டெல்லி பயணம்

சாகித்ய அகாதமி விருது வழங்கும் விழா ஜனவரி 29 டெல்லி காமினி அரங்கில் நடைபெறவுள்ளது. விருது பெறுவதற்காக ஜனவரி 28 டெல்லி செல்கிறேன். ஒரு வார காலம் டெல்லியில் தங்கியிருப்பேன். இந்த நாட்களில் சாகித்ய அகாதமி நடத்தும்  Face to Face உள்ளிட்ட ஐந்து நிகழ்ச்சிகள் உள்ளன. விரிவான தகவல்களை இரண்டு நாளில் வெளியிடுகிறேன்

நன்றி

இந்த வருடப் புத்தகக் கண்காட்சியில் துவக்க நாள் முதல் இறுதி நாள் வரை அத்தனை நாட்களும் கலந்து கொண்டேன். ஒவ்வொரு நாளும் புதிய புதிய அனுபவம். வித விதமான வாசகர்கள். புத்தகங்களின் கடலுக்குள்ளாக நாளெல்லாம் நீந்தியபடியே இருந்தது மிகுந்த மனவெழுச்சி தந்தது. ஊடகங்கள் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு தந்த முக்கியத்துவம் மிகுந்த பாராட்டிற்குரியது. அன்றாடம் ஸ்ருதி டிவி மூலம் நேரலையில் புத்தகக் கண்காட்சி குறித்த எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டேன். நிறைய நூல்களைப் பரிந்துரை செய்தேன். ஐம்பதுக்கும் …

நன்றி Read More »

நிழல் எழுத்தாளர்

ஒருவர் எழுதி அது மற்றவர் பெயரில் வெளியாகி புகழ்பெறுவது உலகெங்கும் தொடர்ந்து நடந்து வரும் இலக்கியத்திருட்டு. பிரபலமான சிலருக்காக இப்படி வேலை செய்து தரக்கூடிய கோஸ்ட் ரைட்டர்ஸ் உலகெங்கும் இருக்கிறார்கள். அந்த எழுத்தாளர் யார் என வெளியுலகம் அறியாது. அவர்களும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். பணத்திற்காக இப்படித் தன்னை மறைத்துக் கொண்டு எழுதுபவர்களும் உண்டு. கட்டுபாட்டு, மற்றும் தணிக்கை, மோசடி என்று பல காரணங்கள் இதற்கு உள்ளன. அப்படி ஒரு கதையைத் தான் சொல்கிறது கோலெட் …

நிழல் எழுத்தாளர் Read More »

அக்காளின் எலும்புகள்

கவிஞர்  வெய்யில் எனக்கு மிகவும் பிடித்தமான கவிஞர்.  சமகால நவீன தமிழ் கவிதையுலகில் தனித்துவமிக்க கவிதைகளை எழுதி வருபவர். அவரது சமீபத்தைய கவிதைகளின் தொகுப்பான அக்காளின் எலும்புகள் என்ற தொகுப்பை நேற்று வெளியிட்டேன்.  வடிவ ரீதியில் வெய்யில் கவிதைகள் புதிய அழகியலை உருவாக்குகின்றன . அருவெருப்பென நாம் ஒதுக்கியவற்றை பேருவுகையுடன் வெயில் ஆராதிக்கிறார். புத்துருவாக்கம் செய்கிறார். வெயிலின் கவிமொழி மரபும் நவீனமும் ஒன்றிணைந்து உருவானது. குற்றத்தின் நறுமணம் (மு.2011) – புதுஎழுத்து பதிப்பகம். கொஞ்சம் மனது வையுங்கள் …

அக்காளின் எலும்புகள் Read More »

கபீர் கவிதைகள்

புன்னகைக்கும் பிரபஞ்சம்’ – கபீர் கவிதைகள் | மொழிபெயர்ப்பாளர் செ.செங்கதிர் வெளியீட்டு விழா. எஸ்.ராமகிருஷ்ணன் உரை | புன்னகைக்கும் பிரபஞ்சம் – கபீர் கவிதைகள் | S.Ramakrishnan speech https://www.youtube.com/watch?v=p3t3DHAdadc&fbclid=IwAR1Qs6vqroA3AZTpgAQO3IskgQvA3LyXxCC9AaNP5aPqAObot8Tz-DVF9So நன்றி ஸ்ருதி டிவி

