FIRST CITY டெல்லியிலிருந்து வெளியாகும் சுயாதீன கலை மற்றும் கலாச்சார இதழாகும், 19 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவந்து கொண்டிருக்கிறது
THE FIRST CITY இதழ் பாரீஸ் ரிவ்யூ போலவே தொடர்ந்து எழுத்தாளர்கள், ஒவியர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் பல்துறை ஆளுமைகளின் நேர்காணல்களை வெளியிட்டு வருகிறது. இந்த நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு THE FIRST CITY INTERVIEWS VOLUME 1 -6 வரை வெளியாகியுள்ளன.
இதில் vol 5 தொகுதி ஓவியம் மற்றும் சிற்பக்கலைஞர்களின் நேர்காணல்கள் மட்டுமே கொண்டது. இந்தத் தொகுதி முக்கியமான நேர்காணல்களைக் கொண்டிருக்கிறது.
இதில் கோவாவைச் சார்ந்த ஓவியர் Francis Newton Souza நேர்காணல் இடம் பெற்றுள்ளது. மிக அற்புதமான நேர்காணலது. அதில் இயற்கையைத் தவிர வேறு எதுவும் முடிவற்ற தொடர்ச்சி கொண்டதில்லை என்கிறார் பிரான்சிஸ். அத்தோடு இலக்கியத்தின் மீது அவருக்குள்ள ஈடுபாடு மற்றும் முக்கிய ஒவியர்கள் குறித்த அவதானிப்பு வியப்பூட்டுகிறது..
தந்தை இல்லாத பிள்ளைகள் வீட்டில் தாங்கள் கண்காணிக்கப்படுவதாக ஒரு போதும் உணர்வதில்லை. தாய் ஒரு போதும் பிள்ளைகளைக் கண்காணிக்கமாட்டார். தான் தந்தையற்றவனாக இருந்த காரணத்தால் பள்ளி வயதில் வீட்டிலே நிர்வாண ஓவியம் வரையும் போது மனத்தயக்கமின்றி வரைந்ததாகக் கூறுகிறார். இது ஒரு புதிய கூற்று.
பள்ளியின் கழிப்பறையில் யாரோ பெண்ணுடலைக் கிறுக்கி வைத்திருக்க அந்த ஓவியம் சரியாக வரையப்படவில்லை என்று தான் திருத்தி வரைந்ததாகக் கூறுகிறார்.
நேர்காணல் முழுவதிலும் ஓவியனின் பார்வை எத்தனை தனித்துவமிக்கது என்பதை உணர முடிகிறது. .
THE FIRST CITY INTERVIEWS கட்டுரை போலவே எழுதப்பட்டிருக்கிறது. கேள்வி தனியாகவும் பதில் தனியாகவும் வெளியிடும் பாணியைத் தவிர்த்து கேள்வியும் பதிலும் கலந்த கட்டுரை போல எழுதப்பட்டிருக்கிறது.
இந்த நேர்காணல் தொகுப்புகள் தற்போது இணையத்தில் 70 சதவீத தள்ளுபடியில் கிடைக்கின்றன.
••