குறுங்கதை -7 சாலை ஓவியன்

சாலையில் கரித்துண்டுகளைக் கொண்டு ஓவியம் வரையும் ஒருவனிருந்தான். அவன் தினமும் பின்னிரவில் யாருமற்ற சாலையில் அமர்ந்தபடியே ஓவியம் வரைந்து கொண்டிருப்பான். மற்ற சாலை ஓவியர்களைப் போலக் கடவுள் உருவத்தை அவன் வரைவதில்லை. மாறாகத் தாயும் சேயுமாக இருவரை தான் வரைவான். ஒவ்வொரு நாளும் அந்தத் தாயின் முகம் மாறிக் கொண்டேயிருக்கும். சில சமயம் அந்த முகத்தில் தூய மகிழ்ச்சி ததும்பும். சில வேளை சோகம் படிந்ததாகக் காணப்படும். பெரும்பான்மை நேரம் வெறித்த பார்வை கொண்ட முகமாகயிருக்கும். ஆனால் …

குறுங்கதை -7 சாலை ஓவியன் Read More »

மும்பை

மும்பை Gateway Litfest 2020 விழாவில் கலந்து கொள்கிறேன். இதற்காக பிப்ரவரி 14 முதல் 16 வரை மும்பையில் இருக்கிறேன். விருப்பமான நண்பர்கள் என்னைச் சந்திக்கலாம்.

குறுங்கதை -6 பச்சைக் காதுள்ள முயல்

மலையடிவாரத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு மருதன் எப்போதும் வேங்கை மரத்தடியில் உட்கார்ந்து கொள்வான். மேகங்கள் கடந்து போவதை வேடிக்கை பார்ப்பது தான் அவனது பொழுதுபோக்கு. சில நேரங்களில் ஆடுகளுடன் பேசிக் கொண்டிருப்பான். மருதனுக்கென யாருமில்லை. இந்த ஆடுகளும் கூட அவனுக்குச் சொந்தமானவையில்லை. நல்லான் குடும்பத்துக்குச் சொந்தமான ஆடுகளை மேய்ப்பவனாக இருந்தான். தான் எதற்காக வாழ்கிறோம். ஏன் தன்னை வாழ்க்கை இப்படியிருக்கிறது எனச் சில நேரம் சலித்துக் கொள்வான். ஆனால் இதிலிருந்து விடுபட அவனுக்கு வழிதெரியவில்லை ஒரு நாள் …

குறுங்கதை -6 பச்சைக் காதுள்ள முயல் Read More »

குறுங்கதை- 5 எவரது கண்ணீர்

திருமண வீட்டில் அந்த முதியவரைக் கண்டேன். திருமண மேடையைப் பார்த்தவாறு சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். எண்பது வயதைத் தாண்டிய தோற்றம். கைகள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தன. வீங்கிய பாதங்கள். பட்டு வேஷ்டியைத் தளர்வாகக் கட்டியிருந்தார். வேஷ்டி விலகி தொடை தெரிந்தது. சிறுவர்கள் அணிவது போலக் காலர் இல்லாத  சட்டை. மணமகளின் தாத்தா என்றார்கள். அவரது கழுத்து ஒரு பக்கமாகச் சாய்ந்திருந்தது. அவர் பேசும் போது கிணற்றுக்குள்ளிருந்து சப்தம் வருவது போலத் தெளிவற்றுக் கேட்டது. வீட்டில் படுக்கையிலே கிடப்பவர் …

குறுங்கதை- 5 எவரது கண்ணீர் Read More »

திருவனந்தபுரத்தில்

பிப்ரவரி 1 மாலை யாமம் நாவலின் மலையாள மொழியாக்கம் வெளியீடு திருவனந்தபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது. அரண்மனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில்  மகாராணி அஸ்வதி திருநாள் கௌரி லட்சுமி பாய் நூலை வெளியிட்டார். ISRO முன்னாள் சேர்மன் மாதவன் நாயர் நூலைப் பெற்றுக் கொண்டார். எம். ஆர். தம்பான். ஸ்ரீஷா சேதுராமன், டாக்டர் விலாக்குடி ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு நாவல் குறித்து உரை நிகழ்த்தினார்கள். நிகழ்விற்குக் கவிஞர் சுகுமாரன், ஜி. ராஜேந்திரன் IAAS ஆகியோர் வந்திருந்தது மிகுந்த மகிழ்ச்சி தந்தது. மொழிபெயர்ப்பாளர் ஷைலஜா ரவீந்திரன் இல்லத்திலே இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன். …

திருவனந்தபுரத்தில் Read More »

