மார்க்வெஸின் மஞ்சள் ரோஜாக்கள்.
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் வாழ்க்கையை விவரிக்கும் GABO: THE CREATION OF GABRIEL GARCIA MARQUEZ என்ற ஆவணப்படத்தினைப் பார்த்தேன். கொலம்பியாவின் வடபகுதியிலுள்ள அரகடகா என்ற சின்னஞ்சிறிய ஊரில் பிறந்து எவ்வாறு உலகப்புகழ் பெற்ற எழுத்தாளராக உருவானார் என்பதைப் படம் விரிவாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. மார்க்வெஸின் ஊருக்கு ரயில் வரும் காட்சியைக் காணும் போது அவரது செவ்வாய்க்கிழமை பகல் தூக்கம் என்ற கதை நினைவில் வந்து போனது. அரகடகா வாழைத்தோட்டங்கள் நிரம்பிய நிலப்பரப்பு. …