மை டியர் செகாவ்

அண்ணா பல்கலைகழகத்தில் மீடியா சயின்ஸ் படித்து முடித்துள்ள எனது பையன் ஹரி பிரசாத் தனது இரண்டாவது குறும்படத்தை இயக்கியிருக்கிறான். இதன் கதையை நான் எழுதியிருக்கிறேன். விரைவில் வெளியாகவுள்ள இக்குறும்படம் குறித்த அறிவிப்பு.

நான் தஸ்தாயெவ்ஸ்கி

தஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றி மூன்று நாடகங்களை நான் எழுதியிருக்கிறேன். ஒன்று பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறையில் முருகபூபதி பயிலும் போது அவரது தயாரிப்பிற்காக notes from underground குறுநாவலை மையமாகக் கொண்டு மரணவீட்டின் குறிப்புகள் என்ற நாடகத்தை எழுதித் தந்தேன். அது பல்கலைக்கழக வளாகத்திலே நாடகமாக நிகழ்த்தப்பட்டது. பின்பு தஸ்தாயெவ்ஸ்கியின் காதலை முதன்மைப்படுத்தி தஸ்தாயெவ்ஸ்கியின் சங்கீதம் என்ற பெயரில் நாடகம் எழுதினேன். அதுவும் சென்னையில் மேடையேற்றப்பட்டது. தியேட்டர் லேப் நாடகக்குழுவின் ஜெயராவ் விருப்பத்திற்காகத் தஸ்தாயெவ்ஸ்கி வாழ்க்கையைப் பற்றிய நாடகத்தை எழுதிக் …

நான் தஸ்தாயெவ்ஸ்கி Read More »

நினைவு அஞ்சலி

தமிழ் சினிமாவின் பெருமைக்குரிய இயக்குனரான மகேந்திரன் அவர்களின் மறைவு பேரிழப்பாகும். அவரது திரைப்படங்கள் குறித்து  காவேரி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஜென் ராம் அவர்களுடன் உரையாடினேன். https://www.youtube.com/watch?v=DV9yKERrSaU&list=PLJ5oEG-B9MEGcYpb_dU_KL9por5w_WOF8&index=4&t=0s நன்றி : காவேரி தொலைக்காட்சி

பஷீரின் நாடகம்

நேற்று புதுவைப் பல்கலைக்கழக நாடகத்துறை சார்பாக நடைபெற்ற  வைக்கம் முகமது பஷீரின் மூன்று சீட்டுக்காரனின் மகள் சிறுகதையைத் தழுவிய வை ராஜா வை என்ற நாடகம் பார்க்கப் போயிருந்தேன். நண்பரும் நடிகருமான சுகுமார் இந்த நாடகம் குறித்துத் தெரிவித்திருந்தார். புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தினுள்ளே அரங்கை உருவாக்கியிருந்தார்கள். ஒரு மரத்தடி அதைச் சுற்றி அரங்க அமைப்பு.  ஏராளமான மாணவர்கள் நாடகம் பார்க்க வந்திருந்தார்கள். பஷீரே தனது கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி நாடகத்தைத் துவக்கி வைப்பது போல அமைத்திருந்தார்கள். வைக்கம் முகமது …

பஷீரின் நாடகம் Read More »

இரண்டு நகரங்கள்

டால்ஸ்டாயின் அன்னாகரீனினா நாவலை விவாதிப்பதற்கென நிறையக் குழுமங்கள் இணையத்தில் இருக்கின்றன. அப்படி ஒரு குழுமத்தில் பகிரப்பட்ட கட்டுரை ஒன்றை சமீபத்தில் வாசித்தேன். அது அன்னாகரீனினா மாஸ்கோவில் வாழ்ந்திருந்தால் இப்படி நடந்து கொண்டிருக்க மாட்டாள் அவள் வாழ்க்கை வேறுவிதமாக அமைந்திருக்கும் என்று கூறி மாஸ்கோ, பீட்டர்ஸ்பெர்க் இரண்டு நகரங்களுக்குமான வேறுபாட்டை, அதன் வாழ்க்கை முறையைக் கொண்டு நாவலின் மையத்தை புதிய கோணத்தில் அணுகுகிறது. அன்னாகரீனினா நாவல் 1878ல் வெளியான நாள் முதல் இன்று வரை தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. …

இரண்டு நகரங்கள் Read More »

