எழுத்தாளனுடன் வாழுவது
Living with a Writer என்ற கட்டுரைத் தொகுப்பினை வாசித்தேன். எழுத்தாளனுடன் வாழ்வது குறித்துப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் மனைவி அல்லது கணவர் தங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். BBC TV series ‘Walking with Dinosaurs’ எனத் தலைப்பே பயமுறுத்துகிறதே என்று ஒரு கட்டுரையின் துவக்க வரியுள்ளது. நிஜம் தானே. எழுத்தாளனுடன் சேர்ந்து வாழுவது என்பது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையில் ஊஞ்சலாடிக் கொண்டிருப்பது போலாகும். எப்போது ஊஞ்சல் சொர்க்கத்தை நோக்கிச் செல்லும் எப்போது நரகத்தை நோக்கித் …