பாராட்டுவிழா
நான் பாரதிய பாஷா பரிஷத் விருது பெற்றதற்கான பாராட்டுவிழா தூத்துக்குடியில் நடைபெறுகிறது ஆகஸ்டு 1 வெள்ளிக்கிழமை மாலை காமராஜ் கல்லூரி அரங்கில் விழா நடைபெறுகிறது நூலக மனிதர்கள் இயக்கம் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது.
நான் பாரதிய பாஷா பரிஷத் விருது பெற்றதற்கான பாராட்டுவிழா தூத்துக்குடியில் நடைபெறுகிறது ஆகஸ்டு 1 வெள்ளிக்கிழமை மாலை காமராஜ் கல்லூரி அரங்கில் விழா நடைபெறுகிறது நூலக மனிதர்கள் இயக்கம் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது.
கோவை புத்தகத் திருவிழா கொடீசியா அரங்கில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள கோவை வருகிறேன். ஜுலை 19, 20,21 மூன்று நாட்களும் தேசாந்திரி பதிப்பக அரங்கு 67ல் என்னைச் சந்திக்கலாம்.“ ஜுலை 21 திஙகள் கிழமை மாலை புத்தகத் திருவிழா அரங்கில் “புத்தகங்களின் சரித்திரம்“ என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்
தாவோ கோவிலுக்குச் செல்வது எப்படி என்றொரு ஆங்கிலக் கவிதை தொகுப்பை மலையாள கவிஞர் சச்சிதானந்தன் வெளியிட்டுள்ளார். இருமொழிகளில் வெளியாகியுள்ள இந்தத் தொகுப்பை INTERNATIONAL POETRY NIGHTS IN HONG KONG வெளியிட்டுள்ளது. இதில் மிகச்சிறந்த கவிதைகள் இடம்பெற்றுள்ளன இந்தத் தொகுப்பின் முதல்கவிதை திக்குவாய் பற்றியது. மிக அழகாக எழுதியிருக்கிறார். இந்தக் கவிதை திக்குவாயை ஒரு குறீயிடாக மாற்றுகிறது. திக்குவாய் குறித்த கேலிகள். அவமானங்களைப் புறந்தள்ளி அதனைப் புதியதொரு மொழியாக அறிவிக்கிறது. •• திக்குவாய் என்பது ஒரு குறையல்ல. …
ஜெர்மானிய எழுத்தாளர் எரிக் மரியா ரெமார்க்கின் A Time to Love and a Time to Die நாவல் போரின் துயர நாட்களை விவரிக்கிறது. ஹெமிங்வேயின் A Farewell to Arms நாவலைப் போன்ற கதைக்களம் கொண்டது. இதில் போர் முனையிலிருந்து வீடு திரும்பி வரும் சிப்பாய் கிரேபரின் காதலும், பெற்றோரை தேடும் அவனது இடைவிடாத பயணமும் விவரிக்கபடுகிறது. போரை முதன்மைப்படுத்திய ஐரோப்பிய நாவல்களுக்கும் ரஷ்ய நாவல்களுக்கும் நிறைய வேறுபாடிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளின் போர் நாவல்களில் …
போலந்து எழுத்தாளர் ஸ்லாவோமிர் மிரோசெக் (Slawomir Mrozek) கதை ஒன்றில் ஒருவன் தனது அறையில் உள்ள படுக்கை, பீரோ, மேஜை மூன்றும் நீண்டகாலமாக ஒரே இடத்தில் இருப்பதை நினைத்துச் சலிப்படைகிறான். அறையில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என விரும்பி அலமாரியை நகர்த்தி வேறு பக்கம் வைக்கிறான். படுக்கையை அந்தப் பக்கம் திருப்புகிறான். மேஜையை ஒரமாக நகர்த்திவிடுகிறான். இந்த மாற்றம் பிடித்திருக்கிறது. ஆனால் சில நாட்களில் மீண்டும் அறையின் தோற்றம் சலிப்பை உருவாக்குகிறது. இந்த முறை அறையின் …
உலகின் சிறந்த திரைப்படங்களை அறிமுகம் செய்யும் விதமாக திரைப்பயணி என்ற காணொளித் தொடரைத் துவங்கியுள்ளேன். தேசாந்திரி யூடியூப் சேனலில் இதனைக் காணலாம். இந்த தொடரின் முதல் பகுதி நேற்று வெளியாகியுள்ளது.
