தெலுங்கு மொழிபெயர்ப்பு
எனது சிறுகதை மழையாடல் தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. மொழிபெயர்த்திருப்பவர் ஜி. பாலாஜி
எனது சிறுகதை மழையாடல் தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. மொழிபெயர்த்திருப்பவர் ஜி. பாலாஜி
காட்டிலிருந்த புலியொன்று நீர் அருந்துவதற்காக வந்த குளத்தில் ஒரு சிவப்புக் கொண்டை மீன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டது. அந்த மீனிற்குத் தன்னைக் கண்டுபயமில்லை என்பது புலிக்கு வியப்பாக இருந்தது. புலி தன்னைக் கவனிப்பதை அறிந்தவுடன் சிவப்புக் கொண்டை மீன் வேண்டுமென்றே வாலசைத்து துள்ளியது. புலிக்கு அது வேடிக்கையாகத் தோன்றியது. “என்னை கண்டு பயமில்லையா“ எனக்கேட்டது புலி “தண்ணீரை விட நீ ஒன்றும் பலசாலியில்லை. நான் தண்ணீரில் பிறந்து வளர்ந்தவள்“ என்றது சிவப்புக் கொண்டை மீன் புலிக்குச் …
தேசாந்திரி Youtube சேனலில் வெளியாகியுள்ள இலக்கிய உரை ”நவீன மலையாள இலக்கியத்தின் அடையாளம் பஷீர் https://youtu.be/XSZSPY0SNhQ
எனது கதைகள், நாவல்கள், பயண நூல், கட்டுரைகள் பற்றி கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் பலரும் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள். இதுவரை நான்கு பேர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். 20க்கும் மேற்பட்டவர்கள் எம்பில் பட்டம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலரே தனது ஆய்வேட்டினை எனக்கு அனுப்பித் தருகிறார்கள். மற்றவர்கள் அனுப்புவதில்லை. ஆய்வாளர்கள் ஒரு பிரதியை எனக்கு அனுப்பினால் உங்கள் ஆய்வில் என்ன சொல்லியிருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்வேன். •• எனது சிறுகதைத் தொகுதி பற்றி வெளியாகியுள்ள ஆய்வேடு
– மா. ஹரிஹரன். கோவை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய உபபாண்டவம் எனும் நாவலை வாசித்தேன் பொதுவாக மகாபாரதம் கதை என்பது நடந்த நிகழ்ச்சிகளை யாராவது வரிசைக்கிரமமாகக் கூறுவதாக இருக்கும். அதாவது Narrative style என்பதுபோல. இதில் திரு. எஸ்.ரா அவர்கள் ஒரு நாடோடிப் பயணியாக அந்தக் காலகட்டத்திற்குள் பயணித்து, அந்தக் கதைமாந்தர்களுடன் விவாதித்து, அவர்களுடைய மன வோட்டத்தினை அவர்கள் மூலமாகவும், மற்றவர் வாயிலாகவும் கூறுகிறார். கதைக்களம் முன், பின்னாக மாறுகின்றது. மகாபாரதத்தில் பேசப்படாத சாமானிய மக்களிடம் இவர் …
