் நினைவில்

 ‘ஒரு சிறிய விடுமுறைக்காலக் காதல் கதை’ (நாவல்) – வாசிப்பனுபவம் ந. பிரியா சபாபதி, மதுரை. காதல் எனும் அன்பானது இவ்வுலகில் பிறந்த யாரையும் விட்டுவைப்பதில்லை. அது அனைவரின் மனத்திலும் நிழலாடிக் கொண்டிருக்கிறது. இதைக் கடந்து வராதவர்கள் எவரும் இல்லை. பலர் தம் மனத்தில் எழும் அன்பினைச் சொற்களின் வழியே அன்பானவர்களின் செவிக்குள் விழச் செய்கின்றனர். பலர் அதைத் தம் மனத்திற்குள்ளேயே திரையிட்டு மறைத்து விடுகின்றனர். எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் ‘ஒரு சிறிய விடுமுறைக்காலக் காதல் கதை’யை …

காதலின் நினைவில் Read More »

அரிசி யானை- உப்பு யானை

தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றான விட்டல்ராவின் நதிமூலம் சுதந்திரப் போராட்ட நாட்களின் சாட்சியமாக எழுதப்பட்டிருக்கிறது. நாமக்கல் நகரை இதை விடச் சிறப்பாக யாரும் எழுதிவிட முடியாது. ஒரு ஆவணப்படம் போல நகரின் தொன்மையான வீதிகளையும் அதன் மனிதர்களையும் நாவல் அழகாகச் சித்தரித்துள்ளது. விட்டல்ராவ் ஒரு ஓவியர் என்பதால் காட்சிகளைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார். எத்தனை கதாபாத்திரங்கள். மறக்கமுடியாத நிகழ்வுகள். காலத்தின் நீரோட்டம் நாவலை முன்னெடுத்துப் போகிறது மதராஸிலிருந்த நீல் சிலையை அகற்ற வேண்டும் என்பதற்காக நடந்த போராட்டம் …

அரிசி யானை- உப்பு யானை Read More »

வாழ்த்துகள்

இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் அம்பைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். மிகச்சிறந்த சிறுகதைகளை எழுதியுள்ள அம்பை மும்பையில் வசிக்கிறார். சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை என்ற சிறுகதைத் தொகுதிக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. •• சிறார் இலக்கியத்திற்காக வழங்கப்படும் பாலபுரஸ்கார் விருது கவிஞர் மு. முருகேஷிற்கு வழங்கப்பட்டுள்ளது. முருகேஷிற்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள். அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை என்ற நூலிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது ••

கற்பனை நாளிதழ் – விசித்திர மனிதர்கள்.

வெஸ் ஆண்டர்சன் எழுதி, இயக்கியுள்ள ஃபிரெஞ்ச் டிஸ்பாட்ச் திரைப்படம் சினிமாவின் அனைத்து சாத்தியங்களையும் பயன்படுத்திப் புதியதொரு அனுபவத்தைத் தருகிறது. உண்மையில் சினிமாவின் அடுத்த கட்டம் இதுவென்பேன். ஆண்டர்சனின் திரைமொழி ஒன்றுக்குள் ஒன்றாக விரியும் சிறார் கதைப்புத்தகங்களை நினைவூட்டக்கூடியது. அவருடைய பெரும்பாலான காட்சிகள் விசித்திர கதைகளைக் கொண்ட புத்தகத்தைப் படிப்பது போன்ற உணர்ச்சியைத் தரக்கூடியது. நடிகர்களின் விசித்திரமான தோற்றம் மற்றும் வெளிப்பாடு, அடர் வண்ணங்களைப் பயன்படுத்துவது, துள்ளலான இசை, வியப்பூட்டும் அரங்க அமைப்புகள். இவை அவரது படங்களின் விசேச …

கற்பனை நாளிதழ் – விசித்திர மனிதர்கள். Read More »

ஜாக் லண்டன் நாவல்

டாக்டர் சந்திரமௌலி ஜாக் லண்டனின் ஒயிட் ஃபேங் நாவலை மொழியாக்கம் செய்திருக்கிறார். சர்வதேச அளவில் மிகவும் கொண்டாடப்பட்ட நாவலிது. 1906ல் வெளியான இந்நாவல் திரைப்படமாக வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்றது. டாக்டர் சந்திரமௌலி இதனைச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். தேசாந்திரி பதிப்பகம் சார்பில் இந்நூல் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியாகிறது

டான்டூனின் கேமிரா – ஆங்கிலத்தில்

சிறார்களுக்காக நான் எழுதியுள்ள டான்டூனின் கேமிரா நூல் ஆங்கிலத்தில் வெளியாகவுள்ளது. தற்போது மொழிபெயர்ப்பு பணி முடிந்துள்ளது. சென்னை புத்தகக் கண்காட்சியில் இதனை வெளியிடலாம் என்று நினைக்கிறேன்.

இரண்டு இழைகள்

கணேஷ்பாபு சிங்கப்பூரில் வசிப்பவர். தீவிரமான இலக்கிய வாசகர். எழுத்தாளர். இவரது முதற்சிறுகதை தொகுப்பு வெயிலின் கூட்டாளிகள் யாவரும் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. கணேஷ்பாபுவின் சிறுகதைகள் வடிவ ரீதியாக புதிய முன்னெடுப்புகளைக் கொண்டிருக்கின்றன. கவித்துவமான மொழியில் கதை சொல்கிறார். நடுத்தர வர்க்கத்தின் அன்றாட உலகினை, குறிப்பாக அவர்களின் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அகப்போராட்டங்களை சித்தரிக்க முயலும் இக்கதைகள் மீபுனைவின் கூறுகளை இரண்டாம் இழையாக கொண்டு கதையை புதுமையாக்குகின்றன. வாழ்க்கை குறித்த ஆழமான தத்துவார்த்த கேள்விகளை எழுப்பும் இவரது கதைகள் …

இரண்டு இழைகள் Read More »