பாலம் கல்யாணசுந்தரம் மிகச்சிறந்த சமூகச் சேவகர்..
தன்னுடைய வாழ்நாளில் சம்பாதித்த அனைத்தையும் அறக்கட்டளைகளுக்கே கொடுத்தவர்.
சர்வதேச அளவில் சிறந்த மனிதர் என Man of Millinium என்ற விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 6.5 மில்லியன் டாலர் (30 கோடி) பரிசாகப் பெற்றவர். அந்தப் பணம் முழுவதையும் ஏழை எளிய குழந்தைகள் நலனுக்காக அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் நடத்திவரும் அன்பு பாலம் என்ற சேவா அமைப்பு துறை தோறும் சாதனைகள் செய்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறது.
இந்த ஆண்டு இலக்கியப்பிரிவில் எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவதாகப் பாலம் அமைப்பு அறிவித்துள்ளது.
சேவையே வாழ்வாகக் கருதும் ஒருவர் அளிக்கும் விருது என்பதால் அதைப் பெற்றுக் கொள்வதில் பெருமையடைகிறேன்.
விருது வழங்கும் நிகழ்வு மே 10 மாலை நடைபெறுகிறது.
••