குறுங்கதை 20 புத்தரைச் சந்தித்த கழுகு
ராஜகிருகத்தை நோக்கி புத்தர் நடந்து கொண்டிருந்த நாளில் ஒரு கழுகு அவரைச் சந்திப்பதற்காகத் தரையிறங்கியது. கூரிய நுனியுடைய வளைந்த அலகும், வலுவான நகங்களும், அகண்ட இறக்கைகளும் கொண்ட அக்கழுகு கேட்டது “கோதமரே நீங்கள் ஏன் பறப்பதில்லை.“ புத்தர் சொன்னார் “நானும் பறக்கவே செய்கிறேன். ஆனால் வானத்தில் அல்ல“ கழுகு மறுபடியும் கேட்டது “வானில் பறக்கையில் பெரியதாக உள்ள உலகம் தரையிறங்கும் போது சிறியதாகிவிடுகிறது.. அது ஏன்“ கோதமர் சொன்னார் “பறத்தலின் போது நீ உடலை வெல்கிறாய். பூமியில் …