பெயரற்ற மேகம் -2 ரியோக்கன் எனும் பட்டம்

Who calls my poems poems? My poems are not poems. Only when you know my poems are not poems can we together speak about poems – Ryokan Sky above Great Wind என்ற ஜென் மாஸ்டர் ரியோக்கனைப் பற்றிய நூலை வாசித்தேன். ஜப்பானியக் கவிஞர்களில் தனிமையைப் பற்றி மிகச்சிறப்பாக எழுதியவர் ரியோக்கன். ஜென் கவிஞர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் இவர் துறவியாகத் தேசம் முழுவதும் சுற்றியலைந்து வாழ்ந்திருக்கிறார். …

பெயரற்ற மேகம் -2 ரியோக்கன் எனும் பட்டம் Read More »

குறுங்கதை 95 சுவரை ஒட்டிய கிளை

வீட்டின் பின்புறமிருந்த மாமரத்தில் சுவரை ஒட்டிய  கிளையில் இதுவரை ஒரு பறவை கூட வந்து அமர்ந்ததேயில்லை. நிறையக் கிளிகளையும் அணில்களையும் அந்த மரத்தில் காணுகிறேன். ஆனால் ஒரு கிளி கூட சுவரை ஒட்டிய கிளையில் அமர்ந்ததேயில்லை. நாம் எந்த வீட்டிற்குப் போனாலும் நமக்கான ஆசனத்தைத் தேர்வு செய்து அமருவது போலத் தான் பறவைகளும் மரத்தில் தனக்கான கிளையில் அமர்கிறதா?. சில நேரம் கிளிகளின் கூட்டமே தரையிறங்கும். அப்போதும் ஒரு கிளி கூட சுவரை ஒட்டிய கிளையில் அமராது. …

குறுங்கதை 95 சுவரை ஒட்டிய கிளை Read More »

சிறப்புத் திட்டம்.

என் மகன் ஹரிபிரசாத் மற்றும் அவனது நண்பர்கள் இணைந்து DESANTHIRI YOUTUBE CHANNELயை கடந்த ஓராண்டாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். அவர்களுக்குப் பல்வேறு விதங்களில் உதவிய நல்ல உள்ளங்களுக்கு மனம் நிரம்பிய நன்றி. குறிப்பாக ஸ்ருதி டிவி கபிலன் மற்றும் சுரேஷ், புகைப்படக்கலைஞர் இளவேனில், மணிமாறன், அன்பு, சித்துராஜ் பொன்ராஜ், திருவாசகம்,  உள்ளிட்ட நண்பர்களுக்கு அன்பும் நன்றிகளும்.. இந்தச் சேனல் வழியாகப் புதிய நிகழ்ச்சிகளை உருவாக்கத் திட்டமிட்டு வருகிறார்கள். குறிப்பாக உலகச் சினிமா குறித்த எனது உரைகள். …

சிறப்புத் திட்டம். Read More »

குறுங்கதை 94 இப்படியும் ஒரு காதல்

அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகள் கல்வி பயிலுவதற்காக ரகு போயிருந்த நாட்களில் சென்னையிலுள்ள அவனது வீட்டிற்கு ஒரு இளம் பெண் வந்திருக்கிறாள். அவனது அறையிலே தங்கியிருக்கிறாள். அவனது கட்டிலில் படுத்து உறங்கியிருக்கிறாள். புத்தக அடுக்கினைப் புரட்டியிருக்கிறாள். அவனது சிறுவயது புகைப்படங்களை ஆசையாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இதை எல்லாம் அம்மா சொல்லிக் கேட்டபோது ரகுவிற்குக் கூச்சமாக இருந்தது. “ஏன் அந்தப் பெண்ணை அனுமதித்தீர்கள்“ என்று கோவித்துக் கொண்டான் “மோகன் மாமா அழைத்துக் கொண்டு வந்திருந்தார். ஏதோ விளையாட்டுப் போட்டிக்கு …

குறுங்கதை 94 இப்படியும் ஒரு காதல் Read More »

குறுங்கதை 93 தலைமறைவு

பிளேடைப் பாதியாக உடைத்துச் சவரம் செய்யும் பழக்கம் தலைமறைவு காலத்தில் தான் குணாவின் அப்பாவிற்கு ஏற்பட்டது. அரசியல் காரணங்களுக்காகக் அவர் மூன்று ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். அப்போது குணாவிற்கு வயது நான்கு. அப்பா எங்கோ வெளியூர் சென்றிருக்கிறார் என்று தான் வீட்டில் சொல்லியிருந்தார்கள். மணல் தேரிகளுக்குள் இருந்த சிறிய கிராமத்தில் அப்பா அடைக்கலம் புகுந்திருந்தார். அந்த ஊரிலிருந்த நாவிதர் கருப்பையாவின் அண்ணன் என்றே அவரைச் சொல்லி வைத்திருந்தார்கள். தலைமறைவு காலத்தில் அப்பா ஒரு வாளித் தண்ணீரில் குளிக்கப் …

குறுங்கதை 93 தலைமறைவு Read More »