குறுங்கதை – 4 பெயரற்ற காற்று

அந்தக் காற்றுக்குப் பெயரில்லை. எந்தத் திசையிலிருந்து அக்காற்று துவங்கியது என்றும் தெரியாது. ஆனால் அக்காற்று வீச ஆரம்பித்தவுடன் நகரில் வசித்த எல்லோரது தலைமயிர்களும் தன் கருமை நிறமிழந்து முற்றிலும் வெண்ணிறமாகின. ஆம். பிறந்த குழந்தை உள்ளிட்ட அனைவரது தலைமயிர்களும் ஒரு நிமிஷத்தில் நரைத்துப் போயின. நரையென்பது வயதாகி வருவது தானே. எப்படிப் பள்ளிச்சிறுவர்களுக்கு, இளைஞர்களுக்கு, இளம்பெண்களுக்கு ஒரு நிமிஷத்தில் தலை நரைத்துப் போனது எனக் குழம்பிப் போனார்கள். காற்றால் தான் தலை வெண்ணிறமாகிறது என்பதை அவர்கள் கண்டறிந்த …

குறுங்கதை – 4 பெயரற்ற காற்று Read More »

ஸ்ரீதுர்காவின் உரை.

தகடூர் புத்தக பேரவையின் சார்பில் 26.01.2020 அன்று தருமபுரியில் நடைபெற்ற புத்தக அறிமுகம்-5 நிகழ்ச்சியில் எனது சிறார் நூலான முட்டாள்களின் மூன்று தலைகள் குறித்து ஸ்ரீதுர்கா என்ற சிறுமி சிறப்பாக அறிமுகம் செய்துள்ளார். ஸ்ரீதுர்காவிற்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள். நிகழ்வை ஏற்பாடு செய்த தகடூர் புத்தக பேரவைக்கு அன்பும் பாராட்டுகளுக்கும்.. இணைப்பு https://youtu.be/IhNGVf5Q7i8 •• 30.1.20

குறுங்கதைகள் -3 பறவைகளின் தையற்காரன்

மேற்குமலையின் அடர்ந்த வனத்தை நெடுங்காடு என்றார்கள். அந்த நெடுங்காட்டினை அடுத்த கிராமம் ஒன்றில் ஆதன் என்ற தையற்காரன் வசித்து வந்தான். இயந்திரத்தைப் பயன்படுத்தாமல் தானே ஊசிகள் செய்து தனது கையால் அவன் தையல்வேலைகள் செய்துவந்தான். கிராமவாசிகளுக்கான உடைகளைத் தைத்துக் கொடுப்பதல்ல அவனது வேலை. அவன் பறவைகளின் தையற்காரன். பறவை தனது உதிர்ந்த இறகினை  கவ்விக் கொண்டு வந்து அவனிடம் தந்து தனது ரெக்கையோடு சேர்த்துத் தைத்துவிடச் சொல்வது வழக்கம். தனது விசேச ஊசிகளைக் கொண்டு கச்சிதமாக அதைப் …

குறுங்கதைகள் -3 பறவைகளின் தையற்காரன் Read More »

உப்பு வணிகனின் பாடல்

ஜப்பானிய சினிமாவின் கிளாசிக் வரிசையில் கொண்டாடப்படும் திரைப்படம் The Ballad of Narayama. ஷோஹெய் இமாமுரா இயக்கிய இந்தத் திரைப்படம் ஒரு மானுடவியல் ஆவணமாகக் கருதப்படுகிறது. 1986ல் இந்தப் படத்தை முதன்முறையாகப் பார்த்தேன். விருதுநகரில் உள்ள திரையரங்கம் ஒன்றில் ஞாயிறு தோறும் காலைக்காட்சியாக ஆங்கிலப்படம் திரையிடுவார்கள். அப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை இந்தத் திரைப்படம் திரையிடப்பட்டது. படத்தின் மிதமிஞ்சிய பாலியல் காட்சிகள் காரணமாக இதை ஆங்கிலப்படம் என நினைத்து விநியோகம் செய்திருக்கக் கூடும். படத்தில் சப்டைட்டில் இல்லை. ஆனால் …

உப்பு வணிகனின் பாடல் Read More »

பூமியின் மாற்றங்கள்

Humans now change the Earth and its systems more than all natural processes combined – Anthropocene ANTHROPOCENE: The Human Epoch என்ற டாகுமெண்டரி திரைப்படத்தைக் கண்டேன். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் ஆறு கண்டங்களில் 20 நாடுகளுக்குப் பயணம் செய்து மனிதர்கள் பூமியில் ஏற்படுத்தியுள்ள சுற்றுச்சூழல் தாக்கத்தை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். வியப்பூட்டும் காட்சிகளும் அதிர்ச்சி தரும் தகவல்களும் நிரம்பிய அரிய ஆவணப்படமிது.  இப் படத்தை உருவாக்க நான்கு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்கள். கென்யாவின் நைரோபியில் …

பூமியின் மாற்றங்கள் Read More »