பையன் கதைகள்

வி.கெ. என் மலையாளத்தில் முக்கியமான எழுத்தாளர். அவரது பையன் கதைகள் தமிழில் சாகித்ய அகாதமி வெளியீடாக வந்துள்ளது. 2014ல் கவிஞர் ஸ்ரீபதி பத்மநாபா வி.கெ.என் பையன் கதைகளில் சிலவற்றை மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். அவர் மொழியாக்கம் செய்த கதை ஒன்றை நான் வாசிக்கும்படி அப்போது மின்னஞ்சலில் அனுப்பி வைத்திருக்கிறார். நானும் அவரைப் பாராட்டி பதில் எழுதியிருக்கிறேன். அந்த மின்னஞ்சலை இன்று பார்த்தபோது ஸ்ரீபதி சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து போன நினைவு மனதில் ஆழமான வலியை உருவாக்கியது. …

பையன் கதைகள் Read More »

கவிதையின் இடம்.

The Ecco Anthology of International Poetry என்ற பன்னாட்டுக் கவிதைகளின் தொகுப்பை வாசித்தேன். இந்தியக்கவிதைகள் இதில் குறைவு. தமிழ்க் கவிதைகள் இல்லவே இல்லை. பெரும்பான்மை உலகக் கவிதைத் தொகுப்புகளிலும் இதே நிலை தான். காரணம் இதன் தொகுப்பாசிரியருக்கு இந்தியக் கவிதைகள் பற்றி எதுவும் தெரியாது. மேலும் தமிழ் கவிதைகளின் ஆங்கில மொழியாக்கம் வெளியாவதும் குறைவு என்பதால் நவீன தமிழ்க் கவிதையின் மகத்தான பங்களிப்பு இன்றும் உலகின் கவனத்தைப் பெறவேயில்லை. Antonio Machado, Osip Mandelstam, Vladimir …

கவிதையின் இடம். Read More »

பள்ளத்தாக்கின் பேரழகு

பள்ளி வயதில் மெக்கனாஸ் கோல்ட் திரைப்படத்தைப் பார்த்தபோது தங்கம் தேடும் சாகசக்காரர்களின் கதையை விடவும் அவர்கள் குதிரையில் செல்லும் கிராண்ட் கேன்யன் பள்ளத்தாக்கின் பேரழகு என்னை அதிகம் வசீகரித்தது. இயக்குநர் ஜான் ஃபோர்டு இந்தப் பள்ளத்தாக்கினை மறக்கமுடியாத காட்சிகளாகத் தனது திரைப்படங்களில் பதிவு செய்திருக்கிறார். கௌபாய் படங்கள் என்றதும் மனதில் இந்த நிலக்காட்சி தான் ஒளிருகிறது. அமெரிக்காவின் அரிசோனா பகுதியிலுள்ள கிராண்ட் கேன்யன் மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு. பூர்வ குடி இந்தியர்கள் வாழ்ந்து வரும் இந்த நிலப்பரப்பினைக் …

பள்ளத்தாக்கின் பேரழகு Read More »

இரண்டு கவிஞர்கள்

வேறுவேறு காலகட்டத்தில் வாழ்ந்த இரண்டு கவிஞர்களின் வாழ்க்கையை ஒப்பு நோக்கும் போது அவர்கள் ஒன்று போலவே வாழ்ந்திருப்பதைக் காணமுடிகிறது. சீனாவின் புகழ்பெற்ற கவிஞரான லி பெய் மற்றும் உருதுக் கவி மிர்ஸா காலிப் இருவரும் தனது வாழ்நாளில் பெரும்பகுதியை அரசிடம் மன்றாடுவதற்காகச் செலவு செய்திருக்கிறார்கள். இருவருமே தாங்கள் வாழ்ந்த காலகட்டத்தில் மக்களால் கொண்டாடப்பட்ட கவிஞர்கள். தங்களை ராஜவிசுவாசியாகக் கருதியவர்கள். ஆனால் அவர்களின் நியாயமான ஆசை கடைசி வரை நிறைவேறவேயில்லை. உருதுக் கவிஞர் மிர்ஸா காலிப் 1857ல் நடைபெற்ற …

இரண்டு கவிஞர்கள் Read More »

கேள்வியும் பதிலும்.

The First City டெல்லியிலிருந்து வெளியாகும் கலை இலக்கிய இதழ். இதில் வெளியான நேர்காணல்களின் தொகுப்பு இரண்டு தொகுதிகளாக வெளித்துள்ளன. அவற்றைச் சில ஆண்டுகளுக்கு முன்பாகப் பழைய புத்தகக் கடை ஒன்றில் வாங்கினேன். இந்தியாவின் மிக முக்கியமான ஓவியர்கள். இசைக்கலைஞர்கள். திரைப்பட இயக்குநர்கள். எழுத்தாளர்கள். வரலாற்று ஆய்வாளர்கள். சூழலியல் அறிஞர்களின் நேர்காணல்கள் கொண்ட இந்தத் தொகுப்பு மிகச்சிறப்பானது.. The Paris Review Interviews தொகுதிகளுக்குப் பிறகு இவற்றையே அடிக்கடி எடுத்து வாசிப்பது வழக்கம். எழுத்தாளர்களின் நேர்காணலைப் பொருத்தவரை …

