கோவையில்

நவம்பர் 14 வியாழன் மாலை கோவை ப்ரூக்பீல்ட் மாலில் உள்ள ஒடிஸி புத்தகக் கடையில் வாசகர் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதில் புத்தக வாசிப்பு குறித்து உரையாற்றுகிறேன். அதைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

வெண்ணிற நினைவுகள்

இந்து தமிழ்திசை நாளிதழில் புதிய தொடர் ஒன்றை ஆரம்பித்துள்ளேன். வெண்ணிற நினைவுகள் என்ற இந்தத் தொடர்  ஞாயிற்றுகிழமை தோறும் வெளியாகும். தமிழ் சினிமாவின் அறியப்படாத  விஷயங்களை முதன்மைப்படுத்தி இந்தத் தொடரை எழுதவுள்ளேன். இந்தத் தொடரை https://www.hindutamil.in/ ஆன்லைனிலும் வாசிக்கலாம். •••

அஞ்சலி

நண்பர் அருண்மொழியின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் கூட எனது சிறுகதையை மையமாகக் கொண்ட நாடகம் ஒன்றை நிகழ்த்துவதாகச் சொல்லி அதைக் காணுவதற்காக அழைத்தார். வெளியூரில் இருக்கிறேன். வர இயலவில்லை என்றேன். தொலைப்பேசியில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அருண்மொழியை இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அறிவேன். அவர் இயக்கிய காணி நிலம், ஏர் முனை  போன்ற  படங்கள் நிறையத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டுள்ளன. சினிமா பயிலரங்குகள் நிறைய நடத்தியிருக்கிறார். திரைப்படக் கல்லூரியில் ஆசிரியராகப் …

அஞ்சலி Read More »

காதம்பரி தேவியின் காதல்

ரவீந்திரநாத் தாகூருக்கும் அவரது அண்ணி காதம்பரி தேவிக்குமான நட்பையும் காதலையும் விவரிக்கும் காதம்பரி (Kadambari) என்ற வங்காளப்படத்தைப் பார்த்தேன். சுமன் கோஷ் இயக்கியது . காதம்பரி தேவியாக நடித்திருப்பவர் கொங்கனா சென். காதம்பரி தேவி பற்றிச் சுனில் கங்கோபாத்யாயா Pratham Alo நாவலில் விரிவாக எழுதியிருக்கிறார். தாகூரின் இந்த காதல் உறவு குறித்தும் இன்றும் சர்ச்சை தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கிறது. தாகூரின் சகோதரர் ஜோதிரிந்திரநாத்தின் மனைவியே காதம்பரி தேவி. தாகூரை விடவும் இரண்டு வயது சிறியவர் . …

காதம்பரி தேவியின் காதல் Read More »

இன்னொரு நேர்காணல்

FIRST CITY டெல்லியிலிருந்து வெளியாகும் சுயாதீன கலை மற்றும் கலாச்சார இதழாகும், 19 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவந்து கொண்டிருக்கிறது THE FIRST CITY இதழ் பாரீஸ் ரிவ்யூ போலவே தொடர்ந்து எழுத்தாளர்கள், ஒவியர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் பல்துறை ஆளுமைகளின் நேர்காணல்களை வெளியிட்டு வருகிறது. இந்த நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு THE FIRST CITY INTERVIEWS VOLUME 1 -6 வரை வெளியாகியுள்ளன. இதில் vol 5 தொகுதி ஓவியம் மற்றும் சிற்பக்கலைஞர்களின் நேர்காணல்கள் மட்டுமே கொண்டது. இந்தத் தொகுதி …

இன்னொரு நேர்காணல் Read More »

பொன்னீலன் 80

பொன்னீலன் 80- விழா நாகர்கோவிலில் வருகின்ற 16 நவம்பர் 2019 அன்று நடைபெறுகிறது. நான் பெரிதும் மதிக்கும் படைப்பாளி பொன்னீலன். அவர் பொதுவுடைமைச் சிந்தனையாளர் , முற்போக்கு இலக்கியத்தின் பிதாமகர். சிறந்த பேச்சாளர். பண்பாளர். ஊற்றில் மலர்ந்தது, கரிசல், கொள்ளைக்காரர்கள், தேடல், புதிய மொட்டுகள், புதிய தரிசனங்கள், மறுபக்கம் முதலிய நாவல்களை எழுதியிருக்கிறார்.  அடித்தள மக்களே அவரது நாவலின் முக்கியக் கதாபாத்திரங்களாக இருக்கிறார்கள். பொன்னீலன் எழுத்தில் நையாண்டியும், கேலியும் கூர்மையான அரசியல் விமர்சனமும் தனித்துவமாக வெளிப்படுகின்றன.. குமரி …