ஈரானிய அனிமேஷன் இயக்குனர் ஹொசைன் மொலாயெமி மற்றும் ஷிரின் சோஹானி இயக்கத்தில் வெளியான இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ் சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதைப் பெற்றிருக்கிறது. 20 நிமிஷங்கள் கொண்ட இந்தப் படத்தில் உரையாடலே கிடையாது. நான்கு கதாபாத்திரங்கள். போரின் பாதிப்பால் மனஅழுத்தம் கொண்ட தந்தை. அவரைக் கவனித்துக் கொள்ளும் மகள். கரையொதுங்கிய ஒரு திமிங்கலம். நான்காவது கதாபாத்திரமாக இருப்பது கடல். இந்தப் படத்தை உருவாக்க ஆறு ஆண்டுகள் ஆனது என்கிறார் இயக்குநர். …
கோவை புத்தகத் திருவிழா 20255 கொடீசியா அரங்கில் ஜுலை பதினெட்டு துவங்கி பத்து நாட்கள் நடைபெறுகிறது. இதில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது அரங்கு எண் 67. ஜுலை 19 சனிக்கிமை முதல் ஜுலை 21 திங்கள் வரை மூன்று நாட்கள் புத்தகத் திருவிழாவில் இருப்பேன். விருப்பமான வாசகர்கள். நண்பர்கள் சந்திக்கலாம் ஜுலை 21 திங்கள் மாலை ஆறுமணிக்கு கொடீசியா அரங்கில் “புத்தகங்களின் சரித்திரம்“ என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன். ஜோஹன்னஸ் குட்டன்பெர்க் கி.பி. 1450 ஆம் ஆண்டில் …
சந்திரகிரி கொலை வழக்கு என்ற துப்பறியும் நாவல் வெளியான ஆண்டு 1937 ஆக இருக்கலாம். அதை எழுதியவர் சோம.வெங்கடலட்சுமி. எட்டணா விலையில் அந்த நாவல் விற்கபட்டது. யாரோ ஒரு வழக்கறிஞர் தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டு பெண் பெயரில் கதை எழுதி வெளியிட்டிருக்கிறார் என்று பேசிக்கொண்டார்கள். பாண்டுரங்கன் அந்த நாவலை விலை கொடுத்து வாங்கவில்லை. அது போல நாவல் ஒன்றை தான் எழுதியிருப்பதாகவும், அதை அச்சிட வேண்டும் என்றும் கோபால்ராவ் அச்சகத்திற்கு வந்த திருத்தேரி கொடுத்த புத்தகத்தைத் …
குடிப்பதற்கு ஒரு டம்ளர் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் ஒருவனின் இரவு வாழ்க்கையை விவரிக்கிறது ஜாக்தே ரஹோ. 1956ல் வெளியான இந்தி திரைப்படம். எழுத்தாளர் கே.ஏ. அப்பாஸின் கதை. சோம்பு மித்ரா இயக்கியுள்ளார், ஒற்றை வரிக் கதையைக் கொண்டு மிகச் சிறப்பான படத்தை ராஜ்கபூர் எடுத்திருக்கிறார். கல்கத்தாவின் ஒரு இரவில் படம் தொடங்குகிறது ஏழை விவசாயியான ராஜ்கபூர் வேலை தேடி நகரத்திற்கு வருகிறார். கிராமவாசியான அவருக்குப் பெயர் கிடையாது. அவர் ஒரு அடையாளம் மட்டுமே. அவரது தோற்றத்தைக் கண்டு …