உஸ்தாத் இல்லம்

– கவிஞர் சுகுமாரன். காசிக்கு சென்ற ஆண்டு போனபோது பார்க்க விரும்பிய முக்கியமான இடங்களில் ஒன்றாக இருந்தது உஸ்தாத் பிஸ்மில்லா கானின் இல்லம். இடுங்கிய சந்து ஒன்றில் இருந்த அந்த வீட்டைத் தேடி தினமும் பார்வையாளர்கள் சென்று கொண்டிருந்தார்கள். ஒரு நாள் நண்பகலுக்குக் கொஞ்சம் முன்பாக அந்த வீட்டைச் சென்றடைந்தேன். அன்று அந்தப் பகுதியில் மின் துறையினர் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்கள். எனவே மின்சார விநியோகம் இல்லை. குறைந்த வெளிச்சத்தில்தான் உஸ்தாதின் வீட்டைப் பார்க்க வாய்த்தது. சுவர்களில் …

உஸ்தாத் இல்லம் Read More »

மழையின் மனிதர்கள்

வண்ணநிலவனின் ரெயினீஸ் ஐயர் தெரு தமிழ் நாவல்களில் அபூர்வமானது. மிகச்சிறப்பான நாவல். சிறந்த ஐரோப்பிய நாவல்கள் என்று சர்வதேச அளவில் புகழ்பெற்ற நாவல்களை வெளியிட்டார்கள். அந்த வரிசையில் வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய  நாவலிது. வண்ணநிலவனின் கம்பாநதியும், கடல்புரத்திலும் வேறுபட்ட கதைக்களன்கள். மொழி நடை கொண்டவை. ஆனால் ரெயினீஸ் ஐயர் தெருவின் எழுத்துமுறை முற்றிலும் கவித்துவமானது. கிறிஸ்துமஸ் பண்டிகை சமயங்களில் கேரல் பாடியபடியே வருபவர்களைக் காணும் சந்தோஷம் போன்றது. நீர்வண்ண ஓவியங்களுக்கெனத் தனி அழகு இருக்கிறது. அப்படித் தான் …

மழையின் மனிதர்கள் Read More »

தேவதச்சனை மொழிபெயர்ப்பது -3

நகுல்வசன் தமிழில் புனைவெழுத்து முயற்சிப்பவர், ஆங்கில மொழியாக்கங்களுக்கு Nakul Vāc என்ற பெயர் புனைந்து கொண்டவர். இவர் தமிழில் எழுதியுள்ள கதைகளும் கவிதைகளும் சொல்வனம் மற்றும் பதாகை இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன. நகுல்வசன் தேவதச்சனை மிகவும் ஆழ்ந்து புரிந்து கொண்டிருக்கிறார். சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். நகுல்வசனுக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். பதாகை இணையதளத்திலிருந்து மீள்பதிவு செய்யப்படுகிறது *** ஜெல்லி மீனே ஜெல்லி மீனே – தேவதச்சன் (ஆங்கிலம்: நகுல்வசன் ) – jellyfish ஜெல்லி மீனே …

தேவதச்சனை மொழிபெயர்ப்பது -3 Read More »

தேவதச்சனை மொழிபெயர்ப்பது -2

நகுல்வசன் தமிழில் புனைவெழுத்து முயற்சிப்பவர், ஆங்கில மொழியாக்கங்களுக்கு Nakul Vāc என்ற பெயர் புனைந்து கொண்டவர். இவர் தமிழில் எழுதியுள்ள கதைகளும் கவிதைகளும் சொல்வனம் மற்றும் பதாகை இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன. நகுல்வசன் தேவதச்சனை மிகவும் ஆழ்ந்து புரிந்து கொண்டிருக்கிறார். சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார் நகுல்வசனுக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். பதாகை இணையதளத்திலிருந்து  மீள்பதிவு செய்யப்படுகிறது *** ஒரு இடையன் – தேவதச்சன்  (ஆங்கிலம்: நகுல்வசன்) – goat-herd ** ஒரு இடையன் பத்துப் பனிரெண்டு …

தேவதச்சனை மொழிபெயர்ப்பது -2 Read More »

தேவதச்சனை மொழிபெயர்ப்பது -1

பதாகை இணைய இதழில் நகுல்வசன் தேவதச்சனின் சில கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருப்பதுடன் மொழிபெயர்ப்பின் சவால்களையும் தான் கவிதைகளை புரிந்து கொண்ட விதம் பற்றியும் சிறப்பாக எழுதியிருக்கிறார். கவிதையை மொழியாக்கம் செய்வதன் சவால் குறித்து இது போல அசலாக எழுதப்பட்ட குறிப்புகள் குறைவே. நகுல்வசன் தேவதச்சனை மிகவும் ஆழ்ந்து புரிந்து கொண்டிருக்கிறார். சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார் நகுல்வசனுக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். பதாகை இணையதளத்திலிருந்து இந்த மொழியாக்கம் மீள்பதிவு செய்யப்படுகிறது •• குருட்டு ஈ / …

