மீனின் பாடல்
உதிரும் இலைகளின் பாடல் என்ற தலைப்பில் சீனக்கவிதைகளை மொழியாக்கம் செய்து வெளியிட்ட ப. கல்பனா தற்போது மலர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தில் எனக் கொரியக்கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். அவரும் புதுவையில் வசிக்கும் பேராசிரியர் பா. இரவிக்குமாரும் இணைந்து கொரியாவின் முக்கியக் கவிஞர்களின் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளைச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்கள் .பரிசல் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. கொரியக்கவிஞரான கோ யுன் குறித்துத் தடம் இதழில் நான் விரிவான கட்டுரை எழுதியிருக்கிறேன். அந்தக் கட்டுரை தங்களுக்கு ஒரு உந்துதலாக இருந்ததாக ரவிக்குமார் …