மித்ராவின் குற்றச்சாட்டுகள்.
கிருஷ்ணா ஸோப்தி ஞானபீடம் விருது பெற்ற இந்தி மொழி எழுத்தாளர். இவரது மித்ரோ மராஜனி என்ற நாவல் தமிழில் மித்ராவந்தி என வெளியாகியுள்ளது. நேஷனல் புக் டிரஸ்ட் இதை வெளியிட்டிருக்கிறார்கள். பெண்ணின் காமத்தையும் கூட்டுக்குடும்பத்தில் பெண் நடத்தப்படும் விதம் பற்றியும் மித்ராவந்தியில் ஸோப்தி சிறப்பாக எழுதியிருக்கிறார். மித்ராவந்தி என்ற பெண்ணின் கதாபாத்திரம் போல இந்திய இலக்கியத்தில் எவரும் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கியதில்லை. அவள் வெளிப்படையாகத் தனது உடலின் வேட்கைகளை, காமத்தூண்டுதல்களைப் பேசுகிறாள். மற்றவர்கள் ரகசியமாக இன்பங்களை அடைந்து …