பொன்னீலன் 80 Read More »

நினைவின் உரையாடல்

ஐசக் பாஷவிஸ் சிங்கர் (Isaac Bashevis Singer,) நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். இவர் இட்டிஷ் இலக்கிய இயக்கத்தின் முதன்மை எழுத்தாளராவார். 1978-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். அவரது விரிவான நேர்காணல் கொண்ட Conversations with Isaac Bashevis Singer தொகுப்பினை வாசித்தேன். எழுத்தாளராக விரும்புகிறவர்களுக்கு இந்த நேர்காணல் நல்லதொரு வழிகாட்டி. எதை எழுத வேண்டும். எப்படி எழுத வேண்டும். எழுத்தின் நுட்பங்கள் எவையெனச் சிங்கர் விரிவாக விளக்குகிறார். கூடவே இலக்கிய வாசிப்பின் முக்கியத்துவம் …

நினைவின் உரையாடல் Read More »

தி பாரீஸ் ரிவ்யூ

1953ல் The Paris Review இதழ் துவக்கப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக எழுத்தாளர்களின் நேர்காணல்களை வெளியிட்டு வருகிறது. இந்த நேர்காணல்கள் The Paris Review Interviews என 9 தொகுதிகளாக இதுவரை வெளியாகியுள்ளன. நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்கள் பலரின் நேர்காணல்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளனின் அகத்தை விரிவாக வெளிப்படுத்தும் இந்த நேர்காணல்கள் செறிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நேர்காணல்கள் தொகுதி வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஒரு பைபிள் என்று சொல்கிறார்கள். அது வெறும் வார்த்தையில்லை. உண்மை. எழுதும் முறை …

தி பாரீஸ் ரிவ்யூ Read More »

வாசிப்பெனும் கலை

வாசிப்பது என்பது பலருக்குப் பொழுதுபோக்கு, சிலருக்கு அது ஒரு கலை என எழுத்தாளர் ஜுலியன் பார்ன்ஸ் ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். மிகச் சரியான வாக்கியமது. புத்தகங்களின் எதிர்காலம் பற்றிய பயம் பலருக்குமிருக்கிறது. வாசிப்பது குறைந்து வருவதால் அச்சு புத்தகங்கள் வெளியாவது குறைந்துவிடும் என நினைக்கிறார்கள். அது உண்மையில்லை. மின் புத்தகங்களின் வருகையால் புதிய வாசகர்கள் உருவாகியிருக்கிறார்களே அன்றி அச்சுப் புத்தகங்களுக்கான தேவையும் அதன் வாசகர்களும் இருந்து கொண்டேயிருப்பார்கள். மின் புத்தகத்தின் விலை குறைவு என்பதே அதன் மீதான …

வாசிப்பெனும் கலை Read More »

சென்னையின் சிறிய புத்தகக் கடை

சென்னை அண்ணாசாலையில் ஸ்பென்சர் பிளாசா அருகிலுள்ள Taj Connemara விடுதியினுள் Giggles Bookshop என்றொரு சிறிய புத்தகக் கடை இருந்தது. மிகச்சிறிய புத்தகக் கடை ஆனால் அரிய நூல்கள் அங்கே கிடைக்கும். அக் கடையை நடத்தியவர் நளினி செட்டூர். அவர் ஒரு தீவிர இலக்கிய வாசகர். புத்தகக் கடையில் எந்தப் புத்தகம் எங்கேயிருக்கிறது என அவருக்கு மட்டும் தான் தெரியும். 1998ல் அந்தக் கடைக்கு முதன்முறையாகச் சென்றேன். அதன்பிறகு பலமுறை சென்றிருக்கிறேன். தற்போது அக்கடை நடைபெறவில்லை. நிர்வாகத்தினர் …

சென்னையின் சிறிய புத்தகக் கடை Read More »