-கிஷோர் குமார் சமூகத்தின் கடைக்கோடி மனிதர்களையும் , அதிகாரத்தால் அநீதி இழைக்கப்பட்டவர்களையும் பற்றித் தமிழ் இலக்கியம் தொடர்ந்து பேசிக்கொண்டு வந்துள்ளது. இக்கருவை வரலாற்றுக் காலத்தில் வைத்து ஆராய்கிறது ராமகிருஷ்ணனின் இடக்கை நாவல். அத்தோடு மட்டும் இந்நாவலை குறுக்கிக்கொள்ள முடியாதபடி வாசிப்பால் விரித்தெடுக்க வேண்டிய பலதளங்களையும் இந்நாவல் தொட்டு சென்றுள்ளது. முகலாயப் பேரரசரான அவுரங்கசீபின் இறுதி காலத்தில் அனைத்து வரலாற்று நாயகர்களும், மாமன்னர்களும், புரட்சி வீரர்களும் அனுபவிக்கும் அந்தக் கொடுந் தனிமையை அவுரங்கசீபும் அனுபவிக்கிறாரார். இளமையில் மரணத்தைத் துச்சமாக …
– அ.திருவாசகம். மதுரை. உங்களின் ஒவ்வொரு புத்தகத்தையும் விலை கொடுத்து வாங்கிப் படிக்கும் போது உள்ளே புதிதாக ஒரு உலகத்தைக் காணமுடிகிறது.சமீபத்தில் நெடுங்குருதி நாவல் படித்தேன். கிட்டத்தட்ட 525 பக்கங்கள் வேம்பர்களின் வாழ்வு வேம்பலைக் கிராமத்தின் வழியாகச் சொல்லப்படுகின்றன. நம் கரிசல் நிலத்தின் வெயில் குடித்து வளர்ந்த மனிதர்களின் வாழ்க்கையின் அவலத்தைச் சிறப்பாய் சொல்லியிருக்கிறீர்கள். இந்நாவலில் வரும் பாத்திரங்கள் நாகு , ரத்னாவதி , வேணி, திருமா , வசந்தா , ஜெயக்கொடி , வடுவார்பட்டி குறவர்கள், …
N பிரசன்ன குமார் •• நாவல் தொடங்கும் முதல் வார்த்தையில் தொடங்கி நாவல் முழுதும் ஒரு ஜீவன் பயணிக்கிறது. கதை மாந்தர்களான பக்கிரி, ரத்தினம் ஆகியோரது வாழ்வு நிலை, அவர்தம் குடும்பங்களின் நிலை அவர்களுடைய எண்ண ஓட்டங்களின் மூலம் நாயனர்களின் தற்கால வாழ்வியல் முறைகள் தெளிவாக்கப்பட்டுள்ளது. நாவல் சொல்லப்பட்டுள்ள விதம், கதை விரியும் தன்மை ஆகியவை இந்நாவலை வாசகனின் பார்வையில் விலக்காமல், ஒருங்கே நாவல் உடன் பயணிக்க வைக்கிறது. ஒவ்வொரு கதையின் பின் புலத்திலும் ஒருவர் எவ்வாறு …
டி.கே.கோபாலனுக்குச் சாவிகள் என்றால் பிடிக்கும். அதுவும் வீட்டுச்சாவியை வைத்துக் கொள்வது என்பது அவரது தனி உரிமை. வீட்டுச்சாவியைச் சட்டைப் பையில் போட்டுக் கொள்ளும் போது அதன் கனம் தாளாமல் பை ஒரு பக்கம் இழுக்கும். அந்தக் கனம் தான் அவரது பொறுப்புணர்வின் அடையாளம். வீட்டை நிர்வகிக்கிறோம் என்பதன் சாட்சியம். ஆகவே அவர் ஒரு போதும் வீட்டுச்சாவியை மனைவியிடமோ, பிள்ளைகளிடமோ தர மாட்டார். அவசரத்திற்கு மாற்றுச்சாவி ஒன்று போட்டு வைத்துக் கொள்வோம் என்று மனைவி சொன்ன யோசனையைக் கூடக் …
யஜுசிரோ ஒசு இயக்கிய டோக்கியோ ஸ்டோரி சினிமா பார்த்துத் திரும்பும் போது மாறன் தனது தந்தையும் தாயையும் நினைத்துக் கொண்டான். படத்தில் வரும் பெற்றோர் டோக்கியோவுக்கு வந்ததும் தங்கள் தனிமையை நினைத்துப் பயப்படுகிறார்கள். சொந்த பிள்ளைகளால் பிரித்து வைக்கப்படுகிறார்கள். நிராகரிக்கப்படுகிறார்கள். அந்தப் பிள்ளைகளில் ஒருவனைப் போலத் தன்னை உணர்ந்தான். படம் முடிந்து வெளியே வந்த போது மாநகரம் உறங்கியிருக்கவில்லை. வாகன இயக்கம் குறைந்திருந்தது. நடந்தே அறைக்குத் திரும்ப வேண்டும். கோடம்பாக்கம் பாலத்தை ஒட்டிய மேன்ஷன் ஒன்றில் குடியிருந்தான். …