வாழ்த்துகள் போகன் சங்கர்
எழுத்தாளர் போகன் சங்கருக்குக் கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது அறிவிக்கப்பட்டுள்ளது . சிறிய எண்கள் உறங்கும் அறை என்ற கவிதைத் தொகுப்பு இந்த விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதே தொகுப்பு 2018ம் ஆண்டிற்கான கவிஞர் ஆத்மாநாம் விருதும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போகன் சங்கருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள். உரைநடையில் வண்ணநிலவனிடம் காணப்படும் கிறிஸ்துவ உலகம், தூய அன்புக்கான ஏக்கம், தன்னிருப்பு தொடர்பான இடையுறாத கேள்விகள் போகனின் கவிதை உலகிலும் வெளிப்படுகின்றன. போகனின் கவிதைகள் தனித்துவமான …