குறுங்கதை-11 போர்வீரனின் சூரியன்.
யுத்தமுனையிலிருந்த இளம் போர்வீரன் ஒவ்வொரு நாளும் தனது மனைவியை, பிள்ளைகளை, தாயை, சொந்த வீட்டினை, வீட்டுச் சுவரில் ஓடியாடும் அணிலை, எப்போதாவது வந்து போகும் பச்சை கழுத்து புறாவை நினைவு கொண்டபடியே இருந்தான். சில வேளைகளில் அவன் நினைவில் வீட்டுப்பசுவின் கழுத்துமணி சப்தம் கூடக் கேட்கும். அடுப்பில் தாளிக்கும் மணம் கூட நாசியைத் தொடும். படியில் கிடந்த மனைவியின் செருப்பில் ஒட்டியிருந்த சேறு கூடத் துல்லியமாகத் தெரியும். இவ்வளவு ஏன் உறங்கும் குழந்தைகளின் சீரான மூச்சொலி கூட …