காலைக்குறிப்புகள் 16 மகிழ்ச்சியின் தூதுவன்
தபால்காரரை எதிர்பார்த்து எழுத்தாளர்கள் காத்திருப்பது குறித்து எழுத்தாளர் ஜான் பிரைன் எழுதிய கட்டுரை ஒன்றை வாசித்தேன். பாப்லோ நெரூதாவிற்கு வரும் தபால்களைக் கொண்டு வருவதற்கென்றே தனியே ஒரு தபால்காரர் இருந்தார். தினமும் நூற்றுக்கணக்கில் கடிதங்கள் வருவது வழக்கம். அதில் பாதிக் காதல் கடிதங்கள். விண்ணுலகிலிருந்து ஒரு தேவதூதன் வருவது போலவே தபால்காரர் நம் வீதிக்கு வருகிறார். அவரது கையிலுள்ள கடிதங்கள் எத்தனை பேரை மகிழ்ச்சிப்படுத்தப் போகின்றன என்று அவருக்குத் தெரியும். உண்மையில் அவர் தான் மகிழ்ச்சியின் தூதுவர். அதே …