மறுக்கப்பட்டவனின் குரல்

அலெக்ஸி ஜெர்மன் இயக்கி 2018ல் வெளியான ரஷ்யத்திரைப்படம் Dovlatov . இந்தப்படம் எழுத்தாளர் செர்ஜி டோவ்லடோவ் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை விவரிக்கிறது. 1971 ஆம் ஆண்டில் லெனின்கிராட்டில் நடக்கும் கதையில் நோபல் பரிசு பெற்ற கவிஞர் ஜோசப் பிராட்ஸ்கி முக்கியக் கதாபாத்திரமாக வருகிறார். செர்ஜியின் படைப்புகளை எதையும் வெளியிட அன்றைய லியோனிட் ப்ரெஷ்நேவின் அரசு அனுமதி அளிக்கவில்லை. அந்த நாட்களில் படைப்புகளை அரசின் எழுத்தாளர் சங்கத்தின் அனுமதி பெற்றே வெளியிட வேண்டும் என்ற சட்டமிருந்தது. அவர்களே …

மறுக்கப்பட்டவனின் குரல் Read More »

நூலக மனிதர்கள் 12 நீண்ட கால வாசகர்

நூலகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை விழா நடப்பது வழக்கம். அந்த நாளில் சிறப்புரைக்காகத் தமிழ் அறிஞர்கள் எவரையாவது அழைப்பார்கள். அன்று புத்தக அறிமுகம் செய்து வைக்கும் சிற்றுரைகளும் நடைபெறும். நூலகப்பணியாளர்கள் மற்றும் புரவலர்கள் கௌரவிக்கப்படுவார்கள். அப்படி ஒரு விழா நடக்கும் போது நீண்டகால வாசகர் ஒருவருக்குப் பாராட்டுச் செய்யலாம் என்ற யோசனையைச் சொன்னேன். நூலகர் அதை உடனே ஏற்றுக் கொண்டார். எந்த ஆண்டு முதல் உறுப்பினராக இருக்கிறார்கள் என்பதுடன் எவ்வளவு ஆண்டுகள் தொடர்ந்து நூலகத்திற்கு வருகை தருகிறார்கள் …

நூலக மனிதர்கள் 12 நீண்ட கால வாசகர் Read More »

நூலக மனிதர்கள் 11 புத்தகம் மீட்டான்.

சிலரால் ஒரு நிமிஷம் கூடக் காத்திருக்கமுடியாது. சும்மா இருக்க முடியாது. எதையாவது செய்து கொண்டும் இயங்கிக் கொண்டும் இருக்க வேண்டும். உடம்பில் பரபரப்புத் தொற்றிக் கொண்டேயிருக்கும். பேசும் போதும் அவசரமாகப் பேசுவார்கள். சாப்பிடுவதிலும் அவசரம். பஸ் வந்து நிற்பதற்குள் ஏறி அமர்ந்துவிடுவார்கள். திரையரங்கில் சினிமா போடுவதற்கு அரை மணி நேரம் ஆகும் என்றால் காத்திருக்கமாட்டார்கள். இவ்வளவு ஏன் டீயை வாங்கினால் கூட இரண்டே உறிஞ்சில் குடித்து முடித்துவிடுவார்கள். அவ்வளவு அவசரம் எதற்கு என்று யாருக்கும் தெரியாது. மற்றவர்களுக்கு …

நூலக மனிதர்கள் 11 புத்தகம் மீட்டான். Read More »

நூலக மனிதர்கள் 10 பாதிப் படித்த புத்தகம்

நூலகத்தின் புத்தக அடுக்குகளில் நாவல் பகுதியில் யார் நின்று புத்தகம் தேடிக் கொண்டிருந்தாலும் அவராக வந்து அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்துவிடுவார். அப்படித் தான் எனக்கும் ஒரு நாள் அறிமுகம் ஆனார். நாற்பது வயதிருக்கும். அரைக்கை சட்டை போட்டிருந்தார். பெரிய பிரேம் போட்ட கண்ணாடி. மெலிந்த தோற்றம். பேசும்போது பேண்ட் பாக்கெட்டிற்குள் கையை நுழைத்துக் கொண்டார். எதையோ தொலைத்துவிட்டுத் தேடுபவரைப் போல அவரது குரல் இருந்தது “1984ல் ஒரு புத்தகத்தைப் பாதிப் படிச்சிட்டு ரிடர்ன் பண்ணிட்டேன். …

நூலக மனிதர்கள் 10 பாதிப் படித்த புத்தகம் Read More »

நான்கு ஜன்னல்கள்.

இயக்குநர் சத்யஜித் ரேயின் மகன் சந்தீப் ரே இயக்கிய Chaar என்ற வங்கமொழிப்படத்தைப் பார்த்தேன். நான்கு சிறுகதைகளின் தொகுப்பாக உருவாக்கப்பட்ட படம். 2014ல் வெளியாகியிருக்கிறது. சத்யஜித் ரேயின் கடைசி மூன்று படங்களுக்குக் கேமிராமேனாகப் பணியாற்றியவர் சந்தீப்ரே. சிறந்த இசையமைப்பாளர். சத்யஜித்ரேயின் பெலுடா கதைகளைத் தொலைக்காட்சி தொடராக இயக்கியவர். Himghar, Uttoran, Professor Shonku O El Dorado, Double Feluda and Monchora. படங்களை இயக்கியவர். வங்காளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களான பரசுராம் மற்றும் சீர்சேந்து பந்தோபாத்யாவின் சிறுகதைகள் …

நான்கு ஜன்னல்கள். Read More »

நூலக மனிதர்கள் 9 மகிழ்ச்சியின் அடையாளம்.