சிங்கிஸ் ஐத்மாத்தவ்

கிர்கிஸ்தான் சோவியத் குடியரசில் ஒன்றாக இருந்த நாடு. இதன் வடக்கில்  இந்நாட்டின் வடக்கில் கசக்கிஸ்தான், மேற்கில் உஸ்பெகிஸ்தான், தென்மேற்கில் தஜிகிஸ்தான், மற்றும் கிழக்கில் சீன மக்கள் குடியரசு ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. கிர்கிஸ்தானின் தேசிய படைப்பாளியாக கொண்டாடப்படுகிறவர் சிங்கிஸ் ஐத்மாத்தவ். இவரது நாவல்களில் குல்சாரி, முதல் ஆசிரியர், ஜமீலா, சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று, ஒட்டகக் கண் போன்றவை தமிழில் வெளியாகியுள்ளன. சிங்கிஸ் ஐத்மாத்தவ்(Chinghiz Aitmatov) மிகச்சிறந்த படைப்பாளி.  இவரது நாவல்கள் யாவும் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளன. தங்கள் …

சிங்கிஸ் ஐத்மாத்தவ் Read More »

என் வாழ்க்கைப் போர்

தமிழ் அறிஞர் சி.இலக்குவனார் அவர்களின் சுயசரிதையான என் வாழ்க்கைப் போர் என்ற நூலை வாசித்தேன். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வாய்மேடு கிராமத்தில் 1909 ஆம் ஆண்டு எளிய குடும்பத்தில் பிறந்தவர் இலக்குவனார். இவரது வாழ்க்கை வரலாறு நூறு வருஷங்களுக்கு முன்பு நாகை பகுதி கிராமங்கள் எப்படியிருந்தன. கிராமப்புற வாழ்க்கையில் கல்வி பெற எவ்வளவு போராட வேண்டியிருந்தது என்பதன் சாட்சியமாகவுள்ளது. கிராமத்தில் பெட்டிக்கடை வைத்திருந்த இலக்குவனாரின் தந்தை ஒரு நாள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகிறார்.. அந்த நாட்களில் வயிற்றுப்போக்கு வந்தால் இறந்து போய்விடுவார்கள் என்ற பயம் …

என் வாழ்க்கைப் போர் Read More »

மதுரையின் திருவிழா

தேரோடும் எங்க சீரான மதுரையிலே ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம் என்ற திரைப்படப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் மதுரையின் திருவிழா நினைவுகள் வந்து போகும் மாட்டுவண்டி கட்டி சித்திரைத் திருவிழாவிற்கு போய் வந்த பால்ய வயதின் நினைவுகள் பசுமையாகயிருக்கிறது. மதுரையைப் பற்றி நிறையப் புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் இத்தனை அழகான புகைப்படங்களுடன் திருவிழா குறித்த தகவல்களுடன் மதுரையின் பண்பாட்டுச் சிறப்புகளை விவரிக்கும் ஒரு புத்தகம் இதுவரை வந்ததில்லை. அப்படி ஒரு நூலை சித்திரவீதிக்காரன் எழுதியிருக்கிறார் நண்பர் முத்துகிருஷ்ணன் நடத்தும் பசுமை …

மதுரையின் திருவிழா Read More »

தினமலர் – நேர்காணல்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கரிசல் பூமியில் பிறந்தவர். இவரது கதைகளை வாசிப்பது மிகு மழையின் ஊடே நனைந்து வீடு திரும்புவதை போன்ற அனுபவம். அங்கே காற்று, மழை, குளிர்ச்சி, பாதுகாப்புத் தேடும் மனநிலையும், யாவையும் மீறி இயற்கையில் ஒன்றுகலக்கும் தருணமும் ஒருங்கே கூடியிருக்கின்றன. தனக்கென தனித்துவமான கவித்துவ கதை சொல்லும் மொழி, கதைக்களங்கள் கொண்டவர். புனைவெழுத்தில் சாதனைகள் நிகழ்த்தியவர். நவீன தமிழ் சிறு கதையில் புதிய போக்குகளை உருவாக்கியவர். முழு நேர எழுத்தாளர். சினிமா வசனகர்த்தா. கரிசல் …

தினமலர் – நேர்காணல் Read More »

சிரிப்பின் பின்னால்.

லாரல் மற்றும் ஹார்டி (Laurel and Hardy) இருவரும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நகைச்சுவை இரட்டையர்கள். ஒல்லியான ஸ்டேன் லாரல் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். குண்டான ஆலிவர் ஹார்டி அமெரிக்கர். ஸ்லாப்ஸ்டிக் நகைச்சுவையில் இவர்கள் தலைசிறந்த கலைஞர்கள். இவர்களின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் Stan & Ollie என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். 2018ல் வெளியான படமது. நகைச்சுவை நடிகர்களின் வாழ்க்கையை விவரிக்கும் என்றாலும் படம் நகைச்சுவை கொண்டதாக மட்டுமில்லை. இரண்டு திரைக்கலைஞர்களின் புறக்கணிக்கபட்ட வலியை, நிராகரிப்பின் வேதனையை மிகச்சரியாகப் பதிவு …

சிரிப்பின் பின்னால். Read More »