காலைக்குறிப்புகள்-11 சந்தோஷமான குடும்பம்.

“Happy families are all alike; every unhappy family is unhappy in its own way.” என டால்ஸ்டாயின் அன்னாகரீனினா நாவலின் முதல்வரி உள்ளது. புகழ்பெற்ற அறிவியல் புனைகதை எழுத்தாளரான உர்சுலா லெ குவின் தனது நேர்காணல் ஒன்றில் இந்த வரியை மறுத்து நாவலின் அழகான முதல்வரி என்பதற்கு மேல் இதற்கு மதிப்பில்லை என்கிறார். சந்தோஷமான குடும்பங்கள் யாவும் ஒன்று போல இருக்கின்றன என்பது கற்பனை. எந்த இரண்டு சந்தோஷமான குடும்பங்களும் ஒன்று போல …

காலைக்குறிப்புகள்-11 சந்தோஷமான குடும்பம். Read More »

பால்ய காலத்துச் சித்திரங்கள்

–பதின் நாவல் குறித்த விமர்சனம் கீரனூர் ஜாகிர்ராஜா •• இனி ஒருபோதும் திரும்பக் கிடைக்காத பால்ய காலத்தை ஏக்கத்தோடு அசைபோட்டபடிதான் பலரும் நடமாடுகிறோம். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலரும் சிருஷ்டிக்குத் தேவையான ஆதார சுருதியைத் தங்களின் இளம்பிராயத்து நினைவுகளிலிருந்தே கண்டடைகின்றனர். உப பாண்டவம், நெடுங்குருதி, யாமம் எனத் தீவிரமான நாவல்களை எழுதிய எஸ்.ராமகிருஷ்ணன் முற்றிலும் பால்ய கால நிகழ்வுகளை அடுக்கிக் கோத்து எழுதியிருக்கும் புதிய நாவல் ‘பதின்’. ‘இதில் வரும் ‘நான்’என்னைக் குறிக்கவில்லை; நம்மைக் குறிக்கிறது’ என்கிறார் …

பால்ய காலத்துச் சித்திரங்கள் Read More »

செகாவ் வாழ்கிறார் – மதிப்புரை

முனைவர் ம. இராமச்சந்திரன் உலகச் சிறுகதை வரலாற்றில் மலரின் வாசனையாக மணந்து நிற்பவர் ஆண்டன் செகாவ். தமிழ் எழுத்தாளர்கள் க.நா.சு, தி.க.சி, பிரபஞ்சன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் உள்பட மேலும் பலர் இவரைப் பாராட்டியும் கட்டுரைகள் எழுதியும் வந்துள்ள நிலையில் செகாவின் முழு வரலாற்றையும் இலக்கியமாகக் கூறுகிறது இந்நூல். இதனை எஸ். ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். ஆண்டன் செகாவின் குழந்தைப் பருவம் இயல்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இவரின் பள்ளிப் படிப்பும் குடும்பச் சிக்கலும் யதார்த்த சமூகச் சூழலும் பிற்கால …

செகாவ் வாழ்கிறார் – மதிப்புரை Read More »

காலைக்குறிப்புகள்-10 தந்தைக்கு ஒரு கடிதம்.

தஸ்தாயெவ்ஸ்கி தனது தந்தை, சகோதரன் மற்றும் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு நூலை வாசித்தேன். இதில் தனது 17 வயதில் தஸ்தாயெவ்ஸ்கி தனது தந்தைக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.  அந்தக் கடிதத்தில் உள்ள அவரது வரிகள் பின்னாளில் அவரது கதையின் குரலாக ஒலிப்பதைக் காண முடிகிறது. ஒரு தந்தைக்கு மகன் இப்படிக் கடிதம் எழுதுவானா  என வியக்க வைக்கிறது. பிரான்ஸ் காஃப்கா தனது தந்தையின் கெடுபிடிகள் கட்டுப்பாடுகள் பற்றி ஒரு வெளிப்படையாக ஒரு கடிதம் எழுதினார். ஆனால் …

காலைக்குறிப்புகள்-10 தந்தைக்கு ஒரு கடிதம். Read More »

பிஸ்மார்க்கைத் தேடி

Sink the Bismarck என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் புகழ்பெற்ற போர்க்கப்பலான பிஸ்மார்க்கை எப்படிப் பிரிட்டிஷ் கடற்படை வீழ்த்தினார்கள் என்பதை விவரிக்கும் திரைப்படம். பொதுவாக யுத்த பின்புலம் கொண்ட திரைப்படங்களின் திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கும். காரணம் கதையின் மையம் ஏதுவென முதலில் சுட்டிக்காட்டப்படுவதால் அதை நோக்கியே கதை நகரும். அப்படியான ஒரு திரைக்கதை தான் Sink the Bismarck படத்திலும் உள்ளது. இதில் கென்னத் மோர் மற்றும் டானா வின்டர் ஆகியோர் நடித்துள்ளனர், …

பிஸ்மார்க்கைத் தேடி Read More »

காலைக்குறிப்புகள் -9. ஒரு விளையாட்டு.

