டெல்லி தமிழ் சங்கத்தில்
சாகித்ய அகாதமி விருது பெற்றதற்காக டெல்லி தமிழ் சங்கம் ஒரு பாராட்டு நிகழ்வை ஜனவரி 31 மாலையில் ஏற்பாடு செய்திருந்தது. நண்பர் பென்னேஸ்வரன் இதனைச் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார். தலைவர் இந்துபாலா, பொதுச்செயலாளர் திரு. முகுந்தன், ஷாஜகான் உள்ளிட்ட அதன் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டார்கள். நிகழ்வில் சஞ்சாரம் குறித்த தனது பார்வைகளை பேராசிரியர் ராஜகோபால் முன்வைத்து உரையாற்றினார். திருப்புகழ் ஐஏஎஸ் அவர்கள் நிகழ்விற்குத் தலைமை வகித்தார். அரங்கு நிரம்பிய கூட்டம். இது போலவே தமிழ்நாடு இல்லத்திலும் பாராட்டு …
நன்றிகள்
சாகித்ய அகாதமி விருது பெறுவதற்காக டெல்லி சென்று இன்றிரவு சென்னை திரும்பினேன். டெல்லியில் நிறைய நண்பர்களைச் சந்திக்க முடிந்தது மிகுந்த மகிழ்ச்சி தருவதாக அமைந்தது. விருது வழங்கும் நிகழ்வை ஒளிபரப்பு செய்த ஊடகங்களுக்கும் செய்தி வெளியிட்ட நாளிதழ்களுக்கும் நன்றி. இணையத்தில் நிறைய நண்பர்கள் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள் அவர்களுக்கும் நன்றி. சிற்பி பாலசுப்ரமணியம், மாலன், பாரதிபாலன். புதுவை முருகன், தமிழவன், உள்ளிட்ட சாகித்ய அகாதமி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் டெல்லியில் ஐந்து நாட்களும் உடனிருந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள். …
டெல்லி விழா
நாளை டெல்லி செல்கிறேன். 29 மாலை சாகித்ய அகாதமி விருது விழா. சாகித்ய அகாதமி 31 காலை 10 மணிக்கு நேருக்கு நேர் நிகழ்ச்சியை ரவீந்திர பவனில் நடத்துகிறது. ஆ. இரா. வேங்கடாசலபதியுடன் உரையாடுகிறேன் ஜனவரி 31 மாலை 7 மணிக்கு டெல்லி தமிழ் சங்கத்தில் பாராட்டுவிழா. இரண்டிலும் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
பாராட்டு விழா
· நேற்று நடைபெற்ற இந்திய ரஷ்ய கலாச்சார நிகழ்வில் சாகித்ய அகாடமி விருது பெற்றதற்காக என்னைக் கௌரவித்தார்கள் ISRO தலைமை விஞ்ஞானி சிவதாணுபிள்ளை அவர்கள் பாராட்டு பட்டயம் வழங்கி கௌரவித்தார். நிகழ்விற்கு காரணமாக இருந்த ரஷ்ய கான்ஸ்லேட் ஜெனரல் Oleg N. Avdeev அவர்களுக்கும், ரஷ்ய கலாச்சார மையத்தின் தங்கப்பன் அவர்களுக்கும் நன்றி.
சைக்கிள் கமலத்தின் தங்கை
திருவல்லிக்கேணிக்குள் ஒராயிரம் சந்துகள் இருக்கின்றன. எந்தச் சந்திற்குள் கவிஞர் ஞானக்கூத்தன் வீடிருக்கிறது என அவனால் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஒருமுறை பைகிராப்ட் சாலையிலுள்ள நடைபாதை புத்தகக் கடை ஒன்றில் தேடிக் கொண்டிருந்த போது அருகில் ஞானக்கூத்தன் ஒரு ஆங்கிலப்புத்தகத்தைத் தேடி எடுத்துக் கொண்டிருப்பதை நாதன் கவனித்தான். அவர் ஞானக்கூத்தன் தானா?. அவரது கவிதைகளை வாசித்தவன் என்ற முறையில் அவரோடு பேச விரும்பினான். ஆனால் எப்படிப் பேசுவது. எவ்விதம் தன்னை அறிமுகம் செய்து கொள்வது எனத் தெரியவில்லை. நாதனுக்குத் திக்குவாய். சிறுவயதிலிருந்தே …
திருவல்லிகேணி
புத்தகக் கண்காட்சியில் தற்செயலாக எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் மகன் சாரங்கன் அவர்களைச் சந்தித்தேன். அவரோடு பல ஆண்டுகளுக்கு முன்பாகப் பள்ளியில் படித்த நண்பர்கள் சிலரும் உடனிருந்தார்கள். சாரங்கன் தனது தந்தையைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்து வருகிறார். விளம்பரப் படங்கள். ஆவணப்படங்கள் எடுப்பதில் சாரங்கன் முன்னோடி கலைஞர். எந்தப் பள்ளியில் படித்தீர்கள் என்று கேட்டேன். திருவல்லிகேணி ஹிண்டு ஹைஸ்கூல் என்றார் சாரங்கன். எங்கள் பேச்சு திருவல்லிகேணியைப் பற்றித் திரும்பியது. சென்னையில் திருவல்லிகேணி மட்டும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்து …