குறுங்கதை 92 பேப்பர் கேமிரா

கோர்ட் வளாகத்திற்குள் கைவிலங்கிடப்பட்டு வீரசேகர் வந்த போது ஒன்றிரண்டு பேரே இருந்தார்கள். நீதிமன்ற விசாரணைக்காக அவனை அழைத்து வந்திருந்த காவலர் யாரோ வழக்கறிஞர் உடன் பேசிக் கொண்டிருந்தார். கோர்ட் துவங்க இன்னும் நிறைய நேரமிருந்தது. அப்போது தான் அந்தப் பெண் கைதியைப் பார்த்தான். அடர் மஞ்சள் நிறத்தில் சுடிதாரும் சிவப்பு நிறத் துப்பட்டாவும் அணிந்திருந்தாள். கண்ணுக்குப் பொருத்தமில்லாத அகலமான கண்ணாடி. குளித்துக் கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்பியவள் போல நெற்றியில் சிறியதாகத் திருநீறு பூசியிருந்தாள். அவளுடன் இருந்த பெண் …

குறுங்கதை 92 பேப்பர் கேமிரா Read More »

சாமானியர்களின் வாழ்க்கை

– மணிகண்டன் ”மழைமான்” – தொகுப்பில் பத்துக் கதைகள் உள்ளன. இக்கதைகள் தனித்துவமான கதை சொல்லும் முறையைக் கொண்டிருக்கின்றன. 1. புலப்படாத பறவை : பணத்திற்கும் பொருளுக்கும் ஆசை கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் இக்கால மனிதக் கூட்டத்தில் அபூர்வமான பறவை ஒன்றைத் தேடி பல மைல்கள் தூரம் 40 ஆண்டுகள் தேடி அலையும் ஒரு பறவையிலாரின் இடைவிடாத பயணங்கள் பற்றியும், அப்பறவையைக் கடைசி வரை பார்க்க முடியாமலே துயரத்துடன் இறந்து போகும் அந்த மாமனிதரைப் பின்பற்றி இன்னொரு நண்பர்கள் …

சாமானியர்களின் வாழ்க்கை Read More »

நிமித்தம்- துயரத்தின் துளிகள்

சத்தியமூர்த்தி. அஸ்திரேலியா நிமித்திம். எஸ்.ராவால் தமிழுக்குத் தரப்பட்ட இன்னொரு க்ளாஸிக். இதைப் படிக்கும் போது பல இடங்களில் என்னை நெகிழச் செய்ததது. தேவராஜ்க்கு நாற்பத்தியேழு வயதில் திருமணம் நடக்கிறது. அவருக்குக் காது கேட்காது. தன் திருமணத்தின் முதல் நாள் இரவு, தன் நண்பர்களை எதிர்பார்த்து அறையில் காத்திருக்கிறார். யாருமே வரவில்லை. அந்தத் தனிமையில் தன் கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பதுதான் நாவலின் கதை. ஒரு மனிதன் வாழ்வில் எந்த அளவுக்குப் புறக்கணிக்கப் படுகிறான் என்று நாவலில் சொல்லப்படுகிறது. …

நிமித்தம்- துயரத்தின் துளிகள் Read More »

இடக்கை காட்டும் வெளிச்சம்

-கண்ணன். நீதிக்காக மனிதர்கள் நடத்தும் நெடும்போராட்டத்தை தங்களின் இடக்கை நாவலில் நீங்கள்  சிருஷ்டித்த விதம் அற்புதம் , இந்த மண்ணில் எதோ ஒரு காலத்தில் கதை நிகழ்கிறது என சொல்லமுடியாதபடி இன்றைய எதார்த்தத்திற்கு அவ்வளவு நெருக்கமான இன்னும் சொல்வதானால் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமான கேள்விகளை நீதி குறித்த விசாரணையை,நீதிக்கான விளக்கத்தை சாமானியனுக்கு ஒரு விதமும்  ஆள்பவருக்கு வேறுவிதமுமாக  ஆளுக்கொரு நீதி கடைபிடிக்கப்படும் சூட்சமத்தை உங்கள் இடக்கை-யில்  வாசித்துக் கடப்பது எளிதாக இருக்கவில்லை … நீதிக்கு இருக்கும் இருபக்கங்களை …

இடக்கை காட்டும் வெளிச்சம் Read More »

இரவை வாசிப்பவர்கள்

(நடு- இணைய இதழில் வெளியான சிறுகதை) அண்ணாசாலையில் அப்படியொரு புத்தகக் கடை இருக்கிறது என்பதே ஆச்சார்யா சொல்லி தான் ரகுவிற்குத் தெரியும். பலமுறை அந்த இடத்தைக் கடந்து போயிருக்கிறான். சிவப்பு நிற கட்டிடத்தைப் பார்த்தவுடன் ஏதோ அரசாங்க அலுவலகம் என்று நினைத்துக் கொண்டிருந்தான். எத்தனை புதிய கட்டிடமாக இருந்தாலும் அரசு அலுவலகங்கள் ஒன்று போலவே இருக்கின்றன. ஒன்று போலவே செயல்படுகின்றன. “அந்தப் புத்தகக்கடையின் பெயர் நைட்ஸ். இரவு ஒன்பதரை மணிக்குத் தான் திறப்பார்கள். விடியும் வரை கடை …

இரவை வாசிப்பவர்கள் Read More »