இரவெல்லாம் சூதாடுகிறவள்

ஃப்லிம் நுவார் (Film noir) திரைப்படங்களின் அழகியல் மிகவும் தனித்துவமானது. அவற்றை வெறும் திரில்லர் படங்கள் என்று வகைப்படுத்திவிட முடியாது. ஃப்லிம் நுவார் என்பது ஃப்ரெஞ் சொல். இதன் பொருள் இருண்ட உலகைச் சித்தரிக்கும் படம் என்பதாகும். நுவார் திரைப்படங்களில் கேமிராக் கோணங்கள் – இசை – பின்புலம் மிகவும் புதுமையாகயிருக்கும். லோ ஆங்கிள் காட்சிகளைத் திரையில் இத்தனை அழகாகக் காட்டமுடியுமா என்று பிரமிப்பாக இருக்கும். குற்றவுலகின் இயல்பினை விவரிக்கும் இந்த வகைப்படங்கள் நாம் பார்த்தறியாத நிழல் …

இரவெல்லாம் சூதாடுகிறவள் Read More »

சுதந்திரமும் அன்பும்

இந்த மாத அந்திமழை  இதழில் தந்தை மகன் உறவு குறித்து சிறப்பு பகுதி வெளியாகியுள்ளது. அதில் என் மகன் ஹரிபிரசாத் எழுதியுள்ள கட்டுரை •••• சுதந்திரமும் அன்பும் – ஹரிபிரசாத் பிற இல்லங்களில் இருப்பதுபோன்ற சராசரி அப்பா மகன் உறவு எங்கள் இல்லத்தில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அப்பா ‘தேசாந்திரி’ என்பதால் சின்னவயதில் அவர் பெரும்பாலும் வெளியூர்ப் பயணங்களில் இருப்பார். எனக்கு தந்தையைப் பிரிந்திருப்பதன் கனம் அவ்வளவாகத் தெரியாது. அவர் வீட்டில் இருக்கும்போதுகூட கிரிக்கெட், ஷட்டில்காக் என …

சுதந்திரமும் அன்பும் Read More »

இரண்டு பரிசுகள்

ஒரு நண்பர் ரஷ்யாவிலிருந்து டால்ஸ்டாய் மற்றும் தஸ்தாயெவ்ஸ்கியின் உருவச்சிலைகளை பரிசாக வாங்கி அனுப்பி வைத்திருக்கிறார். எனக்கு விருப்பமான படைப்பாளிகள் எனது படிப்பறைக்கு வந்து சேர்ந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம்

இரண்டாம் நாள் உரை- தாரஸ்புல்பா

உலக இலக்கியம் குறித்து நான் ஆற்றி வரும் பேருரைகளில் இன்று கோகோலின் தாரஸ்புல்பா பற்றி பேசுகிறேன் ஸ்ருதி டிவி யூடியூப் பக்கத்தில் இதனைக் காணலாம் மாலை 6 30 மணிக்கு ஒளிபரப்பாகும்

இலக்கியப் பேருரை -முன்னோட்டம்

புத்தாண்டு தினமாகிய இன்று மாலை 6 30 மணிக்கு எனது உலக இலக்கியப் பேருரை ஸ்ருதி டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்வு குறித்து ஸ்ருதி டிவி வெளியிட்டுள்ள முன்னோட்டம்

புத்தாண்டு வாழ்த்துகள்

அனைவருக்கும் மனம் நிரம்பிய புத்தாண்டு வாழ்த்துகள் இந்த ஆண்டு உங்கள் கனவுகள் யாவும் நிறைவேறட்டும். புதிய செயல்கள் வெற்றி அடையட்டும். வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் Ring Out, Wild Bell – Alfred Tennyson Ring out, wild bells, to the wild sky,The flying cloud, the frosty light:The year is dying in the night;Ring out, wild bells, and let him die.Ring out the old, ring …

புத்தாண்டு வாழ்த்துகள் Read More »

கடல் கடந்த கடிதங்கள்.

ஒரு பழைய புத்தகக் கடைக்கும் , அதன் வாடிக்கையாளருக்குமான உறவை மிக அழகாக வெளிப்படுத்திய புத்தகம் 84, சேரிங் கிராஸ் ரோடு. உண்மை சம்பவத்தின் தொகுப்பு. புத்தகம் முழுவதும் கடிதங்களே இடம்பெற்றிருக்கின்றன. 1970 ஆம் ஆண்டு ஹெலன் ஹான்ஃப் வெளியிட்ட இந்தப் புத்தகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, அதன் தொடர்ச்சியாக மேடைநாடகமாகவும் திரைப்படமாகவும் வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் நாடக ஆசிரியரான ஹெலன் ஹான்ஃ புத்தகம் படிப்பதை வாழ்க்கையாகக் கொண்டவர். அவர் பிரிட்டிஷ் இலக்கியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டி …

கடல் கடந்த கடிதங்கள். Read More »

உலக இலக்கியக் கொண்டாட்டம்

பத்து ஆண்டுகளுக்கு முன்பு உலக இலக்கியம் குறித்து ஏழு நாட்கள் தொடர் உரைகள் நிகழ்த்தினேன்.சென்னை ரஷ்யக் கலாச்சார மையத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வில் நிற்க இடமில்லாத அளவு கூட்டம். மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அந்த உரைகள் தனியே டிவிடியாக வெளிவந்து ஆயிரக்கணக்கில் விற்பனையாகியது. உரையின் வடிவம் நூலாகவும் வெளியானது அது போன்ற தொடர் உரைகளை மறுபடியும் நிகழ்த்த விரும்பினேன். அதற்கான காலமும் சூழலும் அமையவில்லை. இந்த ஊரடங்கு காலத்தில் வாசிக்க நிறைய நேரம் கிடைத்தது. ஆகவே ஒரு …

உலக இலக்கியக் கொண்டாட்டம் Read More »

நூலக மனிதர்கள் 30 மறுக்கப்பட்ட புத்தகங்கள்

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் காலை இரண்டு பேர் எங்கள் கிராமத்தின் நூலகம் முன்பாக நிற்பதைக் கண்டேன். அப்போது நூலகம் திறக்கப்படவில்லை. காலை ஏழு மணியிருக்கும். இருவருக்கும் இருபதை ஒட்டிய வயது . மெலிந்த தோற்றம். பொருத்தமில்லாத மேல்சட்டை தொளதொளவெனத் தொங்கிக் கொண்டிருந்தது. ஒருவன் அடர்ந்த தாடி வைத்திருந்தான். கிராம நூலகம் என்பதால் அதைத் தூய்மைப்படுத்தி வைக்கும் பொறுப்பு மாரியம்மாள் என்ற பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவரது வீட்டில் தான் நூலகத்தின் சாவி இருக்கும். அவர் காலையில் …

நூலக மனிதர்கள் 30 மறுக்கப்பட்ட புத்தகங்கள் Read More »