கேள்வியும் பதிலும். Read More »

குற்றவுணர்வின் மூன்று கிளைவழிகள்

A TALE OF THREE SISTERS என்ற துருக்கிப் படத்தைப் பார்த்தேன். 2019ம் ஆண்டு வெளியானது. சமீபத்தில் நான் பார்த்த படங்களில் மிகச்சிறப்பான ஒளிப்பதிவு கொண்ட படமிது. துருக்கியின் புகழ்பெற்ற இயக்குநரான நூரி பில்கே சிலானின் படங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் நிலக்காட்சிகளை தேர்ந்த ஓவியரைப் போலக் கையாளக்கூடியவர். ஆன்டன் செகாவின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். அவரது கதைகளிலிருந்தே தனது படத்திற்கான மையக்கருவை உருவாக்குகிறவர். சிலானின் படங்களில் ஒளிப்பதிவு அபாரமாகயிருக்கும். குறிப்பாக இரவுக்காட்சிகளைக் குறைந்த …

குற்றவுணர்வின் மூன்று கிளைவழிகள் Read More »

அரண்மனை நாய்

எழுத்தாளர் கந்தர்வன் மிகச்சிறந்த சிறுகதைகளை எழுதியிருக்கிறார். இவரது சாசனம் என்ற சிறுகதையை இயக்குநர் மகேந்திரன் திரைப்படமாக்கியிருக்கிறார். ராமநாதபுர நினைவுகளையும் புதுக்கோட்டையைச் சுற்றிய செம்மண் நிலத்தின் வாழ்க்கையினையும் கந்தர்வன் அதிகம் எழுதியிருக்கிறார். அபூர்வமான கதாபாத்திரங்கள். வாழ்க்கைச் சூழல்களை விவரிக்கும் கதைகள். அரசு அலுவலகத்தில் நடக்கும் அதிகாரப்போட்டி. எளிய மனிதர்களின் போராட்டம், குடும்பத்தில் பெண்கள் படும் துயரம், வாழ்ந்து கெட்டவர்களின் வாழ்க்கை என கந்தர்வன் காட்டிய உலகம் அசலானது. நேர்மையாக எழுதப்பட்டது.. கந்தர்வனின் அரண்மனை நாய் என்ற சிறுகதை எனக்கு …

அரண்மனை நாய் Read More »

காணாமல் போனவர்களின் வசிப்பிடம்

(உயிர்மை 100 வது இதழில் வெளியான சிறுகதை) 1891ம் ஆண்டு நடைபெற்ற பில்வமங்கன் கொலை வழக்கு எனப்படும் மோகன்பூர் ஜமீன்தார் கொலைவழக்கினை விசாரணை செய்வதற்காக நியமிக்கபட்டிருந்த போலீஸ் சூப்ரெண்டெண்ட் யதோத்தகாரி எழுதிய டயரிக் குறிப்புகள் அவரது மறைவிற்கு நூறு ஆண்டுகளுக்குப் பின்பு அவரது குடும்பத்தினரால் கண்டறியப்பட்டு நூலாக்கம் பெறுவதற்காக நவயுகம் பதிப்பகத்திற்கு அனுப்பி வைக்கபட்டிருந்தது. இந்த வழக்கின் விசித்திரம் கொலையாளியாகச் சந்தேகிக்கபடும் பில்வமங்கனின் மனைவி வருணா கொலை நடந்த இரவு காணாமல் போய்விட்டார். இக் கொலைவழக்கினை விசாரிக்க …

காணாமல் போனவர்களின் வசிப்பிடம் Read More »

இரண்டு புகைப்படங்கள்

ராகவ் வெங்கடராமன் எனது படைப்புகள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறந்த புகைப்படங்களை எடுத்திருக்கிறார். அவர் எடுத்த இரண்டு புகைப்படங்கள் மிக அழகாக உள்ளன நன்றி ராகவ் வெங்கடராமன்

வெர்மீரின் பால் குவளை

The Milkmaid ஒவியம் 1658ல் வரையப்பட்டது என்கிறார்கள். துல்லியமாக ஆண்டினை கண்டறிய முடியவில்லை என்ற போதும் வெர்மீரின் ஒவியவரிசையைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டினை முடிவு செய்திருக்கிறார்கள். ஓவியத்தின் அகம் காலமற்றது. இந்த ஓவியத்தில் காணப்படும் பெண் நூற்றாண்டுகளைக் கடந்து இன்றும் அழியாத உருவமாக இருக்கிறாள். அவளது பால் குவளையிலிருந்து வழியும் பால் நிற்கவேயில்லை. இந்தப் பால் வடிந்து கொண்டிருக்கும் வரை உலகில் அன்பு நீடிக்கவே செய்யும் என்கிறார்கள். அது உண்மையே. வெர்மீரின் பால் குவளையை ஏந்திய …

வெர்மீரின் பால் குவளை Read More »