எனது பரிந்துரை

புத்தகக் கண்காட்சியில்  வாங்குவதற்கான எனது பரிந்துரை தனது 96 வது வயதில் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் எழுதியுள்ள புதிய நாவல். அவரது கையெழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது இந்த இவள் /கி.ராஜநாராயணன் ( புதிய நாவல்) காலச்சுவடு பதிப்பகம் விலை: ரூ.175 இம்பர் உலகம் /ஞானக்கூத்தன் கவிதைகள் ( மிகச்சிறந்த கவிதைகள்) நவீன விருட்சம் வெளியீடு அசோகமித்ரன் உரையாடல்கள் ( நேர்காணல்கள்) நவீன விருட்சம் சொற்கள் ( மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு கவிதைகள்) ழாக் பிரெவர் கவிதைகள் க்ரியா பதிப்பகம் மதுரம் …

எனது பரிந்துரை Read More »

ஆசி.கந்தராஜாவின் புனைவுக்கட்டுரைகள்

ஆசி. கந்தராஜா ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்துப் படைப்பாளி. சிறந்த கட்டுரையாசிரியர். சிறுகதை எழுத்தாளர். தாவரவியல் அறிஞர். பேராசிரியராகப் பணியாற்றுகிறார். சில மாதங்களுக்கு முன்பு இவர் சென்னை வந்திருந்த போது சந்தித்து உரையாடினேன். அற்புதமான மனிதர். இவரது இரண்டு நூல்களைச் சமீபத்தில் வாசித்தேன் முதலாவது செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய். இது ஆஸ்திரேலியாவில் யாழ்பாணத்து கத்திரிக்காய் ஒன்றை ஒட்டுமுறையில் விளைவிக்க முயன்றதை பற்றிய வேடிக்கையான நிகழ்வை விவரிக்கும் கட்டுரை. இதில் வரும் மாமி மறக்கமுடியாத கதாபாத்திரம். நினைவுகளில் ஊடாடிச் …

ஆசி.கந்தராஜாவின் புனைவுக்கட்டுரைகள் Read More »

கபீர் கவிதைகள்

செங்கதிர் அவர்களின் மொழியாக்கத்தில் கபீரின் கவிதைகள் வெளியாகின்றன. புன்னகைக்கும் பிரபஞ்சம் என்ற இந்நூலின் வெளியீட்டுவிழா ஜனவரி 11 மாலை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெறவுள்ளது

புத்தக் கண்காட்சி மூன்றாம் நாள்

இன்று புத்தகக் கண்காட்சியினுள் மிகப்பெரிய கூட்டம். விடுமுறை தினம் என்பதால் நிரம்பி வழிந்தது கண்காட்சி.  இத்தனை வாசகர்களை காண்பது மிகுந்த சந்தோஷம் தரக்கூடியது.  கடந்த இரண்டு நாட்களாக தொண்டைவலி. அதன் காரணமாகத் தொண்டைகட்டிக் கொண்டுவிட்டது.  சரியாகப் பேசமுடியாத சிரமம்.  என் அம்மா உங்கள் வாசகர், எனது அக்கா உங்களது வாசகர் என்று சொல்லி புத்தகம் வாங்கிப்போகும் இளைஞர்களை கண்டேன். ஒரு வாசகர் தன் அம்மாவிற்காக எனது புத்தகங்களில் 25யை ஒரே நேரத்தில் வாங்கிக் கொண்டு வந்து கையெழுத்து …

புத்தக் கண்காட்சி மூன்றாம் நாள் Read More »

புத்தகக் கண்காட்சி இரண்டாம் நாள்

தேசாந்திரி அரங்கு எண் 220, 221ல் இன்று நிறைய வாசகர்களைச் சந்தித்து உரையாடினேன்.  அமெரிக்காவிலிருந்து வந்திருந்த  நம்பி நாராயணன் அவர்களைச் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி தந்தது. புத்தகக் கண்காட்சிக்குள் வாகனத்தில் போய் வருவது  ராணுவ முகாம் ஒன்றுக்குள் போய் வருவது போல அத்தனை கஷ்டமாக உள்ளது. எத்தனை தடுப்புகள். எவ்வளவு கெடுபிடிகள். குழந்தைகள் பெரியவர்களை அலையவிடுகிறார்கள். இத்தனை மோசமான வாகன வழித்தடைகள் இதன் முன்பு கண்டதேயில்லை. அதிலும் பாதுகாப்பு பணியில் நியமிக்கபட்டுள்ளவர்கள் பார்வையாளர்களை நடத்துகிற விதம் அராஜகம்.  …

புத்தகக் கண்காட்சி இரண்டாம் நாள் Read More »