ஞாயிற்றுக்கிழமை தோறும் அவர்கள் குடும்பத்துடன் நூலகத்திற்கு வருவதைக் கண்டிருக்கிறேன். மூன்று சைக்கிளில் அவர்கள் நூலகத்தின் முன்பு வந்து இறங்குவதைக் காணுவதே மகிழ்ச்சியாக இருக்கும். அப்பா அம்மா இரண்டு மகள்கள் ஒரு பையன் எனக் குடும்பமாக நூலகத்திற்கு வருவார்கள். திருமண வீட்டிற்குப் போவது போல அழகான உடையுடுத்தியிருப்பார்கள். நூலகத்திற்கு இப்படிக் குடும்பமாக வருவது அவர்கள் மட்டுமே. பெரும்பாலும் ஒருவர் இருவராக நூலகத்திற்கு வருவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் ஒரு குடும்பமே நூலகத்திற்கு வருவது வியப்பாக இருக்கும். வாரந்தோறும் நூலகம் வருவதை …

நூலக மனிதர்கள் 9 மகிழ்ச்சியின் அடையாளம். Read More »

நூலக மனிதர்கள் 8 பீம ரகசியம்

அந்தக் கான்ஸ்டபிள் யூனிபார்மில் தான் நூலகத்திற்கு வருவார். ஐம்பது வயதிருக்கும். பருத்த உடல். படியேறும் போது மூச்சுவாங்கும். மூட்டுவலியோடு அவர் படியேறி வந்தவுடன் நூலகர் முன்பாக உள்ள நாற்காலியில் உட்கார்ந்து கொள்வார். அவராக ஒரு போதும் புத்தக அடுக்குகளுக்குச் செல்ல மாட்டார். கதை, கவிதை நாவல் போன்ற எந்தப் புத்தகத்தையும் எடுத்துப் போக மாட்டார். எப்போதும் சமையல் புத்தகம் மட்டுமே எடுத்துப் போவார். நிச்சயம் அது அவர் படிப்பதற்கான புத்தகமில்லை என்று தெரியும். விதவிதமான சமையல் முறைகளைப் …

நூலக மனிதர்கள் 8 பீம ரகசியம் Read More »

நூலக மனிதர்கள் 7 வாசிப்புத் துணை

1992ன்  துவக்கத்தில் அண்ணாசாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்தில் அவர்கள் இருவரையும் பார்த்திருக்கிறேன். மோகன் என்ற பார்வையற்ற நபரைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வருவார் ஒரு இளைஞர். அவரது பெயர் செல்வம். மோகனுக்கு இருபத்தைந்து வயதிருக்கக் கூடும் .செல்வமும் அதே வயது தான். மோகனை விடவும் செல்வம் ஆள் குள்ளம். பெரிய காதுகள் கொண்டவர். அவர்கள் முகத்தில் தனியான மகிழ்ச்சியிருக்கும். பொதுவாகப் பார்வையற்றவர்கள் குறித்த பொதுப்புத்தி அவர்கள் எப்போதும் சோகமாகவும் வருத்தமாகவும் இருப்பார்கள் என்றிருக்கிறது. அது உண்மையில்லை. …

நூலக மனிதர்கள் 7 வாசிப்புத் துணை Read More »

கல்வியின் பாதை.

Class Dismissed – என்ற டாகுமெண்டரி திரைப்படத்தைப் பார்த்தேன். அமெரிக்க பொதுக்கல்வி முறையின் குறைபாடுகளைப் பற்றிப் பேசும் இப்படம் ஹோம் ஸ்கூலிங் போன்ற மாற்றுக்கல்வி முறைகளின் தேவை குறித்து விவாதிக்கிறது. அமெரிக்கா முழுவதிலும், பெற்றோர்கள் பொதுக் கல்வி நிலை குறித்து அதிருப்தி அடைந்துள்ளார்கள். .அப்படி அதிருப்தி அடைந்த லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு குடும்பம், தங்கள் இரு குழந்தைகளையும் புகழ்பெற்ற பள்ளி ஒன்றிலிருந்து படிப்பை நிறுத்தி ஹோம் ஸ்கூலிங் முறைப்படி வீட்டிலே கல்வி கற்க வைக்கிறார்கள். அவர்களின் …

கல்வியின் பாதை. Read More »

நூலக மனிதர்கள் 6 முதல் வாசகர்.

மல்லாங்கிணர் நூலகத்தில் முதன்முறையாக வார இதழ்களுக்கு நடுவே ஒரு கையெழுத்துப் பத்திரிக்கையைப் பார்த்தேன். பாலைவனச்சோலை என்ற பெயரில் வெளியாகியிருந்த அந்தக் கையெழுத்து பத்திரிக்கையை உள்ளூர் நண்பர்கள் சிலர் சேர்ந்து உருவாக்கியிருந்தார்கள். இப்படி ஒரு பத்திரிக்கையைக் கையெழுத்திலே தயாரித்து வெளியிடலாம் என்பது புதுமையான விஷயமாகத் தோன்றியது. ஆசிரியர் குழுவிலிருந்தவர்களே கவிதைகள் எழுதியிருந்தார்கள். ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. பொது அறிவு தகவல்கள். நிறையப் பொன்மொழிகள் இடம்பெற்றிருந்தன. கடைசி இரண்டு பக்கங்களை வாசகர் கருத்துகள் எழுதுவதற்காக இடம் விட்டிருந்தார்கள். கிராம நூலகத்தில் …

நூலக மனிதர்கள் 6 முதல் வாசகர். Read More »