இதாலோ கால்வினோவின் Numbers in the Dark சிறுகதைத் தொகுப்பில் Making Do என்றொரு சிறுகதை உள்ளது. இன்றைய ஊரடங்கு வாழ்க்கையின் விசித்திரத்தை 1985லே கால்வினோ எழுதியிருக்கிறார். இலக்கியம் பலநேரம்வாழ்க்கையின் முன்னறிவிப்பு போலவே இருக்கும் என்பதன் அடையாளமிது. கால்வினோவின் சிறுகதைகள் விசித்திரமும் யதார்த்தமும் ஒன்று கலந்தவை. சமகாலப்பிரச்சனைகளை அவர் மாய எழுத்தின் மூலம் வெளிப்படுத்தக்கூடியவர். கதைமொழியிலும் கதை சொல்லும் விதத்திலும் கால்வினோ நிகழ்த்திய சாதனைகள் அபாரமானவை. Making Do கதையில் ஒரு நகரில் எல்லாமும் தடைசெய்யப்பட்டிருக்கிறது. எதற்காக …

காலைக்குறிப்புகள் -9. ஒரு விளையாட்டு. Read More »

அம்பின் வேகம்

பழைய திரைப்படங்களைக் காணும் போது இன்றைய ஊரடங்கு வாழ்க்கையிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட உணர்வு ஏற்படுவதுடன் வேறு ஒரு காலத்தில் சஞ்சாரம் செய்கிறோம் என்ற சந்தோஷமும் ஏற்படுகிறது. அதுவும் சரித்திரப்படங்கள் என்றால் கூடுதல் சந்தோஷம் உருவாகிறது. இதற்காகவே பழைய பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கச் சரித்திரப் படங்களை விரும்பி பார்த்து வருகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பாக The Flame and the Arrow படத்தைப் பார்த்தேன். வார்னர் பிரதர்ஸ் தயாரித்தது. Jacques Tourneur இயக்கியது. ராபின் ஹூட் கதை போன்ற …

அம்பின் வேகம் Read More »

காந்தியின் நிழலில் 5 ஏன் என்ற கேள்வி

காந்தியின் நெருக்கமான நண்பராக இருந்தவர் ஹென்றி போலக். காந்தியோடு சிறை சென்றவர்.  அவரது மனைவியான மிலி கிரகாம் போலக் லண்டனில் பிறந்து வளர்ந்தவர். ஹென்றி போலக்கை திருமணம் செய்து கொண்டபின்பு தென்னாப்பிரிக்கா வந்தார். 1931ல் மிலி கிரகாம் போலக் காந்தி எனும் மனிதர் என்ற நூலை எழுதியிருக்கிறார். இது காந்தியோடு பழகிய நட்பினையும் பீனிக்ஸ் பண்ணையில் வாழ்ந்த நாட்களையும் விவரிக்கும் நூல். கார்த்திகேயன் தமிழாக்கம் செய்திருக்கிறார்.மதுரை சர்வோதயா இலக்கியப்பண்ணை வெளியிட்டிருக்கிறது. ஆசிரம வாழ்க்கைக்குப் புதியவரான மிலிக்கு வாழ்வின் …

காந்தியின் நிழலில் 5 ஏன் என்ற கேள்வி Read More »

காலைக்குறிப்புகள் -8 ஆகஸ்ட்மாத செவ்வாய்க்கிழமை

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் எழுதிய செவ்வாய்க்கிழமை மதியத்தூக்கம் சிறுகதை மிகச்சிறப்பானது. இந்தக் கதையில் வாழைத்தோட்டங்களுக்கு இடையில் கரி என்ஜின் கொண்ட ரயில் செல்லும் காட்சி வருகிறது. கொலம்பியாவின் வாழைத்தோட்டங்களுக்கு நடுவில் வளர்ந்தவர் மார்க்வெஸ். அமெரிக்காவின் வாழைப்பழத் தேவைக்காகக் கொலம்பியா, ஈக்வடார், உள்ளிட்ட பல்வேறு நாடுகள் யுனைடெட் புரூட் கம்பெனியின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. இந்தக் கதையில் முடிவேயில்லாத வாழைத்தோட்டங்களின் காட்சி தான் முதலில் இடம்பெறுகிறது. வாழைத்தோட்டங்களை ரயில் கடக்கும் போது காற்றில் ஈரம் பரவுகிறது. பசும் வாழைத்தார்கள் ஏற்றப்பட்ட …

காலைக்குறிப்புகள் -8 ஆகஸ்ட்மாத செவ்வாய்க்கிழமை Read More »