தேவதச்சனை மொழிபெயர்ப்பது -1 Read More »

சிங்கப்பூர் இலக்கிய விருதுகள்

சிங்கப்பூரின் முக்கிய இலக்கிய விருதுகளில் ஒன்றான  Singapore Book Council விருது 2020 அறிவிக்கபட்டுள்ளது. இந்த விருது பெற்றுள்ள எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ், ஹேமா இருவருக்கும் மனம் நிரம்பிய வாழ்த்துகள். சித்துராஜ் கவிதை நாவல் என இரண்டு விருதுகள் பெற்றிருக்கிறார் என்பது கூடுதல் மகிழ்ச்சி. **

காந்தியின் நிழலில்- 4 டால்ஸ்டாயும் காந்தியும்.

1909 அக்டோபர் 1ம் தேதி லண்டனிலிருந்து டால்ஸ்டாயிற்குக் கடிதம் எழுதும் போது காந்தியின் வயது 40. அப்போது டால்ஸ்டாயின் வயது 81. டிரான்ஸ்வாலில் நடக்கும் காலனிய ஒடுக்குமுறைகளை டால்ஸ்டாயிற்குக் கவனப்படுத்த வேண்டும் என்பதுடன் அவரது A Letter to a Hindu என்ற கடிதத்தை மொழியாக்கம் செய்து வெளியிடும் உரிமையைப் பெறவே காந்தி கடிதம் எழுதுகிறார். காந்தியின் கடிதம் போல உலகெங்குமிருந்து அன்றாடம் நாற்பது ஐம்பது கடிதங்கள் டால்ஸ்டாயிற்கு வருவது வழக்கம். கடிதங்களைப் படித்துப் பதில் எழுதுவதற்கென்றே …

காந்தியின் நிழலில்- 4 டால்ஸ்டாயும் காந்தியும். Read More »

சிரிக்க மறந்த ஜோஹன்.

1967ம் ஆண்டு வெளியான The 25th Hour என்ற படத்தினைப் பார்த்தேன். ஹென்றி வெர்னுவில் இயக்கிய படம். ருமேனியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தின் தேவாலயத்தில் ஜோஹன் மோரிட்ஸின் குழந்தைக்கு ஞானஸ்நானம்  செய்து வைக்கப்படுகிறது. தம்பதிகள் குழந்தையோடு வீடு திரும்புகிறார்கள். வீட்டின் வெளியே விருந்து நடக்கிறது. ரேடியோவில் இனிமையான சங்கீதம் கேட்டபடியே குழந்தை தொட்டிலில் உறங்குகிறது. திடீரென ரேடியோவில் ஹிட்லர் பேசத்துவங்குகிறார். குழந்தை திடுக்கிட்டு அழுது கத்துகிறது. அப்போது தான் ஜோஹன் முதன்முறையாக ஹிட்லரின் பேச்சைக் கேட்கிறான். …

சிரிக்க மறந்த ஜோஹன். Read More »

நாதஸ்வர ஓசையிலே

நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகிறான் என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. பூவும் பொட்டும் படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் கோவர்த்தனம். பாடல் படமாக்கப்பட்டவிதம் அத்தனை சிறப்பாகயில்லை. படமும் சுமாரே. கண்ணதாசன் எழுதிய பாடல் TMS மற்றும் P.சுசிலா இனிமையான குரல் கொடுத்துப் பாடியிருக்கிறார்கள். 1968-இல் பூவும் பொட்டும் வெளிவந்தது இந்தப் பாடல் ரேடியோவில் கேட்டுக் கேட்டு மனதில் ஆழமாகப் பதிந்து போயிருக்கிறது. எப்போதும் இந்தப் பாடலைக் கேட்கத் துவங்கினாலும் மறுநிமிசம் மனது …

நாதஸ்வர ஓசையிலே Read More »

அஞ்சலி.

பேரன்பு மிக்க நண்பரும் இடதுசாரி இயக்கத்தின் முக்கியத் தலைவருமான டி.லட்சுமணன் நேற்றிரவு காலமானார். தோழர் டி.எல் என்று அழைக்கப்பட்ட டி.லட்சுமணன் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். அவரது தந்தை காவல்துறையில் பணியாற்றியவர். கால்நடை ஆய்வாளராக அரசுப்பணியிலிருந்தவர் டி.லட்சுமணன். தமிழக அரசு ஊழியர் சங்கத்தினை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர். மாற்றுத்திறனாளிக்கான அமைப்பின் தலைவராகச் செயல்பட்டவர். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்க்கையினை மேற்கொண்டு வந்த அற்புதமான மனிதர் அன்பு காட்டுவதில் டி.எல் அவர்களுக்கு நிகரே கிடையாது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக …

அஞ்சலி. Read More »